வெளியுறவுத்துறை அமைச்சகம்

நமது நாட்டின் புலம்பெயர்ந்தோர் நலம்

Posted On: 02 AUG 2017 5:57PM by PIB Chennai

இந்திய வம்சாவளியினர் நலனில் தம்மை இணைத்துக்கொண்டு, நமது அரசு ஒரு நிலைமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் வாழும்    வலிமை வாய்ந்த   3 கோடி இந்தியர்கள் நாட்டின் முன்னேற்றத்தில் விலைமதிப்பற்ற பங்கினை ஆற்றிவருகின்றனர். இவர்கள் இந்தியாவின் ஒரு வெற்றிகரமான, வளமான, செல்வாக்கு மிகுந்த சொத்து ஆவார்கள்.

பிரவாசி பாரதிய திவஸ் ( பிபிடி ) கூட்டம், பிரவாசி பாரதிய திவஸ் மாநாடுகள், பிராந்திய பிரவாசி பாரதிய திவஸ்கள், இளைஞர் பிரவாசி பாரதிய திவஸ், இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் திட்டம், புலம் பெயர்ந்து வாழும் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டம், பாரத் கோ ஜானியே வினா-விடைப் போட்டி ஆகியவை வெளிநாடு வாழ் இந்தியர்களின் உறவுகளைப் பேணவும், இந்தியாவுடன் நெருக்கத்தை உருவாக்கவும் உதவும் அரசின் ஒருசில முக்கியத் திட்டங்களாகும். முதலீடு செய்தல், அறப்பணி ஆற்றுதல், அறிவையும் நிபுணத்துவத்தையும் பரிமாறிக் கொள்ளல் உள்ளிட்டவை மூலம் வெளிநாட்டு இந்தியர்களின் முழுத்திறமையையும் வெளிக்கொணர்வதை நோக்கி அரசின் முயற்சிகள் அணிதிரட்டப்படுகின்றன,

தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொருளாதாரச் சீர்திருத்தம், முதன்மைத் திட்டங்களான ஸ்வச் பாரத் செயல்திட்டம், தூய கங்கைக்கான தேசியச் செயல்திட்டம், மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா ஆகியவை நமது இளைஞர்களுக்கு உகந்த சூழலை உருவாக்கித் தருகின்றன. இந்தியாவை வலிமையான, சுயசார்புடைய நாடாக உருவாக்குவதில் வெளிநாடு வாழ் இந்தியர்களை ஈடுபடச் செய்வதன் மூலம் நமது அறிவை வெளிநாட்டுக்குத் தருவதற்குப் பதிலாக, அங்கிருந்து பெற்றுக் கொள்ளும் வகையில் மாற்றவும் அரசு முயற்சித்து வருகிறது.

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் கூட ( பிஐஓ ) , இந்தியாவின் வெளிநாடு வாழ் குடிமகன் ( ஓசிஐ ) அட்டைத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தின்படி, ஓசிஐ  அட்டையை வைத்திருப்பவர்கள் குடியுரிமைச் சட்டம்,1955 இன் 7 பிரிவின் கீழ், இந்தியாவுக்கு வருவதற்கான பன்னோக்கு வாழ்நாள் நுழைவு விசாவைப் பெறலாம். அவர்கள் எவ்வளவு காலத்திற்கு இந்தியாவில் தங்கியிருப்பார்கள் என்ற பொருட்டின்றி ,எஃப்ஆர்ஆர்ஓவில் பதிவு செய்வதிலிருந்து விலக்கும் பெறலாம்.

*****

வெளிவிவகாரத்துறை இணையமைச்சர் ஜெனரல் ( டாக்டர் ) வி.கே.சிங்      ( ஓய்வு ) மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவல் அளிக்கப்பட்டது.



(Release ID: 1505326) Visitor Counter : 145


Read this release in: English