பிரதமர் அலுவலகம்

வத்நகருக்கு பிரதமர் விஜயம்; தீவிரப்படுத்தப்பட்ட இந்திரதனுஷ் இயக்கத்தை தொடங்கிவைத்து, பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்

Posted On: 08 OCT 2017 7:32PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, தனது சொந்த ஊரான வத்நகருக்கு, பிரதமராக பதவியேற்ற பிறகு, முதல் முறையாக இன்று சென்றார்.

நகரத்தில் வசிக்கும் மக்கள், வீதிகளில் குழுமியிருந்து பிரதமரை வரவேற்றனர். ஹத்கேஸ்வரர் கோயிலில் பிரதமர் வழிபாடு நடத்தினார். குழந்தைப் பருவத்தில், தான் படித்த பள்ளிக்கு சென்று, அங்கு சிறிதுநேரம் பார்வையிட்டார்.

வத்நகரில் உள்ள ஜிமெர்ஸ் (குஜராத் மருத்துவக் கல்வி மற்றும் ஆய்வு சங்கம்) மருத்துவக் கல்லூரிக்கு சென்ற பிரதமர், அதனை நாட்டுக்கு அர்ப்பணிப்பதன் அடையாளமாக கல்வெட்டைத் திறந்துவைத்தார். மேலும், அங்கு படிக்கும் மாணவர்களுடன் சிறிதுநேரம் கலந்துரையாடினார்.

பொதுக் கூட்டத்திலும் பிரதமர் கலந்துகொண்டார். அப்போது, அனைவருக்கும் சொட்டு மருந்து வழங்கும் இலக்கை நிறைவேற்றும் பணிகளை வேகப்படுத்துவதற்காக விரிவுபடுத்தப்பட்ட இந்திராதனுஷ் இயக்கத்தை தொடங்கிவைத்தார். இது நகரப் பகுதிகள் மற்றும் குறைந்த அளவில் சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ள பகுதிகளில் தீவிர கவனம் செலுத்த வழிவகுக்கும்.

சுகாதாரப் பணியாளர்களுக்கு மின்னணு டேப்லட்களை பிரதமர் விநியோகம் செய்தார். அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்களின் (ASHAs) செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக புத்தாக்க செல்போன் செயலியான இம்டெக்கோ-வை (ImTeCHO) அறிமுகப்படுத்துவதன் அடையாளமாக மின்னணு டேப்லட்களை பிரதமர் வழங்கினார். சில வளர்ச்சிப் பணிகளையும் அவர் தொடங்கிவைத்தார்.

அங்கு கூடியிருந்த ஆர்வலர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், தனது சொந்த ஊருக்கு திரும்ப வருவதும், இதுபோன்ற சிறப்பான வரவேற்பைப் பெறுவதும் தனிச் சிறப்பு வாய்ந்தது என்றார். நான் இன்று இவ்வாறு இருப்பதற்கு, வத்நகரில் உள்ள உங்கள் அனைவரிடமும், இந்த மண்ணிலும் கற்றுக் கொண்ட மதிப்புகளே காரணம் என்று பிரதமர் தெரிவித்தார்.

உங்களது ஆசிகளுடன் நான் திரும்பச் செல்கிறேன். நாட்டுக்காக மிகவும் தீவிரமாக பணியாற்றுவேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று, வத்நகர் பகுதி மக்களிடம் பிரதமர் கூறினார்.

சுகாதாரத் துறை தொடர்பான, குறிப்பாக விரிவுபடுத்தப்பட்ட இந்திராதனுஷ் இயக்கத்தை தொடங்கிவைப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததற்காக பிரதமர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஸ்டென்ட்-களின் விலையை அரசு எவ்வாறு குறைத்தது என்று அவர் குறிப்பிட்டார். ஏழைகளுக்கு ஏற்ற வகையில், சுகாதார சேவைகள் கிடைக்கச் செய்வதற்காக அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார். மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடியதை குறிப்பிட்ட பிரதமர், சமூகத்தில் மக்களுக்கு சேவையாற்றுவதற்காக ஏராளமான மருத்துவர்கள் நமக்கு தேவை என்றார்.
 

***



(Release ID: 1505325) Visitor Counter : 120


Read this release in: English