அணுசக்தி அமைச்சகம்
இந்திய அணுசக்தித் துறையில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஈடுபாடு
Posted On:
02 AUG 2017 3:59PM by PIB Chennai
வெஸ்டிங் ஹவுஸ் எலக்ட்ரிக் கம்பெனி ( டபிள்யூஇசி ) மற்றும் ஜிஇ – ஹிட்டாச்சி, அமெரிக்கா, எலக்ட்ரிசைட் டி ஃப்ரான்ஸ் ( இடிஎஃப் ), ஃப்ரான்ஸ் அண்ட் ரோஸாட்டோம், ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு நிறுவனங்கள் நமது நாட்டின் அணுசக்தித் திட்டங்களில் தொழில்நுட்பப் பங்குதாரர்கள், பொருட்களை வழங்குவோர், ஒப்பந்தக்காரர், சேவையளிப்போர் முதலிய பல்வேறு நிலைகளில் பங்கெடுக்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.
அரசின் நேரடி முதலீட்டுக் கொள்கையின் படி, அணுசக்தித் துறையில் வெளிநாடுகள் முதலீடு செய்ய அனுமதி கிடையாது. வெளிநாட்டுத் தொழில் ஒத்துழைப்புடன், சமவாய்ப்பு மற்றும் கடன் இணைந்த விதத்தில் அணு சக்தித் திட்டங்கள் அமைக்கப்பட உள்ளன. நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ( என்பிசிஐஎல் ) நிறுவனத்திடமிருந்து உள்நாட்டு வளங்களைத் திரட்டி, சமப் பங்குடன் என்பிசிஐஎல் – லுக்கும் பிற மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இடையில் அரசின் நிதிநிலை ஆதரவுடன் இணைந்த முயற்சியாக இது மேற்கொள்ளப்படலாம். ஆயினும், வெளிநாட்டு நிறுவனங்கள் அணு சக்தித் திட்டங்களுக்கான பொருள் வழங்கும் சங்கிலியில் முதலீடு செய்யலாம்.
தற்போதைய அணு சக்திக் கட்டணமானது, பழைய அணு சக்தி நிலையமான மஹாராஷ்டிராவின் தாராப்பூரிலுள்ள , தாராப்பூர் அணு சக்தி நிலையம் ( டிஏபிஎஸ் ) 1 & 2 வில் யூனிட் ஒன்றுக்கு ரூ. 1.07 முதல் புதிய அணு சக்தி நிலையமான தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணு சக்தி நிலையம் – ( கேகேஎன்பிபி ) 1 & 2 வில் ரூ. 4.10 வரை உள்ளது. அணு சக்திக் கட்டணமானது அந்தப் பகுதியில் ( பிற தொழில்நுட்பங்களின் அடிப்படையில் ) அமைந்துள்ள பிற மின் உற்பத்தி நிலையங்களின் கட்டணங்களுடன் ஒப்பிடத்தக்க வகையில் உள்ளது. இரட்டை அணு சக்தி நிலையங்கள் ஒவ்வொன்றும் பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் உள்ளிட்ட 850 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும். மேலும் பொருள் வழங்குநர்கள், ஒப்பந்தக்காரர்கள், சேவையளிப்போர் முதலிய ஆயிரக்கணக்கான பேருக்கு மறைமுகமான வேலைவாய்ப்பையும் உருவாக்கித் தரும். அதன் விளைவாக, பொருளாதாரச் செயல்பாட்டில் உயர்வு ஏற்பட்டு, அது பல்வேறு வியாபார வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறது. இந்த வாய்ப்புகள் மேலும் பல வேலைவாய்ப்புகளை உண்டாக்கும்.
வடகிழக்கு மாகாண மேம்பாடு ( டிஓஎன்இஆர் ) , எம்ஓஎஸ் பிஎம்ஓ , பணியாளர் நியமனம், பொதுமக்கள் குறைதீர்ப்பு & ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை ஆகியவற்றின் இணையமைச்சர் ( தனிப் பொறுப்பு ) டாக்டர் ஜிதேந்திர சிங் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலை வெளியிட்டார்.
*****
(Release ID: 1505324)
Visitor Counter : 193