பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

மாயமான குழந்தைகளை கண்டுபிடிக்க மத்திய மகளில் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை உரவாக்கிய தரமான செயல்பாட்டு நடைமுறை திட்டம்

Posted On: 04 AUG 2017 4:16PM by PIB Chennai

மத்திய மகளிர் நலம் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க தரமான செயல்பாட்டு நடைமுறை திட்டம் ஒன்றை (எஸ்.ஓ.பி.) ஐ உருவாக்கி உள்ளது. இளம்சிறார்கள் நீதிபரிபாலன அமைப்பு (குழந்தைகள் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு) மாதிரி விதி 2016ன் கீழ் இதே அமைப்பின் 2015ம் ஆண்டு விதியின் ஒத்திசைவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்.ஓ.பி.யின் முக்கிய அம்சமே காணமால் போன குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் மறுவாழ்வுக்கு உதவிசெய்வதாகும். இதற்கான பணிகளில் ஈடுபடும் காவல்துறை,குழந்தைகள் நல கமிட்டிகள், இளஞ்சிறார் நீதிபரிபாலன அமைப்பு, ஆகியவற்றின் பங்களிப்புகளையும் இது விளக்குகிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த சட்டம் பயன்படுத்தப்படும். குழந்தைகள் மாயமானால் அவர்களை கண்டுபிடிக்க ஒரே சீரான முறையில் நடவடிக்கைகள் இருக்கும். அதுபோல மாயமான குழந்தைகளை மீட்கும் பொறுப்பில் உள்ள அதிகாரஅமைப்புகள், குடும்பத்த்தை கண்டுபிடித்தல், மறுவாழ்வு, மீட்டிணைப்பு, சமூக ஒருங்கிணைப்பு மற்றும் தடுப்பு பணிகள் ஆகியவற்றிலும் தரமான செயல்பாட்டு நடைமுறைகளை இது வகுத்தளிக்கிறது.

இந்த தகவலை மத்திய மகளிர் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி கிருஷ்ணா ராஜ் மக்களவையில் இன்று தெரிவித்தார்.

******



(Release ID: 1505313) Visitor Counter : 96


Read this release in: English