ரெயில்வே அமைச்சகம்
ரயில் பயணிகளுக்கான சேவையையும் வசதியையும் மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள்
Posted On:
04 AUG 2017 5:17PM by PIB Chennai
இந்திய ரயில்வேயானது, பயணிகளின் வசதிகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. ரயில் நிலையங்களில் அளிக்கப்படும் மக்கள் பயன்பாடுகளிலும் வசதிகளிலும் வெளிப்படையான, தரமான முன்னேற்றத்தை இன்றைய பயணிகள் எதிர்பார்க்கிறார்கள். பயணிகளின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், சிறிய நகரங்களிலும் ஊர்களிலும் அமைந்துள்ள ரயில் நிலையங்கள் உட்பட அனைத்து நிலையங்களிலும் மேம்படுத்தப்பட்ட வசதிகளை அமைத்துத் தரும் அனைத்து முயற்சிகளையும் இந்திய ரயில்வே செய்துவருகிறது.
இந்திய ரயில்வே 8,000 நிலையங்களைக் கொண்டுள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை அமைத்துத்தருவதில் ரயில்வே எப்போதுமே முழுமுயற்சி எடுத்துவருகிறது. புதிய நிலையங்கள் நிர்மாணிக்கப்படும்போது, எதிர்பார்க்கப்படும் போக்குவரத்தின் அளவின் அடிப்படையில் சில வசதிகள் செய்துதரப்படுகின்றன.. நிலையங்களுக்கு வந்துபோகும் பயணிகளின் எண்ணிக்கை உயர்வைப் பொறுத்து, உணரப்படும் தேவையின் அடிப்படையில், பயணிகளின் எதிர்பார்ப்பு மற்றும் நிதி ஆதாரம் ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு, அவ்வப்போது மேலும் வசதிகள் செய்துதரப்படுகின்றன.
பயணிகளுக்கான சேவைகளையும் வசதிகளையும் மேம்படுத்த இந்திய ரயில்வே அண்மைக்காலத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, அவற்றுள் சில :
ரயில் நிலையங்களில் :
- நடைமேடைகளுக்கு ஊடாகப் பயணிகள் வந்துசெல்ல ஏதுவாக, நிலையங்களில் மின்தூக்கிகள், இயங்கும் படிக்கட்டுக்கள்.
- ரயில் பயணத்திற்கு முன்பும் பின்பும் பயணிகளைக் – குறிப்பாக மூத்த குடிமக்களையும், நடக்க முடியாதவர்களையும் – சுமந்துசெல்வதற்கான பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்கள்.
சக்கர நாற்காலியின் உதவி தேவைப்படும் பயணிகளுக்காக ‘ யாத்ரி மித்ரா சேவா ‘.
- பயணத்தின் இடையில் இளைப்பாறுவதற்காக நன்கு அமைக்கப்பட்ட ஓய்வு அறைகள், காத்திருப்போர் கூடங்கள் மற்றும் உயர்தர ஓய்விடங்கள்.
- இந்திய ரயில்வேயின் 127 முக்கிய நிலையங்களில் இணையத் தொடர்பு ( வை – ஃபை ) வசதி.
முன்பதிவு மற்றும் பயணத்தில் :
- காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் இடவசதி கொண்ட மாற்று ரயிலுக்கு மாறிச்செல்ல ஏதுவான ‘விகால்ப்’ ( விஐகேஏஎல்பி ) மாற்று ரயில் இடவசதித் திட்டத்தின் அறிமுகம்.
- உடல் ஊனமுற்ற பயணிகள் பயணச்சீட்டுக்களை இணையத்தில் முன்பதிவு செய்வதற்கான வசதி அளித்தல்.
- காகிதமற்ற முறையில் கைபேசி மூலம் முன்பதிவற்ற பயணச்சீட்டுக்களைப் பதிவு செய்யும் வசதி.
- ரயில் ரத்தாகிவிட்டால், உறுதியான அல்லது ரத்தைத் தொடர்ந்து தானியங்கி முறையில் முன்பதிவு ( ஆர் ஏ சி ) அல்லது மின் – பயணச்சீட்டுக்கள் ஆகியவற்றுக்கான கட்டணத்தைத் திரும்பப் பெறும் வசதி.
- மூத்த குடிமக்களுக்கான ஒதுக்கீடு அதைப்போன்று உடல் ஊனமுற்றவர்களுக்கான ஒதுக்கீடு ஆகியவற்றை உயர்த்துதல்.
- ரயில் புறப்படுவதற்கான நேரத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பாகத் தானியங்கி முறையில் முன்பதிவு அட்டவணையைத் தயாரிக்கும் வகையில் முறையை உருவாக்குதல்.
- இணையம் மூலம் முதல் முன்பதிவு அட்டவணை , அதைப்போன்று ஏதாவதொரு கணினி மூலமான பயணிகள் முன்பதிவு முறை
( பிஆர்எஸ்) கவுண்டரில் உருவாக்கப்பட்டப் பிறகு, இரண்டாவது முன்பதிவு அட்டவணையை உருவாக்கும்வரை இருக்கும் இடவசதியைப் பதிவு செய்யும் வசதி.
இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் ( ஐஆர் சிடிசி ) இணையதளத்தின் மூலம் மின் – பயணச்சீட்டுக்களைப் பதிவு செய்ய அனைத்து சர்வதேச கிரெடிட் / டெபிட் அட்டைகளை ஏற்பது.
- உறுதியான / ஆர்ஏசி / காத்திருப்போர் பட்டியலிலுள்ள பிஆர்எஸ் கவுண்டர் பயணச்சீட்டுக்களை வைத்திருக்கும் பயணிகள் ஐஆர்சிடிசி இணையத்தளத்தின் மூலம் ( irctc.co.in ) அவற்றை ரத்து செய்யலாம் அல்லது 139 பிஆர்எஸ் கவுண்டர்களில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அசல் பயணச்சீட்டுக்களை ஒப்படைத்து தொகையைத் திரும்பப் பெறலாம்.
- ஒப்பீட்டளவில் சிறிய நிலையங்களில் பிஆர்எஸ் பயணச்சீட்டுக்களை ரத்து செய்ய ஏதுவாக, முன்பதிவற்ற பயணச்சீட்டுப் பதிவு முறை (யூடிஎஸ்) மற்றும் பிஆர்எஸ் கவுண்டர்கள் ( பிஆர்எஸ் பதிவு வசதி எங்குள்ளதோ அங்கு ) தொகையைத் திரும்பத் தருவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட கவுண்டர்கள்
ஒன்றில் பிஆர்எஸ் கவுண்டர்கள் / நடப்பு கவுண்டர்கள் ஆகியவற்றின் வேலைநேரம் முடிந்த பிறகும் பணம் தரப்படும். குறித்த நேரத்திற்கு 24 மணி நேரத்திற்குள்ளாகச் செல்லும் ரயில்களுக்கான பிஆர்எஸ் கவுண்டர் பயணச்சீட்டுக்களைப் பொறுத்தவரையில் இந்த வசதி உள்ளது
- கணினி மயமாக்கப்பட்ட பயணிகள் முன்பதிவுமுறை ( பிஆர்எஸ் ) மற்றும் முன்பதிவற்ற பயணச்சீட்டுமுறை ( யூடிஎஸ் ) முனையங்களின் உருவாக்கம், இயக்கம் ஆகியவற்றுக்காகப் பொது மற்றும் தனியார் கூட்டிணைவின் மூலம் பயணச்சீட்டுக்களைத் தருவதற்காக யாத்ரி டிக்கெட் சுவிதா கேந்திரங்களை நிறுவுதல்.
- கொல்கத்தா, மும்பை, சென்னை, செகந்திராபாத் மற்றும் டெல்லி – பால்வால், டெல்லி – காஸியாபாத் ஆகிய வட பிராந்திய பிரிவுகள் ஆகிய
இந்திய ரயில்வேயின் புறநகர்ப் பிரிவுகளில் கைபேசி மூலம் நடைமேடைச் சீட்டுக்கள் மற்றும் சீசன் டிக்கெட்டுக்கள் உள்ளிட்ட முன்பதிவற்ற சீட்டுக்களைப் பதிவு செய்யும் வசதி.
- புதுடெல்லி மற்றும் பிற 23 நிலையங்களில் ஐஆர்சிடிசி இணையதளத்தின் மூலம் சக்கரநாற்காலிகளை முன்பதிவு செய்யும் வசதி கொண்ட உபசரிப்புச் சேவைகளைத் தொடங்குதல்.
- முன்பதிவற்ற பயணச்சீட்டுகளை வாங்குவதற்கு ஏதுவாக, தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களை நிறுவுதல்.
- வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காக வெளிநாட்டு டெபிட் / கிரெடிட் அட்டைகளுக்கு மின் – டிக்கெட்டு வழங்கும் வசதியை விரிவு செய்தல்.
- 488 ரயில் நிலையங்களுக்கும் மேல் ஓய்வறைகளை இணைய முறையில் முன்பதிவு செய்வதைச் செயல்படுத்துதல்.
- ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிகள் உள்ளனவா என்று மேற்பார்வையிட்டுப் பராமரித்தல் மற்றும் குறைபாடுகள் தென்படும்போதெல்லாம் அவற்றைப் போக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றிற்காக அலுவலர்கள், பணி முன்னேற்றக்குழுவினர் ( எஸ்ஐஜி ),பயணிகள் வசதிக் குழுவினர் ( பிஏசி), பயணிகள் சேவைக்குழுவினர் ஆகியோரால் முறையான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்தப் பத்திரிகைச் செய்தி 04.08.2017 ( வெள்ளிக்கிழமை ) அன்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ரயில்வே துறை இணையமைச்சர் திரு. ராஜன் கொஹெய்ன் எழுத்துப்பூர்வமாக அளித்த தகவலை அடிப்படையாகக் கொண்டது.
*****
(Release ID: 1505312)
Visitor Counter : 140