அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இஸ்ரோ மற்றும் சி.எஸ்.ஐ.ஆர்..- என்.பி.எல் இடையே ‘நேரம் மற்றும்அதிர்வெண்கண்டறிதல் சேவைகள் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.

Posted On: 04 AUG 2017 5:11PM by PIB Chennai

விண்வெளித்துறையின் கீழ் இயங்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் அதிர்வெண் கண்டறிதல் மற்றும் கட்டளை கட்டமைப்பு (இஸ்டிராக்)  மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் இந்திய அறிவியல் மற்றும்  தொழிற்சாலைகள் ஆராய்ச்சி மையம் (சிஎஸ்ஐஆர்) –ன் தேசிய இயற்பியல் ஆய்வகம் (என்.பி.எல்) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இஸ்ரோவின் இஸ்டிராக் அமைப்பின் தலைவர் ஸ்ரீனிவாசன் மற்றும் சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பின்  என்.பி.எல். நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் டி.கே. அஸ்வல் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.  மத்திய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல், வனம், சுற்றுச்சூழல், பருவநிலைமாற்றம் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாடு, பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொது மக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது, சி.எஸ்.ஐ.ஆர். இயக்குனர் ஜெனரல் கிரிஷ் ஷானி, உள்ளிட்ட மூத்த அதிகாரிகள்  உடன் இருந்தனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் நேரம் மற்றும்அதிர்வெண்கண்டறிதல் சேவைகள் இஸ்ரோ – சி.எஸ்.ஐ.ஆர்- என்.பி.எல். இடையே நடைபெறும்

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமும் தேவையும் வருமாறு-

சி.எஸ்.ஐ.ஆர்.ன், என்.பி.எல். அமைப்பின் தேசிய நேர அளவீட்டின் படி நேரம் மற்றும்அதிர்வெண்கண்டறிதல் சேவைகள் – இஸ்டிராக்கின் ஐ.ஆர்.என்.டபிள்யூ.டி-1 மற்றும் ஐ.ஆர்.என்.டபிள்யூ.டி-2 விற்கு  இருவழி செயற்கைகோள் நேரம் மற்றும் அதிர்வெண் பரிமாற்றம் (டி,டபிள்யூ.எஸ்.டி.எப்.டி.) செய்யப்படும்.

சி.எஸ்.ஐ.ஆர் என்.பி.எல். தேசிய நேர அளவீட்டீன் படி நேரம்  மற்றும் அதிர்வெண் கண்டறிதல் சேவைகள்  இஸ்ரோவின் இஸ்டிராக்கிற்கு  ஐ.ஆர்.என்.டபிள்யூ.டி-1 மற்றும் ஐ.ஆர்.என்.டபிள்யூ.டி-2விற்கு  ஜி.என்.எஸ்.எஸ்.சி.வி மூலம் வழங்கப்படும்.

இந்நிறுவனங்களுக்கு இடையிலான நேர நிர்ணய அளவீடுகளின் உண்மைத்தன்மை மற்றும் துல்லியம் ஐ.எஸ்.ஓ/ஐ.இ.சி.17025 ன் படி ஆண்டு தணிக்கை செய்யப்படும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அது கையெழுத்தாகும் நாள் முதல் (இன்று) ஐந்தாண்டுகள் அமலில் இருக்கும். மேலும் சி.எஸ்.ஐ.ஆர்- என்.பி.எல். மற்றும் இஸ்டிராக் – இஸ்ரோ ஆகிய இரு நிறுவனங்களும் விரும்பினால் பரஸ்பரம் புரிந்துணவுர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன்  என்.பி.எல். மற்றும் இஸ்ரோ ஆகிய இருபெரும் அறிவியல் நிறுவனங்கள் இத்தகைய மகத்தான பங்களிப்புக்கு வகைசெய்யும் ஒப்பந்தம் செய்வது பாராட்டுக்கு உரியது என்றார். அடையாள சின்னமாக விளங்கும் இந்த நிகழ்வுக்கு காரணமான   நமது விஞ்ஞானிகளின்  பங்களிப்பு நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். பிரதமர் நரேந்திரமோடியும், இதுபோன்ற அறிவியல் சாதனைகளை செய்யும் விஞ்ஞானிகளை பாராட்டுவார். என்.பி.எல்  இந்தியாவின் ஐந்தில் ஒரு அணு கடிகாரம் ஆகும். நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் இத்தகைய ஆய்வகங்களை பார்க்கவும் அறிந்துகொள்ளவும் மக்கள் முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இஸ்ரோவுக்கு மிகவும் முக்கியமானதாகும் என்றார். இஸ்ரோவின் திட்டங்களுக்கு ஒத்திசைவு மிகவும் அவசியம். இஸ்ரோவின் எண்ணற்ற சாதனைகளை பட்டியலிட்ட அமைச்சர், விண்வெளி தொழில்நுட்பத்தின் பல்வேறு பிரிவுகளில் நாம் நமது பரவு எல்லையை விரிவாக்கம் செய்திருப்பது முக்கியமான சாதனையாகும் என்றும் கூறினார்.  அறிவியல் வளர்ச்சி மற்றும்  இதுபோன்ற வளர்ச்சிகளில் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்திவருகிறார். அண்மை காலங்களில் இஸ்ரோ பல்வேறு சாதனை மைல்கல்களை கடந்துள்ளது அதாவது  அதிக எண்ணிக்கையில் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது. செவ்வாய் கிரக ஆராய்ச்சி விண்கலம் ஆயிரம் நாட்களை கடந்தது. தெற்காசியாவுக்கு என்று பிரத்யேக செயற்கைகோளை செலுத்தியது ஆகியவை சாதனை பட்டியல் ஆகும்.  விண்வெளி தொழில்நுட்பத்தின் சமூக பயன்பாடு தொடர்பாக இஸ்ரோ ஏற்கெனவே அரசின் பல்வேறு துறைகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதுபோன்று ஜியோ – மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் தொடர்பாக மத்திய வேளாண் அமைச்சகத்துடன் இஸ்ரோ உடன்பாடு செய்துள்ளது. இதுபோன்று ரயில்வே கடவுகளில் பாதுகாப்புக்காக ரயில்வேதுறையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இது தவிர நவீன நகரங்கள் திட்டம் எனப்படும் ஸ்மார்ட் சிட்டியை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளிலும் இஸ்ரோ தனது பங்களிப்பை செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.



(Release ID: 1505303) Visitor Counter : 326


Read this release in: English