பிரதமர் அலுவலகம்

புதுதில்லியில் நடைபெற்ற இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்தின் 14வது உச்சிமாநாட்டின்போது வெளியிடப்பட்ட இந்திய-ஐரோப்பிய ஒன்றிய கூட்டறிக்கை (2017, அக்டோபர், 06)

Posted On: 06 OCT 2017 7:23PM by PIB Chennai
  1. இந்திய-ஐரோப்பிய ஒன்றியத்தின் 14வது உச்சிமாநாடு 2017, அக்டோபர், 06 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. இந்தியாவின் சார்பாக பிரதமர் திரு.நரேந்திர மோடி பங்கேற்றார். ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக ஐரோப்பிய சபையின் தலைவர், திரு. டோனால்ட் டஸ்க் மற்றும் ஐரோப்பிய ஆணையததின் தலைவர் திரு.ஜீன் களாட் ஜங்கர் பங்கேற்றனர்.

 

  1. இந்திய-ஐரோப்பிய ஒன்றிய மூலோபாய கூட்டின் கீழான பலதரப்பட்ட கூட்டுறவுகள் குறித்து தலைவர்கள் ஆய்வு செய்தனர். இந்திய-ஐரோப்பிய ஒன்றியம் இயற்கையான பங்குதாரர்கள் என்பதை அங்கீகரித்த தலைவர்கள், பகிரப்பட்ட கொள்கைகள் மற்றும் ஜனநாயகத்தின் மாண்புகள், சுதந்திரம, சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகளை மதித்தல் மற்றும் மாநிலங்களின் ஒருமைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலான இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய மூலோபாய கூட்டை மேலும் வளர்க்கவும், வலுப்படுத்தவும் உறுதிபூண்டனர்.

 

  1. 13வது இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டின்போது அங்கீகரிக்கப்பட்ட இருநாடுகளின் கூட்டுறவிற்கான செயல்திட்டமான, 2020 செயலுக்கான இந்திய-ஐரோப்பிய ஒன்றிய கூட்டப்பொருள் செயல்பாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து தலைவர்கள் திருப்தி தெரிவித்தனர்.

 

  1. விளைவை விளைவிக்கக்கூடிய மற்றும் இருதரப்பும் நன்மையளிக்கும் வகையில் தங்களது வணிக கூட்டுறவினை வளர்த்தல், இரு வழிகளில் முதலீடுகளை அதிகரித்தல், பருவகாலநிலை மாற்றம், குடியேற்றம் மற்றும் அகதிகள் பிரச்சினை உள்ளிட்ட உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சினைகள் மீது கலந்துரையாடல் மற்றும் பணியாற்றல் ஆகியவற்றின் மூலம் இந்திய-ஐரோப்பிய ஒன்றிய மூலோபாய கூட்டை மேலும் வலுப்படுத்தவும், இத்துறைகளில் இருதரப்பு மற்றும் பலதரப்பு கூட்டுறவை மேலும் வலுப்படுத்தவும் தலைவர்கள் உறுதி ஏற்றனர்.

 

  1. பல்வேறு துறைகளில், குறிப்பாக பருவநிலை செயல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை ஆகியவற்றில் ஐரோப்பிய முதலீட்டு வங்கி இந்தியாவில் வலுவாக பங்கேற்றுள்ளதை தலைவர்கள் பாராட்டினர்.

 

  1. இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய கூட்டுறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை அதிகரிக்கும் வகையில் உயர்மட்ட அளவிலான தொடர்புகளை தொடர்ந்து பராமரித்து வருவதன் அவசியத்தை தலைவர்கள் கோடிட்டு காட்டினர். 2017, ஏப்ரல், 21 அன்று புதுதில்லியில் இந்திய-ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சக கூட்டத்தில் நன்மையளிக்கும் வகையிலான வெளிப்பாட்டை அவர்கள் குறிப்பிட்டனர். வெளியுறவு கொள்கை மற்றும் பாதுகாப்பு கூட்டுறவு – பாதுகாப்பிற்கான கூட்டுதாரர்கள்.

 

  1. ஒப்புக்கொள்ளப்பட்ட பன்னாட்டு நடைமுறைகள், உலக அமைதி மற்றும் நிலைத்தன்மை மற்றும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள மற்றும் பல்நோக்கு உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ளடக்கிய முன்னேற்றம் மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் சட்டங்களின் அடிப்படையிலான பன்னாட்டு உத்தரவை மதிக்கும் அனைவரோடும் இணைந்து பணியாற்ற உலகின் மிகப்பெரிய ஜனநாயகங்களான இந்திய-ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுள்ள ஆவலை தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். சமகால உலகளாவிய பிரச்சினைகள் மீது வளர்ந்து வரும் ஒருமுகத்தன்மை வரவேற்ற அவர்கள், அனைத்து பல்நோக்கு துறைகளில் இந்திய-ஐரோப்பிய ஒன்றிய கூட்டுறவை வளர்க்கவும் ஒப்புக்கொண்டனர். மேலும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு, மற்றும் திறந்த மற்றும் உள்ளடக்கிய சர்வதேச ஆணையை பாதுகாப்பதற்கான தங்களது பொது பொறுப்பினை அவர்கள் அங்கீகரித்தனர்.

 

  1. மோதலை தடுத்தல் மற்றும் நிலைத்தன்மைக்கான அமைதி ஆகியவற்றின் அடிப்படையான அம்சங்களான பாதுகாப்பு மற்றும் வளத்தை ஊக்குவித்தல், ஆயுத குறைப்பு செய்தல் போன்றவற்றில் தங்களது பங்களிப்பை உறுதி செய்த தலைவர்கள், பயங்கரவாதம் பிரச்சினைக்கு தீர்வு காணவும், உலகத்திற்கு பொதுவான -  கடல் வழிகள், இணைய விண்வெளி மற்றும் இதர விண்வெளி – போன்றவற்றின் பாதுகாப்பை பாதுகாத்தல் போன்றவற்றுக்கு உலக சமுதாயத்தின் ஒருமைப்பாடு தேவை என்பதை ஒப்புக்கொண்டனர். புதுதில்லியில் 2017, ஆகஸ்ட், 25 அன்று புதுதில்லியில் நடைபெற்ற, அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறையிலான உறவை வளர்க்கும் தளமான – 5வது இந்திய-ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கை மற்றும் பாதுகாப்பு ஆலோசனை கூட்டங்களை அவர்கள் வரவேற்றனர்.

 

  1. பொருளாதார முன்னேற்றம் மற்றும் கண்டுபிடிப்புக்கு உதவுவதுடன், திறந்த, இலவச, பாதுகாப்பான, நிலையான, அமைதியான மற்றும் அணுகத்தக்க இணையவெளிக்கான தங்களது உறுதிப்பாட்டை தலைவர்கள் மீண்டும் உறுதி செய்தனர். குறிப்பாக, இணையவெளிக்கு சர்வதேச சட்டம் சட்டம் பொருந்தும் என்பதையும், இணையவெளிக்கு சர்வதேச சட்டத்தை பொருத்துதல் மற்றும் மாநிலங்களின் பொறுப்பான நடவடிக்கைக்கு வழிமுறைகள் ஏற்படுத்துதல் குறித்து தொடர் மற்றும் ஆழமான கலந்துரையாடல்கள் தேவை என்பதையும் தலைவர்கள் உறுதி செய்தனர். புதுதில்லியில் நவம்பர் 23-24 ஆகிய தேதிகளில் இணையவெளிக்கான 5வது சர்வதேச மாநாடு நடைபெறுவதை தலைவர்கள் வரவேற்றனர். இருநாடுகளின் இணைய பேச்சுவார்த்தை, தற்போதுள்ள மற்றும் வருங்கால கூட்டுறவிற்கு வலுவான அஸ்திவாரம் அமைக்கும் என்பதை குறிப்பிட்ட தலைவர்கள், இந்த வருடம் ஆகஸ்ட் 29 அன்று புதுதில்லியில் அதன் இறுதி கூட்டம் நடைபெற்றதையும், அடுத்த இந்திய-ஐரோப்பிய ஒன்றியக் கூட்டம் 2018-ம் ஆண்டு புருஸெல்சில் நடைபெற இருப்பதையும் வரவேற்றனர்.

 

  1. பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தினால் உலகிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து தங்களது கவலைகளை தெரிவித்த தலைவர்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் நடைபெற்ற பகரவந்த தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். தங்களது மூலோபாய மற்றும் பாதுகாப்பு கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டுறவிற்கான கூட்டு அறிக்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டதுடன், விரிவான அணுகுமுறையின் அடிப்படையில் பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளை எதிர்க்கும் தனது கடுமையான உறுதியை வெளிப்படுத்தினர். தொடர் பன்னாட்டு அரங்கு மற்றும் இருதரப்பு ஆலோசனைகள் மூலம் கூட்டுறவை மேம்படுத்த தலைவர்கள் உறுதிபூண்டனர். இவ்வகையில், புதுதில்லியில் 2017, ஆகஸ்ட், 30 அன்று நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய-ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தை கூட்டம் மற்றும் இரு நாடுகளும் கூட்டாக வாய்ப்புகளை கண்டறிவதில் உறுதிப்பாடு, இணையவெளி மூலமான தீவிரவாதத்தை எதிர்கொள்தல் உள்ளிட்டவை குறித்து பலவழிகளிலும், தகவல், சிறந்த நடைமுறைகள் பரிமாறிக்கொள்வதுடன், பயிற்சி மற்றும் பட்டறைகள் போன்ற திறன்வளர் நடவடிக்கைகள் ஈடுபடச் செய்தல் ஆகியவற்றை வரவேற்றனர். ஐ.நா மற்றும் நிதி செயல் பணிக் குழுவிற்குள்ளான (எப்.ஏ.டி.எப்.) கூட்டுறவை அதிகரிக்கச் செய்வதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

 

  1. 2017, ஜூலை, 18 அன்று புதுதில்லியில் நடைபெற்ற இந்திய-ஐரோப்பிய ஒன்றிய ஆயுத குறைப்பு பேச்சுவார்த்தையின்போது எடுத்துரைக்கப்பட்ட உலகளாவிய ஆயுதகுறைப்பு முயற்சிகளை வலுப்பட செய்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இருதரப்பும் மீண்டும் உறுதி செய்தன. ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாடு ஆட்சிக்குள் (எம்.டி.சி.ஆர்.) இந்தியா தன்னை இணைத்துக் கொண்டதற்காக ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டுதலை தெரிவித்து. வான்வழி ஏவுகணை உற்பத்திக்கு எதிரான ஹக் நடத்தைமுறைக்கு (எச்.சி.ஓ.சி.) இந்தியாவின் சந்தாவினை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றதுடன், உலகளாவிய ஆயுதகுறைப்பு முயற்சிகளுக்கு வலுசேர்க்கும்வண்ணம், அணுசக்தி வழங்கல் குழு(என்.எஸ்.ஜி), வாசேனார் ஏற்பாடு மற்றும் ஆஸ்திரேலியா குழு ஆகியவற்றுடனான இந்தியாவின் தீவிர பங்கேற்பை சுட்டிக்காட்டியது.

 

  1. இந்திய பெருங்கடல் மற்றும் அதனை தாண்டியும் கடற்பாதுகாப்பு கூட்டுறவிற்கான மேலும் அதிகரிப்பதற்கான தங்களது உறுதிப்பாட்டை இந்திய-ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் உறுதி செய்தன. சோமாலியா கடற்பரப்பில், ஐரோப்பிய ஒன்றிய கடற்படையும் இந்திய கடற்படையும் கூட்டாக மேற்கொண்ட பயிற்சி நடவடிக்கைகள் (பி.ஏ.எஸ்.எஸ்.இ.எக்ஸ்.), கடற்படை கூட்டுறவிற்கு வெற்றிகரமான உதாரணமாக இருதரப்பும் குறிப்பிட்டன. வருங்காலத்தில் உலக உணவுத் திட்ட கப்பல்களுக்கு இந்தியாவின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கிறது. உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள சர்வதேச சட்டம், குறிப்பாக கடல் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகள் மாநாடு (யூ.என்.சி.எல்.ஒ.எஸ்.) 1982-ற்கு ஏற்ப சுதந்திரமான கடற்போக்குவரத்து, சண்டையிடுதல் மற்றும் பிரச்சினைகளுக்கு அமைதித் தீர்வு போன்றவற்றின் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர். “நீல பொருளாதார”த்தை வளர்க்கும் வண்ணம், பெருங்கடல்கள் மற்றும் கடல்களுக்கு பாதுகாப்பு, நிலைத்தன்மை, இணைப்பு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றுக்கு இரு தலைவர்களும் முக்கியத்துவம் அளித்துள்ளனர்.

 

  1. புவி கண்காணிப்பு உள்ளிட்ட இந்திய-ஐரோப்பிய ஒன்றிய விண்வெளி கூட்டுறவை அதிகரிக்க இரு தரப்பும் ஏற்றுக் கொண்டன.

 

  1. வாழ்க்கையின் அனைத்து முறைகளிலும் பாலின சமன்பாடு மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் உள்ளிட்ட மனித உரிமைகள் கூட்டுறவிற்கு அவர்கள் அளித்துள்ள முக்கியத்துவத்தை இந்திய-ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, புதுதில்லியில் நடைபெறவுள்ள அவர்களது பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டத்தினை மிகவும் எதிர்பார்ப்புடன் நோக்குவதுடன், குறிப்பாக ஐ.நா. பொதுச் சபை மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் குழு உள்ளிட்ட சர்வதேச அரங்கில் நடைபெறும் கலந்துரையாடல்களை அதிகரிக்க ஆதரவையும் அவை தெரிவித்துள்ளன.

 

  1. ஆப்கானிய-தலைமையிலான மற்றும் ஆப்கானிய-சொந்தமான தேசிய அமைதி மற்றும் சமரசம் ஏற்பட ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் மக்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இரு தரப்பும் ஆதரவை தெரிவித்தன. சர்வதேச அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அனைத்து வகையிலான பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் இருதரப்பும் உறுதியாக உள்ளன. ஆப்கானிஸ்தானில் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளத்தை ஏற்பட அரசியல் செயலாக்கம் மற்றும் அதன் வெளிப்பாடுகளில் ஈடுபட்டுள்ள பிராந்திய மற்றும் முக்கிய சர்வதேச பங்கேற்பாளர்களுக்கு மதிப்பையும், ஆதரவையும் அளிப்பதன் முக்கியத்துவத்தை இந்திய மற்றும் இந்திய ஒன்றியம் கோடிட்டு காட்டியுள்ளன. சமூக மற்றும் பொருளாதார உட்கட்டமைப்பு, அரசு நிறுவனங்கள், மனிதவள மேம்பாடு மற்றும் திறன்வளர்ப்பு கட்டமைத்தல் உள்ளிட்ட ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு உதவும் இந்தியாவின் பங்களிப்பை ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டியது. ஆப்கானிஸ்தானில், அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்கவும், சுயம்-சார்ந்து, வளமான நாடாக திகழ்வதற்கான வளர்ச்சிப் பாதைக்கு ஆதரவு அளிக்கவும் இரு தரப்பும் தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்தன.

 

  1. மியான்மரின் ராக்கினே மாநிலத்தின் சமீபத்திய வன்முறை காரணமாக, அம்மாநிலத்திலிருந்து பெருமளவிலான மக்கள் வெளியேறி, அண்டைநாடான பங்களாதேஷில் அடைக்கலம் புகுந்துள்ளது குறித்து இந்திய-ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளன. இந்த வன்முறை ஏற்பட அரக்கன் ரோஹிங்கிய மீட்பு படை (ஏ.ஆர்.எஸ்.ஏ.) தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தொடுத்த தொடர் தாக்குதல்கள் காரணம் என்பதையும், அதன் விளைவாக பாதுகாப்பு படையினரும், பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் இருதரப்பும் குறிப்பில் எடுத்துக் கொண்டன. எந்தவித காலதாமதமும் செய்யாது ராக்கினே மாநிலத்தில் வன்முறையை முடிவிற்கு கொண்டு வந்து இயல்பு நிலையை திரும்பச் செய்வதன் தேவையை இருதரப்பும் அங்கீகரித்தன. கோபி அன்னான்-தலைமையிலான ராக்கினே ஆலோசனை ஆணையத்தின் பரிந்துரை செயல்படுத்திடவும், பங்களாதேஷுடன் இணைந்து பணியாற்றி தஞ்சமடைந்துள்ள அனைத்து சமுதாயத்தை சேர்ந்த மக்களும் வடக்கு ராக்கினே மாநிலத்திற்கு திரும்ப செல்வதற்கு உதவிட வேண்டும் என மியான்மர் அதிகாரிகளை அவர்கள் வலியுறுத்தினர். மேலும், தேவைப்படும் மக்களுக்கு மனிதாபிமான உதவியை அளித்து வரும் பங்களாதேஷின் பங்கை இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்துள்ளது.

 

  1. ஈரானிய அணுசக்தி பிரச்சினை தொடர்பாக விரிவான கூட்டு செயல் திட்டதை (ஜே.சி.பி.ஓ.ஏ.) முழுமையாக செயல்படுத்துவதற்கான தங்களது ஆதரவை இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் மீண்டும் உறுதி செய்துள்ளன. ஈரான் அணுசக்தி தொடர்பான ஜே.சி.பி.ஓ.ஏ. கட்டுப்பாடுகளை கடைபித்துள்ளது என சர்வதேச அணுசக்தி முகமை (ஐ.ஏ.இ.ஏ.) உறுதி செய்துள்ளதை அவை அங்கீகரித்துள்ளன. ஆயுத குறைப்பு கட்டமைப்புமுறை மற்றும் சர்வதேச அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கிய பங்களிக்கும் வகையில், ஐ.நா. பாதுகாப்பு சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இம்முடிவை முழுமையாகவும், திறமையாகவும் செயல்படுத்திட வேண்டும் என இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் கேட்டுக் கொண்டுள்ளன.

 

  1. வடகொரியாவின் பன்னாட்டு உறுதியேற்புகளுக்கு எதிராக நேரடியாகவும் மற்றும் விதிமுறைகளை மீறியும், 2017, செப்டம்பர், 3 அன்று வடகொரியா நடத்திய அணுசக்தி சோதனைக்கு இரு தரப்பும் கண்டனம் தெரிவித்தது. வடகொரியாவின் தொடர் அணுசக்தி மற்றும் வான்வழி ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் ஆயுத உற்பத்தி தொடர்புகள் பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் என அவை ஒப்புக்கொண்டுள்ளதுடன், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஆறு கட்சி பேச்சுவார்த்தைகளால் அங்கீகரிக்கப்பட்டவாறு, முழுமையான, பரிசோதிக்கத்தக்க, அணுசக்திமயமாக்கலுக்கு திரும்பாத கொரிய தீபகற்பத்தை ஏற்படுத்திட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டன. வடகொரியாவின் அணுசக்தி மற்றும் வான்வழி திட்டங்களுக்கு ஆதரவு அளிப்போரின் பொறுப்புகளை இருதரப்பும் வலியுறுத்தின. இச்சவாலை எதிர்கொள்ளும் வகையில் சர்வதேச சமுதாயத்தின் ஒற்றுமையை வலியுறுத்தியதுடன், பேச்சுவார்த்தையின் மூலம் அமைதியான மற்றும் விரிவான தீர்வை எய்திட அதிக அழுத்தம் தரும் வகையில் ஐ.நா.பாதுகாப்பு சபை விதித்த தடைகளை சர்வதேச சமுதாயம் முழுமையான கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவை கேட்டுக் கொண்டுள்ளன.

 

  1. சிரியாவின் நிலை தொடர்பாக, இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும், ஐ.நா. தலைமையிலான ஜெனிவா செயல்முறைக்கு முக்கியத்துவம் அளிப்பதை மீண்டும் உறுதிசெய்ததுடன், சிரியாவில் அரசியல் தீர்வினை ஊக்குவிக்கும்வண்ணம், சிரியர்களுக்குள்ளான பேச்சுவார்த்தைகளுக்கு முழு ஆதரவை கோரியது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் ஒருமைப்பாடு அடிப்படையானது மற்றும் குழப்பத்திற்கு காரணமாக அனைத்து கட்சிகளும், அதன் ஆதரவாளர்களும் தங்கள் உறுதியேற்பின்படி நடந்திட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானம் 2254 மற்றும் ஜெனிவா வெளியிடு, 2012 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளவாறு நம்பகமான அரசியல் தீர்வே, சிரியாவின் நிலைத்தன்மைக்கு உறுதியளிக்கும் என்பதுடன், சிரியாவில் உள்ள தாயேஷ் மற்றும் பிற ஐ.நா. தெரிவித்துள்ள பயங்கரவாத குழுக்களின் தோல்வியை உறுதி செய்திட இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் உறுதிபூண்டுள்ளன. 2018, வசந்தகாலத்தில் நடைபெறும் சிரியா மீதான இரண்டாவது புருஸ்செல்ஸ் மாநாட்டில், சிரியாவிற்கான சர்வதேச சமுதாயத்தின் உறுதிப்பாட்டை தக்க வைக்க பங்களிக்கும் என இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் உடன்பட்டுள்ளன.

 

  1. மத்திய கிழக்கு அமைதி முயற்சி தொடர்பாக, மத்திய கிழக்கு பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மை ஏற்பட இருநாடுகள் தீர்வு அடிப்படையிலும், சம்பந்தப்பட்ட ஐக்கிய நாடுகள் தீர்மானங்கள், மாட்ரீட் கொள்கைகள், அரபு அமைதி முயற்சியின் அடிப்படையிலும், இஸ்ரேலிய-பாலஸ்தீனிய மோதல் குறித்து அனைத்து கட்சிகளும் உடனடியாக, நீண்ட காலத்திற்கான மற்றும் விரிவான தீர்வு காண ஆக்கப்பூர்வமாக ஈடுபட வேண்டும் என இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் அழைப்பு விடுத்துள்ளன.

 

  1. லிபியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு நீண்ட காலத்திற்கான தீர்வு காண ஐ.நா.வழிநடத்தும் லிபியன் தலைமையிலான மற்றும் லிபியன்-சொந்தமான அரசியல் செயல்முறைகளுக்கு இருதரப்பும் தங்களின் முழு ஆதரவை மீண்டும் உறுதிசெய்தன. லிபியாவில் உள்ளடக்கிய அரசை ஏற்படுத்துவதும், அமைதி மற்றும் நிலைத்தன்மையை கட்டமைப்பதும், ஒட்டுமொத்த சர்வதேச சமுதாயத்திற்கு நன்மையளிக்கும்.

 

  1. இன்றைய உலகமயமாக்கப்பட்ட உலகில் இணைப்பின் முக்கியத்துவத்தை இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்றுக்கொண்டுள்ளன. உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நடைமுறைகள், நல்ல அரசாட்சி, சட்டத்தின் ஆட்சி, திறந்த, வெளிப்படையான மற்றும் சமநிலையின் அடிப்படையில் இணைப்பின் முயற்சிகள் அமைய வேண்டும் என்பதையும், நிதி பொறுப்புகளின் கொள்கைகள், பொறுப்பு கடன் நிதி நடைமுறைகள் பொறுப்புடைமை, சமமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாதுகாப்பு தரங்கள் மற்றும் சமூக நிலைத்தன்மை ஆகியவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்பதையும் அவை கோடிட்டு காட்டியுள்ளன.

 

  1. ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் முறைசாரா தளமாக ஏ.எஸ்.இ.எம். விளங்குவதன் முக்கியத்துவத்தை இருதரப்பும் கோடிட்டு காட்டின. உலகச் சவால்களை கூட்டாக எதிர்கொள்வதில் கவனம் செலுத்துதல் தொடர்பாக, புருஸெல்சில் நடைபெற்ற உள்ள அடுத்த ஏ.எஸ்.இ.எம். உச்சிமாநாட்டையொட்டி, ஏ.எஸ்.இ.எம்.-ற்கு புதிய உத்வேகம் அளிக்க வேண்டும் என்பதை இருதரப்பும் ஏற்றுக் கொண்டுள்ளன.

 

  1. ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானம் 2202 (2015)-க்கு ஏற்ப அனைத்து கட்சிகளும் மின்ஸ்க் ஒப்பந்தங்களை முழுமையாக செயல்படுத்துவதன் மூலம் கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு தூதரக தீர்வு காண்பதற்கான தங்களது வலுவான ஆதரவை தலைவர்கள் தெரிவித்தனர்.

 

  1. எம்.வி. கடற் பாதுகாப்பு பணியாளர் ஒஹையோ சம்பந்தப்பட்ட வழக்கில் பதினான்கு ஸ்பெயின் மற்றும் ஆறு பிரிட்டிஷ் குடிமக்களுக்கு இந்திய நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது குறித்து, இந்தியாவின் சட்டதிட்டங்களின் மூலம் விரைவில் தீர்வு காணப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் நம்புகிறது. உலக சவால்கள் – பல்நோக்கு கூட்டுறவு.

 

  1. அமைதி மற்றும் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் மேலாண்மை சீர்திருத்தத்திற்கான மூன்று சீர்திருத்த தடங்கள் மீதான புதிய ஐக்கிய நாடுகளின் சீர்திருத்த கூட்டப்பொருளிற்கு இருதரப்பும் தங்கள் ஆதரவை மீண்டும் உறுதி செய்தன. 2030 கூட்டப் பொருளின்படி, அதன் குழுக்களின் பணிகளை சிறந்த முறையில் நடைமுறைப்படும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் விரிவான சீர்திருத்தம் மற்றும் பொது சபையின் பணிக்கு புத்துயிர் அளிப்பது உள்ளிட்ட, ஐ.நா. அமைப்புகள் மற்றும் கிளைகளின் சீர்திருத்தங்கள் மூலம் வலுவான உலகளாவிய அரசாட்சிக்கு இருதரப்பும் உறுதிபூண்டுள்ளது.

 

  1. சர்வதேச பாதுகாப்பு, உலகளாவிய பொருளாதார நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றம் போன்ற சவால்களுக்கு தீர்வு காணும் வகையில், ஜி-20, ஐக்கிய நாடுகள் மற்றும் பிற பல்நோக்கு மன்றங்களில் உள்ள இதர பங்குதாரர்களுடன் இரு தரப்பும் கூட்டாக பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளன.

 

  1. விதிகளின் அடிப்படையிலான பல்நோக்கு வியாபார அமைப்பின் முக்கிய பங்கு மற்றும் நிலையான முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை எய்துவதற்கான சுதந்திர, நியாயமான மற்றும் திறந்த வணிகத்தை அதிகரிக்க செய்வதன் முக்கியத்துவத்திற்கான தங்களது உறுதிப்பாட்டை தலைவர்கள் மீண்டும் உறுதி செய்தனர். உலக வர்த்தக நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றி, விதிகள்-அடிப்படையிலான பலதரப்பட்ட வணிக அமைப்புகளை மையப்படுத்துதல் மற்றும் திறந்த மற்றும் உள்ளடக்கிய உலகளாவிய வணிகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உறுதியான முடிவுகளை கொண்டு வரும் வகையில் பதினோராவது உலக வர்த்தக நிறுவன அமைச்ச மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் அவர்கள் உறுதி செய்தனர்.

 

  1. நிலையான வளர்ச்சிக்கான 2030 கூட்டப் பொருளை கடைபிடித்தல், வளர்ச்சிக்கான புதிய ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்தொருமித்தல் மற்றும் இந்தியாவின் “அனைவரும் கூடி, அனைவருக்கும் வளர்ச்சி” கொள்கை முயற்சிகளை செயல்படுத்துதலில் கூட்டு உறுதிப்பாடு ஆகியவற்றை இருதரப்பும் நினைவுகூர்ந்து, நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் வறுமை ஒழிப்பை எய்திட உலகளாவிய கூட்டுகளுக்கான முக்கியத்துவத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக, பொதுவான முன்னுரிமைகளில் கூட்டுறவு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா வளர்ச்சி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுவதை எதிர்நோக்கியும் தங்களது உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் உறுதி செய்தனர். பேரழிவு அபாய குறைப்பிற்கான செண்டாய் கட்டமைப்புமுறை 2015-2030 பரஸ்பரம் வலுப்படுத்த வேண்டிய தேவையை இரு தரப்பும் அங்கீகரித்துள்ளன.

 

  1. ஐ.நா. அமைதிப்படை இயக்கங்களின் அதன் பங்களிப்பு உள்ளிட்ட, ஆப்பிரிக்காவின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான இந்தியாவின் பங்களிப்பிற்கு ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது. ஆப்பிரிக்கா தொடர்பாக, தங்களது முயற்சிகளை ஒருமுகப்படுத்தும் வகையில், தங்களது ஆலோசனைகள் மற்றும் கூட்டுறவை மேம்படுத்திட தங்களது உறுதிப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியமும், இந்தியாவும் தெரிவித்துள்ளன. அடுத்த ஐரோப்பிய ஒன்றியம்-ஆப்பிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டில் இந்தியாவை பார்வையாளராக பங்கு பெற உள்ளதை அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர். அதிகரித்த வணிகம் மற்றும் பொருளாதார கூட்டுறவு மூலம் வளங்களில் கூட்டுதாரர்கள்; இந்தியாவின் நவீனமயமாக்கலின் கூட்டுதாரர்கள்

 

  1. பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள், “இந்தியாவில் உருவாக்குவோம்”, “டிஜிட்டல் இந்தியா”, “திறன் இந்தியா”, “ஸ்மார்ட் நகரம்”, “தூய்மை இந்தியா” மற்றும் “துவங்குதல் இந்தியா”, போன்ற இந்தியாவின் முன்னோடி முயற்சிகளில் பங்கேற்க ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். எளிதான, திறன்மிக்க மற்றும் நாடு தழுவிய மறைமுக வரிவிதிப்பு முறையை உணரும் வண்ணமும் இந்தியாவில் எளிதாக வியாபாரம் செய்வதையும், விற்பனை சந்தையை ஒருங்கிணைத்தலை ஊக்குவிக்கும்வண்ணமும், வரலாற்று சிறப்புமிக்க சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) உள்ளிட்ட பிரதமர் திரு.மோடியின் பொருளாதார சீர்திருத்தங்களை ஐரோப்பிய ஒன்றியம் கூர்ந்து பின்பற்றி வருகிறது. முன்னோடி முயற்சிகளில் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களின் தற்போதைய பங்களிப்பை பாராட்டிய பிரதமர் திரு.மோடி, இந்தியாவின் வளர்ச்சிக்கான முன்னுரிமைகளில் அவர்கள் மேலும் ஆழமாக பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். ஐரோப்பிய பிணைய நிறுவனங்களில் இந்திய வணிக நிறுவனங்களின் அதிகளவிலான பங்கேற்பை ஐரோப்பிய ஒன்றிய தரப்பு ஊக்குவித்தது. ஆதாரத் திறன் மற்றும் சுற்றறிக்கை பொருளாதாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம்-இந்திய கூட்டுறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை தலைவர்கள் குறிப்பிட்டனர். அறிவுசார் சொத்து உரிமைகள் (ஐ.பி.ஆர்.) மற்றும் பொது கொள்முதல் துறைகளில் கூட்டுறவு, அனுபவம் மற்றும் சிறந்த நடைமுறைகளை மேம்படுத்திட இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.

 

  1. இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான பொருளாதார கூட்டை வலுப்படுத்துவதற்கான தங்களது பகிர்ந்துகொள்ளப்பட்ட உறுதிப்பாட்டை வெளிப்படுத்திய தலைவர்கள், விரிவான மற்றும் இருதரப்பிற்கும் பயனளிக்கக்கூடிய இந்திய-ஐரோப்பிய ஒன்றிய அகண்ட அடிப்படையிலான வணிகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் (பீ.டி.ஐ.ஏ.) குறித்து மீண்டும் பேச்சுவார்த்தைகள் துவங்கிட இரு தரப்பிலும் மீண்டும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதை குறிப்பிட்டனர்.

 

  1. குறிப்பாக அரிசி உள்ளிட்ட, பொதுவான விவசாய பொருட்களின் வணிகத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரித்த இரு தரப்பினரும், வணிகத்திற்கு தடையாக இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கூட்டாக பணியாற்ற ஒப்புக் கொண்டனர். (ஆணைய விதிமுறை (ஐ.ஒ.) 2017/983) அரசியில் ட்ரைசைக்ளாசோல் சகிப்புத்தன்மை இறக்குமதி குறித்து, கூடுதல் அபாய மதிப்பீடுகளை காலதாமதமின்றி கடைபிடிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட பயிர் பாதுகாப்பு நிறுவனங்கள் அழைக்கப்பட்டு, ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு முகமையின் புதிய அறிவியல் புள்ளிவிவரங்கள் அளிக்கப்படும். இதன் அடிப்படையில், ஐரோப்பிய ஆணையம் மேற்சொன்ன விதிமுறையை மறுஆய்வு செய்வது குறித்து விரைந்து பரிசீலிக்கும். புள்ளிவிபர சேகரிப்பு, அபாய மதிப்பீடு மற்றும் அபாய தகவல் குறித்த அறிவு மற்றும் வல்லமை பரிமாற்றத்திற்கு கவனம் செலுத்தும் வகையில், ஐரோப்பிய உணவு பாதுகாப்பு முகமை (இ.எப்.எஸ்.ஏ.) மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர முகமை இடையே விரைவான நிறுவனங்களுக்கான கூட்டுறவிற்கு இரு தரப்பும் ஆதரவு அளிக்கும். மேலும், ஐரோப்பிய ஒன்றியமும், இந்தியாவும் உணவு பாதுகாப்பில் தங்களது கூட்டுறவை மேலும் வலுப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன, அதன்படி :

 

அ. தொடர்புடைய இந்திய அமைச்சகங்கள்/துறைகள் மற்றும் தொடர்புடைய ஐரோப்பிய ஆணைய சேவைகள் இடையேயான, உணவு பாதுகாப்பு பிரச்சினைகளுக்கான விவசாய மற்றும் கடல்சார் பணிக் குழு, எஸ்.பி.எஸ்.-டி.பீ.டி. பணிக் குழுக்கள் மற்றும் விவசாய வணிகம் போன்றவற்றில் தற்போதைய பேச்சுவார்த்தைகளை வலுப்பெறச் செய்தல்.

ஆ. நல்ல விவசாய நடைமுறைகள், கண்டறியக்கூடிய திறன்களின் வளர்ச்சி போன்ற துறைகளில் கூட்டுத் திட்டங்களையும் மற்றும் சோதனை மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட பரிசோதனை நடவடிக்கைகளில் கூட்டுறவை துவங்குதல்

இ. பாசுமதிக்கான புவியியல் குறியீடு பாதுகாப்பிற்கான இந்தியாவின் விண்ணப்பத்தை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பதுடன், அத்தகைய எதிர்கால விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிக்கும்.

ஈ. இந்தியா ஏற்கனவே விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, கடமை பறிப்பிற்கான ஜி.ஏ.டி.டி.எஸ், 1994 பிரிவு 28-ன்படி பாசுமதி அரிசியின் கூடுதல் விதை வகைகளை அங்கீகரிக்க செய்வதற்கான முயற்சிகளை விரைவாக்கிட ஐரோப்பிய ஒன்றியம் விழைந்துள்ளதற்கு இந்தியா வரவேற்பை தெரிவித்துள்ளது.

 

  1. வியாபார சூழ்நிலையை மேம்படுத்தும் வண்ணம் இந்தியாவில் ஐரோப்பிய ஒன்றிய முதலீடுகளுக்கான முதலீட்டு வழிவகை அமைப்புமுறை (ஐ.எப்.எம்.) ஏற்படுத்தப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள தலைவர்கள், இந்தியாவிற்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து சிறந்த நடைமுறைகள் மற்றும் கண்டுபிடிப்பு தொழில்நுட்பங்களை எளிதாக பரிமாறிக்கொள்ள ஐ.எப்.எம். உதவும் என நம்பிக்கை தெரிவித்தனர். ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகளில் அமைந்துள்ள நிறுவனங்களுக்கு “இந்தியாவில் உருவாக்குவோம்” முயற்சியில் முதலீடு செய்ய வாய்ப்பளிக்கும் என்பதை தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

 

  1. இந்தியாவில் ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் தெற்காசிய பிராந்திய பிரதிநிதி அலுவலகம் துவங்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள தலைவர்கள், குறிப்பாக நகர்ப்புற இயக்க மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில், அதன் முதலீடுகள், பருவகால கூட்டப்பொருள் மீதான இந்திய-ஐரோப்பிய ஒன்றிய கூட்டுறவிற்கு ஆதரவு அளிக்கும். 2017-ம் ஆண்டு இந்தியாவிற்கான ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் உறுதியான உயர்த்தப்பட்ட €1.4 பில்லியனின் ஒரு பகுதியான, பெங்களூர் மெட்ரோ பகுதி-II திட்டத்திற்கான புதிய €500 மில்லியன் ஐரோப்பிய முதலீட்டு வங்கி கடன் ஒப்பந்தத்திற்கு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 

  1. ஐ.எஸ்.ஏ.வின் 121 வருங்கால உறுப்பு நாடுகளில் மலிவான சூரிய எரிசக்தி செயல்களை பரவலாக பயன்படுத்திட முதலீட்டை திரட்டும் கவையில், சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் (ஐ.எஸ்.ஏ.) இடைக்கால தலைமைச் செயலகம் மற்றும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி இடையேயான தற்போதைய நேர்மறையான விவாதங்கள் மற்றும் கூட்டு உடன்படிக்கை பரிமாற்றங்களை தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

  1. தூய எரிசக்தி மற்றும் பருவகால மாற்றத்திற்கான கூட்டு அறிக்கையை இரு தரப்பும் ஏற்றுக் கொண்டு, 2015 பாரீஸ் ஒப்பந்தத்தின்கீழ் தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்ததுடன், அதன் செயல்பாட்டினை அதிகரிக்க கூட்டுறவு மேலும் அதிகரிக்க ஏற்றுக் கொண்டுள்ளனர். பருவகால மாற்றத்திற்கு தீர்வு கண்டல், பாதுகாப்பான, மலிவான மற்றும் நிலையான எரிசக்தி வழங்கல் ஆகியவை முக்கிய பகிரப்பட்ட முன்னுரிமைகள் என்பதை குறிப்பிட்டுள்ள இந்தியாவும், ஐரோப்பிய மன்றமும், 2016 ஐரோப்பிய ஒன்றியம்-இந்திய உச்சி மாநாட்டில் கடைபிடிக்கப்பட்ட தூய எரிசக்தி மற்றும் பருவகால கூட்டின் முன்னேற்றத்தை வரவேற்றுள்ளதுடன், 2016, அக்டோபரில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய-இந்திய எரிசக்திக் குழு கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பணிக்கேற்ப, அதன் செயல்பாடு மற்றும் வளர்ச்சிக்கான தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்துள்ளன.

 

  1. தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, அனுபவ பகிர்வு, திறன் வளர்ப்பு, வணிகம் மற்றும் முதலீடு மற்றும் திட்ட உருவாக்கத்தின் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் வளர்ச்சி விலையை குறைக்கவும், பரப்பவும் பரஸ்பர கூட்டுறவை மேற்கொள்ளவும் தங்களது உறுதிப்பாட்டை இந்தியாவும், ஐரோப்பிய மன்றமும் தங்களது உறுதி செய்துள்ளனர்.

 

  1. பொருளாதார முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சமாதானத்தின் முக்கியத்துவத்தை தலைவர்கள் வலியுறுத்தினர். தொடக்க ஆதார செலவினத்தை குறைத்திடும் மற்றும் இரண்டாம் தர உற்பத்திப் பொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் அதிகளவிலான சுற்றறிக்கை மாதிரியை நோக்கி செல்வதன் அவசியத்தை அவர்கள் எடுத்துரைத்துள்ளனர். இத்தகைய முக்கிய பொருளாதார மாற்றத்திற்கான மூலோபாயங்களை உருவாக்குவதற்கு சர்வதேச ஆதாரக் குழு, இந்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவகால மாற்ற அமைச்சகம்(இந்திய ஆதாரக் குழு மூலம்) மற்றும் இந்தியாவின் மாற்றத்திற்கான தேசிய நிறுவனம் (நிதி ஆயோக்) ஆகியவற்றின் பங்களிப்பை அவர்கள் வரவேற்றுள்ளனர். அறிவு பரிமாற்றத்திற்கான உரிய தளமாகவும் மற்றும் உலகளவில் ஆதாரத் திறனை கூட்டாக ஊக்குவிக்கவும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஜி-20 ஆதாரத் திறன் பேச்சுவார்த்தைகளை இரு தரப்பும் ஏற்றுக் கொண்டுள்ளன. நீர் மேலாண்மை மற்றும் காற்று மாசு போன்ற சுற்றுச்சூழல் சவால்களுக்கு தீர்வு காண்பதற்கான கூட்டுறவை மேலும் தீவிரப்படுத்தவும் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளதுடன், ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல் திட்டம் உள்ளிட்ட, இந்திய-ஐரோப்பிய ஒன்றியம் நீர் கூட்டாண்மை செயல்பாட்டின் முன்னேற்றம், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பிற்கான வாய்ப்புகள் கூட்டுறவு அதிகரிப்பு ஆகியவற்றை ஏற்றுக் கொண்டுள்ளதுடன், இம்மாதத்தின் பிற்பாடு நடைபெற உள்ள மூன்றாவது இந்திய-ஐரோப்பிய ஒன்றிய நீர் மன்றக் கூட்டத்தினை எதிர்நோக்கியுள்ளனர்.

 

  1. ஐரோப்பிய மற்றும் இந்திய தொழிற்சாலைகள் மற்றும் புதிதாக துவங்குதல் சுற்றுச்சூழல் அமைப்புகள் இடையேயான கூட்டுறை வலுப்படும் செயல்களை குறிக்கோளாக கொண்ட கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் கூட்டுறவை அதிகரிக்க செய்வதற்கான பணியை மேற்கொள்ள தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

 

  1. 5ஜி-க்கான வருங்கால உலகளாவிய தரங்கள், அறிவுகூர்வுமிக்க போக்குவரத்து அமைப்புகள், பொருட்களுக்கான இணையதளம், வருங்கால பிணையங்கள் மற்றும் தொலைத்தொடர்பு பாதுகாப்பு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவது தொடர்பாக, இந்திய மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு பெற்ற ஐரோப்பிய தொலைத் தொடர்பு நிலையான அமைப்புகள் இடையேயான தீவிரமான தொழில்நுட்ப கூட்டுறவை தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இக்கூட்டுறவை விரிவுபடுத்தவும், உறுதியான தொழில்நுட்பத் தீர்வுகளை வெளிப்படுத்தும் மற்றும் “டிஜிட்டல் இந்தியா”, மற்றும் “ஐரோப்பாவிற்கான ஒற்றை டிஜிட்டல் சந்தை” ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளை வலுப்படுத்தவும் செய்யும் பங்கேற்பாளர்களை இரு தரப்பும் ஊக்குவித்தன.

 

  1. இணைய ஆட்சியமைப்பு, இரு தரப்பிலும் தகவல், தொடர்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் எளிதாக விற்பனை மேற்கொள்வதை அதிகரித்தல் மற்றும் “ஐரோப்பிய இந்தியா புதிதாக துவங்குதல் பிணையம்” கீழ் இந்திய மற்றும் ஐரோப்பிய புதிதாக துவங்குதல் சுற்றுச்சூழல் அமைப்புகளிடையேயான கூட்டங்கள் மீதான நேர்மறை பரிமாற்றங்களை இரு தரப்பும் குறிப்பிட்டுள்ளன.

 

  1. மேலும் முறைப்படுத்தப்பட்ட மற்றும் நிலையான பயிற்சிச் சுற்றுச்சூழல் மூலம் ஆய்வுகளின் மீது குறிப்பாக கவனம் செலுத்தும் வகையில், கட்டுப்பாட்டு அமைப்பின் திறன் வளர்ப்பு உள்ளிட்ட, மருந்துகள் உற்பத்தித் துறையிலான கூட்டுறவை மேலும் அதிகரிப்பதற்காக தங்கள் ஆவலை இரு தரப்பினரும் உறுதி செய்தனர். ஒட்டுமொத்த மருந்துகள் மதிப்புத் தொடர்புக்கான திறன் வளர்ப்பின் மீதான கூட்டுறவில் இந்தியத் தரப்பு தனது ஆவலை எடுத்துரைத்தது.

 

  1. நகர்ப்புற போக்குவரத்து மற்றும் சுகாதாரத்தினை மேம்படுத்துதல் உள்ளிட்ட முன்னணித் துறைகளில் கூட்டுறவை அதிகரித்தல், இந்தியாவில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குதல் மற்றும் 2016-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் ஏற்றுக்கொண்ட புதிய நகர்ப்புற கொள்கையை ஊக்குவிக்கும் வண்ணம் ஸ்மார்ட் மற்றும் நிலையான நகர்ப்புறமயமாக்கலுக்கான கூட்டமைப்பின் மீதான இந்திய-ஐரோப்பிய ஒன்றிய கூட்டு அறிக்கையை தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

 

  1. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற முன்னணித் துறைகளுக்கான புதுப்பிக்கப்பட்ட இந்திய-ஐரோப்பிய ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு ஒப்பந்தத்தின் கீழும், குறிப்பாக, உடல்நலம், தண்ணீர் மற்றும் தூய எரிசக்தி போன்றத் துறைகளில் தற்போதைய உலக சவால்களுக்கு தீர்வு காணவும் கூட்டுறவை அதிகரிக்க தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். தொழில்நுட்ப மற்றும் அறிவியல் அறிவு மற்றும் நீர் ஆதாரங்களின் மீது அதிகரிக்கும் அழுத்தத்திற்கு ஈடுசெய்யும் வகையிலான மேலாண்மை திறன்கள் ஆகியவற்றில் கூட்டுறவிற்கான இன்றியமையா தேவையை பிரதிபலிக்கும் தண்ணீர்-தொடர்பான சவால்களை எதிர்கொள்ள €30 மில்லியன் செலவிலான மிகப் பெரிய கூட்டு முன்னோடி திட்டத்தை துவங்குவதற்கான ஒப்பந்தத்தை அவர்கள் வரவேற்றுள்ளனர். ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பிற்கான ஐரோப்பிய கட்டமைப்புமுறைத் திட்டம் ‘ஹாரிசான் 2020’ மற்றும் இந்தியத் திட்டங்களை பரஸ்பரம் திறப்பதற்கான பணியில் ஈடுபட இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளதுடன், ஆராய்ச்சியாளர்களுக்கான இருவகை இயக்கத்தை தீவிரப்படுத்தவும் அழைப்பு விடுத்தனர். இந்த அளவில், அறிவியல் & பொறியியல் ஆராய்ச்சி வாரியம் (எஸ்.இ.ஆர்.பீ.) மற்றும் ஐரோப்பிய ஆராய்ச்சி சபை (இ.ஆர்.சி.) இடையேயான செயல்பாட்டிற்கான ஒப்பந்தம் முடிவு பெற்றதை இரு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

 

  1. அணுசக்தியை அமைதியான பயன்பாடுகளுக்கான ஆராய்ச்சி & வளர்ச்சி கூட்டுறவு ஒப்பந்தத்தை முடிவு செய்திட யூர்ஆட்டம் மற்றும் அணுசக்தி துறைக்கு தலைவர்கள் ஊக்கமளித்துள்ளனர். இக்கூட்டுறவு அணுசக்தி பாதுகாப்பை மேலும் அதிகரிக்கச் செய்வதுடன் பரஸ்பர நன்மையளிக்கும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும், இக்கூட்டுறவு, திறன்களை மேம்பாடு மற்றும் சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில், தண்ணீர், உடல்நலம் & மருந்து, சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் எரிசக்தியற்ற தொழில்நுட்பத்தை பரப்புவதற்கு அழைத்து செல்லும்.

 

  1. இணைவு எரிசக்தி ஆராய்ச்சிக்கான யூர்ஆட்டம்-இந்தியா கூட்டுறவு ஒப்பந்தம் உள்ளிட்ட ஒப்பந்தத்தின் கீழ் உள்ளிட்ட உடன்படிக்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கவும், இணைவு எரிசக்தி வளர்ச்சிக்கான தங்களது வலுவான கூட்டமைப்பை இரு தரப்பும் தொடரும்.

 

  1. இந்தியா மற்றும் ஐரோப்பிய இடையே வான் போக்குவரத்து அதிகரித்து, மக்களுடன் மக்களுக்கான சந்திப்புகள், வியாபார பயணம் மற்றும் சுற்றுலாவின் உயர்விற்கு உதவும் 2008 கிடைமட்ட பொது வான் போக்குவரத்து ஒப்பந்தத்தை உடனடியாக செயலாக்கத்தை தலைவர்கள் வரவேற்றுள்ளனர். குறிப்பாக கடல்சார், வான்வழி, நகர இயக்கம் மற்றும் ரயில் போன்ற பரஸ்பர நன்மையளிக்கும் அனைத்து வகையிலான போக்குவரத்து துறைகளில் பரஸ்பர போக்குவரத்து கூட்டுறவை ஆழப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தலைவர்கள் பரிசீலித்தனர்.

 

49.திறன்கள் வளர் கூட்டுறவை தீவிரப்படுத்தவும், இந்தியாவின் திறன் இந்தியா முயற்சி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பாவிற்கான புதிய திறன்கள் கூட்டப்பொருள்களுக்கு இடையே ஒருமையை கண்டு இணைக்கவும் இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்றுக் கொண்டுள்ளன.

 

  1. செயல் 2020க்கான இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய கூட்டப் பொருளின், ஒரு பகுதியாக, இந்தியாவின் கியான் திட்டம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இரஸ்மஸ்+ திட்டம் உள்ளிட்ட உயர்கல்விக்கான கூட்டுறவை வலுப்படுத்தும் வகையில் உழைப்பதற்கான தேவை உள்ளது என தலைவர்கள் வலியுறுத்தினர். இரஸ்மஸ்+ திட்டம் 5000வது இந்திய மாணவர் கொண்டாட்டத்தை தற்போது கொண்டியதுடன், ஐரோப்பிய ஒன்றிய படிப்புகளுக்கான கூட்டு-முதுகலைகள், குறுகிய-கால இயக்கம், திறன்வளர் திட்டங்கள் மற்றும் ஜீன் மோனட் செயல்கள் மூலம் பல இந்திய பல்கலைக்கழகங்களுக்கு நிறுவன கூட்டுறவிற்கான நிதியுதவி வாய்ப்புகளை அளித்துள்ளது. இராஸ்மஸ் இயக்கச் செயல் உருவாக்கப்பட்டது முதல், உலகிலேயே ஒட்டுமொத்தமாக தலைசிறந்த பயனாளியாக இந்தியா இருப்பதை தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

51.இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே குடிபெயர்வு மற்றும் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் வண்ணம், 2017, ஏப்ரல், 04 அன்று புருஸெல்சில் நடைபெற்ற இடப்பெயர்வு மற்றும் இயக்கத்திற்கான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை இரு தரப்பும் குறிப்பெடுத்துக் கொண்டனர். தொழில்நுட்ப கூட்டுறவு மற்றும் பரஸ்பர நன்மையளிக்கும் திட்டங்களை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை மூலம் இடப்பெயர்வு மற்றும் இயக்கத்திற்கான பொதுக் கூட்டப்பொருள் முன்னோக்கி எடுத்து செல்வதற்கான புரிந்துணர்வை அவர்கள் வரவேற்றுள்ளனர்.

 

  1. இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே மக்களுடன்-மக்களுக்கான பரிமாற்றங்களை தீவிரப்படுத்தவும், சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் வருகையை அதிகரிக்க வழிவகை செய்யவும் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உயர் தகுதி பெற்ற தொழில்வல்லுநர்களின் வருகை எளிதாக்கும் வண்ணம் ஐரோப்பிய ஒன்றிய நீல அட்டை திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருத்தங்களை இந்திய தரப்பு குறிப்பு எடுத்துக் கொண்டன.

 

  1. “இந்தியாவுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் தொடர்புகள்” குறித்த அறிக்கையை ஐரோப்பிய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டதை தலைவர்கள் குறிப்பிட்டதுடன், இந்திய மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற குழுக்கழுக்கிடையேயான பரிமாற்றங்களை தீவிரப்படுத்துவதற்கான அதன் பரிந்துரைகளை வரவேற்றுள்ளனர். அறிஞர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் கலாச்சார குழுக்களுக்கு இடையேயான தீவிரமான பரிமாற்றங்களை தலைவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

 

 

****



(Release ID: 1505249) Visitor Counter : 561


Read this release in: English