பிரதமர் அலுவலகம்

ஐ.சி.எஸ்.ஐ. பொன்விழா ஆண்டு தொடக்க நிகழ்ச்சியில் நிறுவனச் செயலாளர்களிடையே பிரதமர் உரை நிகழ்த்தினார்

Posted On: 04 OCT 2017 8:57PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் இன்று – இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிலையம் - ஐ.சி.எஸ்.ஐ.-ன் பொன்விழா ஆண்டு தொடக்க நிகழ்ச்சியில் நிறுவனச் செயலாளர்களிடையே உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியின்போது, பிரதமர் ஐ.சி.எஸ்.ஐ. உடன் தொடர்பு கொண்டுள்ள அனைவரையும் பாராட்டினார். நிறுவனங்கள் சட்டத்தை பின்பற்றுவதையும், தங்களது கணக்கை முறையாக பராமரிப்பதை உறுதி செய்வதற்கு பொறுப்பானவர்களிடையே தான் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். அவர்களது பணி நாட்டின் நிறுவன கலாச்சாரத்தை ஏற்பட உதவுவதாக கூறினார். மேலும், அவர்களது அறிவுரை நாட்டின் நிறுவன ஆட்சியமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

நம் நாட்டில் உள்ள சிலர், நமது சமூக அமைப்பின் நேர்மையை பலவீனப்படுத்தவும், நாட்டின் கவுரவத்தை குறைக்கவும் முயன்று வருவதாக பிரதமர் தெரிவித்தார். அத்தகைய கூறுகளை அமைப்பிலிருந்து அகற்றி சுத்தம் செய்திட அரசு உழைத்து வருவதாகவும் அவர் கூறினார்.

அரசின் முயற்சிகளின் விளைவாக, பொருளாதாரம் குறைந்த ரொக்க பணத்தில் செயல்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். பணமதிப்பிழக்கச் செய்தல் நடவடிக்கைக்கு முன்பு 12 சதவீதமாக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கு எதிராக இருந்த ரொக்கம், 9 சதவீதமாக குறைந்துள்ளது. நம்பிக்கையற்ற உணர்வை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார் பிரதமர். கடந்த காலாண்டில் காணப்பட்டது போல், கடந்த காலங்களிலும் 5.7 சதவீதமாக வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்ததை பிரதமர் நினைவு கூர்ந்தார். அத்தகைய தருணங்களில், குறைந்த வளர்ச்சி விகிதங்களுடன், உயர் பணவீக்கம், உயர் வியாபார கணக்கு பற்றாக்குறை மற்றும் உயர் நிதி பற்றாக்குறையும் சேர்ந்து இருந்தன என்றார் அவர்.

உலக பொருளாதாரத்தை பின்னுக்கு இழுக்கும் வலுவற்ற ஐந்து பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்றாக ஒரு காலத்தில் இருந்தது என்றார் பிரதமர்.

முந்தைய காலாண்டில் வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டதை ஒப்புக்கொண்ட பிரதமர், அப்போக்கினை மாற்றியமைக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார். பல முக்கிய சீர்திருத்தம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை தொடரும் என்றார். நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை பராமரிக்கப்படும் என உறுதியளித்தார். அரசு எடுத்த நடவடிக்கைகளால் வருங்காலங்களில் நாடு புதிய வளர்ச்சியடைந்த அணியில் சேரும் என கூடியிருந்தவர்களுக்கு உறுதியளித்தார். நேர்மையாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற அவர், நேர்மையாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் சில முக்கியத் துறைகளில் முதலீடு மற்றும் ஒதுக்கீடுகள் வெகுவாக உயர்ந்துள்ளதை பிரதமர் கோடிட்டு காட்டினார். இக்காலக்கட்டத்தில் 21 துறைகளில் 87 சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். முதலீடுகள் அதிகளவு உயர்ந்துள்ளதற்கான புள்ளிவிவரங்களை அவர் எடுத்துரைத்தார்.

அரசின் கொள்கை மற்றும் திட்டமிடலில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சேமிப்பை உறுதி செய்வதற்கும், அவர்களது வாழ்க்கை மாறுவதற்கும் கவனம் செலுத்தப்படும் என்றார் பிரதமர்.

சில தருணங்களில் தாம் விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும், தனது தற்போதைய சொந்த நலனுக்காக நாட்டின் வருங்காலத்தை அடகுவைக்க மாட்டேன் என்றும், மக்கள் மற்றும் நாட்டிற்கு அதிகாரம் அளிப்பதற்காக தாம் உழைத்து வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

ஐ.சி.எஸ்.ஐ. பொன்விழா ஆண்டு தொடக்க நிகழ்ச்சியில் விளக்கக்கப்பட்ட படக்காட்சி



(Release ID: 1505000) Visitor Counter : 91


Read this release in: English