ரெயில்வே அமைச்சகம்

ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்காக இந்தியாவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 04 OCT 2017 12:22PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவையிடம்  இந்திய அரசின் ரயில்வே அமைச்சகம், சுவிஸ் கூட்டமைப்பின் சுற்றுச் சூழல், போக்குவரத்து, எரிசக்தி, தகவல் தொடர்புக்கான கூட்டமைப்புத் துறைக்கும் இடையே ரயில்வே துறையில் தொழில்நுட்பரீதியான ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து விளக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகஸ்ட் 31, 2017 அன்று கையெழுத்தானது.

 

கீழ்க்கண்ட பகுதிகளில் தொழில்நுட்ப ரீதியான ஒத்துழைப்பிற்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகைசெய்யும்.:

 

அ. வண்டிகளுக்கான வண்டிப்பாதை

ஆ. மின்சார வண்டித் தொடர் மற்றும் தொலைதூர வண்டிகளின் தொகுப்பு.

இ. மேற்பகுதியில் உந்தித் தள்ளும் கருவிகள்.

ஈ. சரக்கு மற்றும் பயணிகளுக்கான வண்டிகள்.

உ. சாய்வு வண்டிகள்.

ஊ. வண்டிக்கான கால அட்டவணை நிர்ணயிப்பு மற்றும் செயல்பாட்டை மேம்படுத்தல்.

எ. ரயில்வே நிலையங்களை நவீனப்படுத்தல்.

ஏ. பல்வகைப் போக்குவரத்து.

ஐ. சுரங்கப்பாதைகளுக்கான தொழில்நுட்பம்.

 

பின்னணி:

 

ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்காக தேசிய ரயில்வேக்கும் பல்வேறு வெளிநாட்டு அரசாங்கங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ரயில்வே அமைச்சகம் செய்து கொண்டுள்ளது. அதிவேக இருப்புப் பாதைகள், தற்போதுள்ள பாதைகளில் வேகத்தை அதிகரித்தல், உலகத் தரம் வாய்ந்த ரயில்வே நிலையங்களை வளர்த்தெடுத்தல், பெரும் பளுக்களை இழுத்துச் செல்லும் நடவடிக்கைகள், ரயில்வே கட்டமைப்பை நவீனப்படுத்தல் போன்றவை இத்தகைய ஒத்துழைப்பிற்கான பகுதிகளாக கண்டறியப்பட்டிருந்தன. இரு நாடுகளும் விரும்புகின்ற ரயில்வே தொழில்நுட்பம், செயல்பாடுகல், அறிவை பகிர்ந்து கொள்ளுதல், தொழில்நுட்ப பயணங்கள், பயிற்சி, கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் ஆகிய துறைகளில் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் இந்த ஒத்துழைப்பை மேற்கொள்ள முடியும்.

 

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரயில்வே துறையில் சமீபத்திய வளர்ச்சி, அறிவு ஆகியவற்றுக்கென இணைந்து செயல்படுதல், பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றுக்கு இந்திய ரயில்வேக்கு மேடை ஒன்றை வழங்கும். அறிவை பகிர்ந்து கொள்ளுதலுக்கான குறிப்பிட்ட தொழில்நுட்பத்தின் மீது கவனம் செலுத்தி தொழில்நுட்ப நிபுணர்களை பகிர்ந்து கொள்ளுதல், அறிக்கைகள், தொழில்நுட்ப ஆவணங்கள், பயிற்சி, கருத்தரங்குகள்/ பயிற்சிப் பட்டறைகள் ஆகியவற்றுக்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வழிவகுக்கின்றன.

 

 

*****



(Release ID: 1504862) Visitor Counter : 80


Read this release in: English