மத்திய அமைச்சரவை
இந்தியாவிற்கும் லிதுவேனியாவிற்கும் இடையே குற்றவாளியை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
04 OCT 2017 12:11PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இந்தியாவிற்கும் லிதுவேனியாவிற்கும் இடையே குற்றவாளிகளை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும், அதை உறுதிப்படுத்துவதற்கும் தனது ஒப்புதலை வழங்கியது.
பயங்கரவாதிகள், பொருளாதார குற்றவாளிகள், மற்றும் இதர குற்றவாளிகளை லிதுவேனியாவிலிருந்து கோரிப் பெறுவதற்கும் லிதுவேனியாவிற்கு அனுப்புவதற்குமான சட்டரீதியான கட்டமைப்பினை இந்த ஒப்பந்தம் வழங்கும்.
இந்தியாவிற்கு எதிரான குற்றங்களைப் புரிந்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளின் மீது குற்றரீதியான வழக்கு தொடுப்பதற்காக லிதுவேனியாவிலிருந்து கோரிப் பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் உதவி செய்யும். அமைதியை உறுதிப்படுத்தவும், பொதுமக்களிடையே அமைதி நிலவுவதை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் சட்டரீதியான நடவடிக்கைகளுக்குள் குற்றவாளிகளை இது கொண்டு வரும்.
*****
(Release ID: 1504849)
Visitor Counter : 86