நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

ஜிஎஸ்டி அமலாக்கம் காரணமாக மாற்றியமைக்கப்பட்ட அதிக பட்ச சில்லரை விலை, MRP, யைப் பொறிப்பதற்கான காலக்கெடு 2017 டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்படுகிறது: திரு. ராம் விலாஸ் பாஸ்வான்

Posted On: 29 SEP 2017 4:03PM by PIB Chennai

2017 ஜூலை முதல் தேதி தொடங்கி ஜிஎஸ்டி அமலாக்கப்படுவதால் சிப்பம் கட்டுவதற்கு முந்தய பொருட்களின் சில்லரை விற்பனை விலையை மாற்ற வேண்டியது அவசியப்படலாம். இதனைக் கருத்தில் கொண்டு மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர், சிப்பம் கட்டுவதற்கு முந்தைய பொருட்களின் மாற்றியமைக்கப்பட்ட விலையை அறிவிக்க 3 மாத கால அவகாசத்தை அதாவது 2017 செப்டம்பர் 30 வரை உற்பத்தியாளர்கள் அல்லது சிப்பம் கட்டுவோர், அல்லது இறக்குமதியாளர்களுக்கு அனுமதி அளித்திருந்தார். மாற்றியமைக்கப்பட்ட சில்லறை விற்பனை விலையை முத்திரைகள் அல்லது ஸ்டிக்கர்கள் அல்லது ஆன்லைன் அச்சடிப்பு ஆகியவற்றின் மூலம் அறிவிக்கலாம் என்றும் அனுமதிக்கப்பட்டது.

     பயன்படுத்தப்படாத சிப்பம் கட்டும் பொருட்கள் / பொருட்கள் மீது அமைக்கப்படும் உறைகள் ஆகியவற்றையும் தேவைக்கேற்றபடி திருத்தி அமைத்து பயன்படுத்த 2017 செப்டம்பர் 30 வரை அனுமதிக்கப்பட்டது.

     இந்த காலக் கெடுவை நீட்டிக்குமாறு கோரி வேண்டுகோள்கள் வந்ததை அடுத்து ஜிஎஸ்டி அமலாக்கம் காரணமான மாற்றியமைக்கப்பட்ட சில்லறை விற்பனை விலையை முத்திரைகள் அல்லது ஸ்டிக்கர்கள் அல்லது ஆன்லைன் அச்சடிப்பு ஆகியவற்றின் மூலம் மாற்றி அமைத்து வெளியிட மேலும், 3 மாத காலத்திற்கு அதாவது 2017 டிசம்பர் 31 வரை அனுமதி அளிக்கப்படுகிறது.

*****



(Release ID: 1504820) Visitor Counter : 73


Read this release in: English