விண்வெளித்துறை
இந்தியாவின் ஜிஎஸ்ஏடி-17 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
Posted On:
29 JUN 2017 10:04AM by PIB Chennai
கடந்த இரண்டு மாதங்களில் வட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்த ஜிஎஸ்ஏடி-17 செயற்கைக்கோள், இன்று இந்தியாவின் மூன்றாவது தகவல் தொடர்பு செயற்கைக் கோளாகும். அதிகாலையில் ஐரோப்பிய ஏரியன் 5 விண்கலத்தைப் பயன்படுத்தி பிரெஞ்சு, கயானா, கூரோவிலிருந்து ஜிஎஸ்ஏடி-17 விண்ணில் செலுத்தப்பட்டது. நாட்டுக்கு பல்வேறு சேவைகள் வழங்க 3477 கிலோ எடை கொண்ட ஜிஎஸ்ஏடி-17, சி-பேண்ட், நீட்டிக்கப்பட்ட சி- பேண்ட் மற்றும் ஸ்-பேண்ட்களில் தகவல் தொடர்பு உபகரணங்களைக் கொண்டதாகும். இந்த செயற்கைக்கோள் வானிலை ஆய்வுத் தகவல்கள் அஞ்சல் செய்தல், செயற்கைக்கோள் அடிப்படையிலான சோதனைகள் மற்றும் மீட்புச் சேவைகளுக்காக அத்தியாவசிய சாதனத்தையும் கொண்டதாகும்.
இந்திய நேரப்படி அதிகாலை 2.45 மணிக்கு புறப்பட்டு 39 நிமிட பயணத்துக்குப்பின், எரியன் 5 மேல் தளத்திலிருந்து, நீள்வட்ட, ஒத்தியங்கு இடமாற்று வட்டப்பாதையில் (ஜிடிஓ), 249 கிலோமீட்டர் பூமிக்கு அருகாமை நிலையில், 35920 கிலோமீட்டர் பூமிக்கு தொலைவு நிலையில், பூமத்திய ரேகைக்கு 3 டிகிரி கோண சாய்வுநிலையில் பிரித்துவிடப்பட்டது.
விண்கல ஊர்தியிலிருந்து பிரிக்கப்பட்டதும், கர்நாடகாவில் ஹாசன் நகரில் உள்ள இஸ்ரோவின் தலைமைக் கட்டுப்பாட்டுத் தளம், ஜிஎஸ்ஏடி-17யின் மீதான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டது. செயற்கைகோள் மீது செய்யப்பட்ட தொடக்கநிலை இயக்கத்தகுதியைப் பரிசோதனைகள், அதன் இயல்பான இயக்கத்தை வெளிப்படுத்தின.
வரும் நாட்களில், செயற்கைக் கோளின் உந்துவிசை ஏற்பாட்டைப் பயன்படுத்தி, புவிநிலைத் துணைக்கோள் வட்டப்பாதையில் (பூமத்திய ரேகையின் மேல் 36000 கிலோமீட்டர்) ஜிஎஸ்ஏடி-17 செயற்கைக் கோளை நிருத்த, வட்டப்பாதை மேலுயர்த்தும் நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும்.
வட்டப்பாதை உயர்த்தும் நடவடிக்கையின் இறுதிக்கட்டத்தின்போது இரண்டு சூரியசக்தி வரிசை அமைப்புகள், ஆன்டெனா பிரதிபலிப்பான்கள் இயக்கப்படும். அதனைத் தொடர்ந்து, இந்த செயற்கைக்கோள் அதனுடைய இறுதி வட்டப்பாதை அமைப்பினில் விடப்படும். ஜிஎஸ்ஏடி-17 துணைக்கோள் வட்டப்பாதையில் உள்ள குறிப்பிட்ட வட்டப்பாதைக் கீற்றில் நிலை நிறுத்தப்பட்டு, இந்தியாவின் சில இயக்கநிலை துணைக்கோள்களுக்கு இணையாக இருத்தப்படும். பின்னர், செயற்கைக் கோளின் தகவல் தொடர்பு சாதனங்களைச் செயலில் முடுக்கிவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. வட்டப்பாதையுள்ளான அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்ததும், ஜிஎஸ்ஏடி-17 செயற்கைக்கோள், உபயோகத்துக்கான செயல்பாட்டுக்குத் தயாராகிவிடும்.
(Release ID: 1504738)