மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

பள்ளிகளில் விளையாட்டுத் திடல் வசதி

Posted On: 27 JUL 2017 3:43PM by PIB Chennai

சர்வ சிக்‌ஷா அபியான் (SSA) மற்றும் இராஷ்ட்ரய மத்யிகிக் சிக்‌ஷா அபியான் (RMSA) திட்டங்களின் கீழ் அரசு தொடக்க மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட  உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு, உதவுகிறது.  அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களால்,  தேவை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், ஒவ்வொரு ஆண்டும் உருவாகும் கூடுதல் தேவைகளின் அடிப்படையில் கணக்கிடப் படுகின்றன. அந்த ஆண்டின் வேலைத்திட்டத்திலும் வரவுசெலவுத் திட்டத்திலும் இவை பிரதிபலிக்கும்.
 

       2009ஆம் ஆண்டின் இலவச மற்றும் கட்டாய கல்விக்கான குழந்தைகள் (RTE) சட்டம்பள்ளிகூட கட்டிடத்தின் விதிமுறைகள் மற்றும்  தரநிலை பற்றி எடுத்துரைக்கிறது. எல்லா வானிலைக்கும் ஏற்றவாறு அந்தக் கட்டிடம் இருக்கவேண்டும் என்பதுடன், கட்டாயம் அந்தப் பள்ளி விளையாட்டுத்திடலை பெற்றிருக்க வேண்டும். 2015-16 ஆம் ஆண்டின், கல்விக்கான,  ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு 54.94% அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் 78.02% அரசு மேல் நிலைப் பள்ளிகளில் விளையாட்டுத் திடல் வசதி உள்ளதாக கூறுகிறது. மேலும், பள்ளிகளில் விளையாட்டுத்திடல் வசதி இல்லாத பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, அந்தப் பள்ளிகள்,  அருகிலுள்ள விளையாட்டுத் திடல்களை, நகராட்சி பூங்காக்களில் இருக்கும் வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில், குழந்தைகள்  வெளிப்புற விளையாட்டுகள்  மற்றும் வேறுவகையான உடல்பயிற்சி சார்ந்த செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

 
       கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விளையாட்டு வசதிகள் உருவாக்க, ஓர் உள்ளார்ந்த அமைப்புமுறை உள்ளது.  கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடம் ஒன்று உருவாகும்போதே, அந்தப் பள்ளி மாணவர்களின் தேவை மற்றும் பள்ளிக்கூடத்திற்கு கிடைக்கும் நிலத்தின் அளவிற்கு ஏற்ப, விளையாட்டு உள்கட்டமைப்பு / திடலுக்குத் தேவையான இடம் ஒதுக்கி வைக்கப்படுகிறது. அதுபோன்றே, ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளிலும் ஓடுதளம், விளையாடுமிடம், கூடைப்பந்தாட்டத் தளம், கோ-கோ விளையாட வசதிகள் போன்றவை நிர்மாணிக்கப்படுகின்றன.
       அதன் இணைப்பு சட்ட விதிகளில் விளையாட்டுத் திடல்களின் அமைப்பதற்கான தேவையை சிபிஎஸ்இ (CBSE)  சேர்த்துள்ளது.  இணைப்பு சட்ட விதிகள், பிரிவு 3.3 (ii) (a) இவ்வாறு கூறுகிறது. “ ஒரு பள்ளிக்கூடத்தை நிர்வகிக்கும், கம்பெனி சட்டம் 1956இன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கும் பள்ளி / சங்கம் / அறக்கட்டளை / அல்லது கம்பெனியோ, அல்லது கம்பெனி சட்டம் 1956இன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கும் அந்த சங்கம் / அறக்கட்டளை அல்லது கம்பெனி ஆகியவற்றை நிர்வகிக்கும் பேரவையோ அல்லது வேறு மதம் சார்ந்த அமைப்போ, கட்டாயமாக இரண்டு ஏக்கர் (அல்லது அனுமதிக்கப்பட்ட அளவின் படி) நிலமும் அந்த நிலத்தின் பரப்பின் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் ஒரு கட்டிடமும் மற்றும் மீதமுள்ள இடத்தில் முறையான விளையாட்டுத் திடலும் பெற்றிருக்க வேண்டும்.”  

இணைப்பு சட்ட விதிகள் 8.6 ஆம் பிரிவு இவ்வாறு கூறுகிறது. “மாணவர்களின் பொழுதுபோக்கு செயல்பாடுகளுக்கும், உடல்கல்வி அளிப்பதற்கும், மேலும் பல்வேறு செயல்களை நடத்துவதற்கும், கல்வி வளர்ச்சிக்குத் தேவையான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், அவர்களின் சமூக, கலாச்சார மற்றும் அறப்பண்புகளின் மேம்பாடு மற்றும் அவர்களின் உடல்நலன் பாதுகாப்பிற்கு உதவக் கூடிய தேவையான வசதிகளை பள்ளிக்கூடம் பெற்றிருக்க வேண்டும்.”

சிபிஎஸ்இ இணைப்பு சட்ட விதிகள் 8.7 வது பிரிவின்படி, ஒவ்வொரு பள்ளிக்கூடமும் கிழ்க்கண்ட விளையாட்டு வசதிகளை பெற்றிருக்க வேண்டும்: (1) 200மீட்டர் ஓடுதளம் ஒன்றை அமைக்கும் வகையில் விளையாடுமிடம், (2) கபடி மற்றும் கோ கோ விளையாட்டிற்கு போதுமான இடம் மற்றும் (3) கைப்பந்து விளையாடும் வசதி.

இராஜ்ய சபாவில் இன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில்,  மனிதவளத் துறை மத்திய இணை அமைச்சர் திரு உபேந்திர குஷ்வாகா அவர்கள் இந்த விவரங்களை  தெரிவித்தார்.



(Release ID: 1504361) Visitor Counter : 61


Read this release in: English