மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

உயர் கல்வியின் குறிக்கோள்

Posted On: 31 JUL 2017 3:49PM by PIB Chennai

வேலைவாய்ப்பு-சார்ந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதில் அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்துகிறது. மாணவர்களை சமூக  உணர்வுடன், பொறுப்புள்ள குடிமக்களாக உருவாவதற்கு ஊக்குவிக்கிறது; உழைப்பை ஒரு கௌரவமாக கருதவும், சமூக மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்பு உணர்வை இளைஞர்களின் மனதில் பதிய வைக்கவும் முயல்கிறது. அரசாங்கம்  தேசியத் திறன் தகுதி கட்டமைப்பு (NSQF) ஒன்றை அறிவித்துள்ளது. ஒரு மனிதர், வேலைச்சந்தையில் தேவைப்படும் தகுதியுடமைத் தரஅளவினை பெறுவதற்கும்  வேலைச் சந்தைக்கு மாறுவதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்வதற்கும் இது உதவுகிறது; மேலும் தேவைப்படும் நேரங்களில், தனது தகுதியுடமையை உயர்த்திக் கொள்ளவும் முழுமையான முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கும் உதவும் வகையில் மேலும் அதிகத் திறன்களை பெறுவதற்கு, நிறுவனங்களைத் தேடிச் செல்வதற்கும் இந்த அமைப்பு உதவிசெய்கிறது.


     இதற்காக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(AICTE)  பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளது.  தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களிலிருந்து வெளிவரும் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் அளவை மேம்படுத்துவதற்காக,  தேசிய வேலைவாய்ப்பு மேம்படுத்தல் அமைப்பு (NEEM) மற்றும் வேலைவாய்ப்பு மேம்படுத்தல் பயிற்சி திட்டம் (EETP) போன்றவற்றை ஏற்படுத்தியுள்ளது.   வேலைவாய்ப்பு மேம்படுத்தல் பயிற்சி திட்டத்தின் (EETP)  கீழ், மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு முன்னோடி தனியார் கம்பெணிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) சமீபத்தில் கையெழுத்திட்டுள்ளது. இவை தவிர்த்து, கட்டாய உள்ளிருப்பு பயிற்சிகள், தொழிற்துறையுடன் கலந்தாலோசித்து பாடத்திட்ட திருத்தங்கள் போன்ற திட்டங்களுக்கும் AICTE ஒப்புதல் அளித்துள்ளது; தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து வெளிவரும் மாணவர்களின் வேலையில் சேரும் தகுதியை உயர்த்தும் வகையில், படிப்பின் இறுதியில் தொழிற்துறை சார்ந்த தயார்நிலைப் பயிற்சி அளிக்கும் திட்டத்திற்கும் அது ஒப்புதல் அளித்துள்ளது.


     மாணவர்களின் வேலையில் சேரும் தகுதியை உயர்த்தும் வகையிலும் அவர்களை தொழிற்துறைக்கு தயார் செய்யும் வகையிலும் சமூகநலக் கல்லூரிகள், B.Voc சட்டப் படிப்பு, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிள் தீன் தயாள் உபாத்யா கௌசல் கேந்திரங்கள் ஆகியனவற்றை பல்கலைக் கழக மானியக் குழு (UGC) தொடங்கியுள்ளது.


     பல்கலைக் கழக மானியக் குழு (UGC)வின் வழியாக, “வேலை வாய்ப்புச் சார்ந்த படிப்புகளுக்கான” திட்டத்தை இந்த அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இந்தப் படிப்புகளைத் தேர்ந்தெடுப்போர்,  அறிவு, திறன்கள், ஊதியத்தை அடிப்படையாக கொண்ட துறையில் உடனடி வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன்களை பெறுவதற்கு பொதுவான நிலையிலும்,  குறிப்பாக, சுயவேலை வாய்ப்பிற்கும் இந்தக் கோர்ஸ்கள் உதவும். இதனால் மேனிலை பட்டப் படிப்பிற்கான உயர்கல்வி நிறுவனங்களின் அழுத்தத்தை குறைக்க இது உதவும். வழக்கமான பட்டப் படிப்புகளான, பி.காம்/பி.ஏ/பி.எஸ்சி போன்றவற்றிற்கு இணையான சான்றிதழ் / டிப்ளமோ / உயர்நிலை டிப்ளோமா கோர்ஸ்களின் வடிவங்களில் இந்தக் கல்வி அளிக்கப்படுகிறது.

       மேலும்,      பல்கலைக்கழகங்களும் அவற்றுடன் இணைந்துள்ள கல்லூரிகளும், குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, அவர்கள் வழங்கும் பல்வேறு பாடத்திட்டங்களை ஆய்விற்கு உட்படுத்த வேண்டும்; அவற்றை திருத்தி அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று, பல்கலைக் கழக மானியக் குழு (UGC) நாட்டிலிருக்கும் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வாறு பாடத்திட்டங்களை ஆய்விற்கு உட்படுத்தும்போது, அவற்றை திருத்தி அமைக்கும் செயல்களில் ஈடுபடும்போது, அந்தப் பல்கலைக்கழகங்கள், மாணவர்களை வேலையில் அமர்த்த உதவும் வகையில், நடைமுறையில் இருக்கும்,  தேவையிருக்கும் மற்றும் கிடைக்கும் திறன்களின் தரஅளவை கணக்கில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில்,  மனிதவளத் துறை மத்திய இணை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே இந்த விவரங்களை  தெரிவித்தார்.

*****



(Release ID: 1504358) Visitor Counter : 93


Read this release in: English