தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

இந்தியாவிற்கும் எத்தியோப்பியாவிற்கும் இடையே தகவல், தொடர்பு மற்றும் ஊடகத் துறைகளில் ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 27 SEP 2017 4:07PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் இந்தியாவிற்கும் எத்தியோப்பியாவிற்கும் இடையே “செய்தி, தொடர்பு மற்றும் ஊடகத் துறைகளில் ஒத்துழைப்பு” தொடர்பான ஒப்பந்தம் செய்து கொள்ள தனது ஒப்புதலை வழங்கியது.

இந்த இரு நாடுகளிடையே உள்ளடங்கிய வளர்ச்சிக்கான தகவல்களை பரப்பவும், அதன் வீச்சை அதிகரிக்கவும் செய்தி, தொடர்பு மற்றும் ஊடகம் ஆகியவற்றின் வளர்ந்து வரும் வலிமையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. பரிமாற்ற திட்டங்களின் மூலம் இரு நாட்டு மக்களுக்கு இடையேயான தொடர்பையும் இது அதிகரிக்கும். செய்தி, தொடர்பு மற்றும் ஊடகம் ஆகிய துறைகளில் சிறந்த செயல்பாடுகள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை இந்த இருநாடுகளும் பங்கிட்டுக் கொள்வதற்கான வாய்ப்பையும் இது வழங்கும்.

இந்த இரு நாட்டு மக்களுக்கும் மேலும் அதிகமான வாய்ப்புகளை வழங்கவும், பொதுவான பொறுப்புணர்வை உருவாக்கவும் வானொலி, அச்சு ஊடகம், தொலைக்காட்சி, சமூக ஊடகம் போன்ற வெகுஜன ஊடக கருவிகளின் மூலம் ஒத்துழைப்பை ஊக்குவிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

நிறுவனக் கட்டமைப்பின் மூலம் இரு நாடுகளுக்குமிடையே தூதுக் குழுக்கள், நபர்கள் ஆகியோரை பரிமாறிக் கொள்ள இந்த ஒப்பந்தம் வழிவகுப்பதோடு, ஒவ்வொருவரின் சிறந்த செயல்பாடுகளிலிருந்து கற்றுக் கொள்வது, சமநிலை, உள்வாங்கிக் கொள்வது ஆகியவற்றுக்கான வாய்ப்புகளையும் அவர்களுக்கு வழங்கும்.
 

*****


(Release ID: 1504319) Visitor Counter : 128


Read this release in: English