நிதி அமைச்சகம்

(1) வங்கிகளிடையே உள்ளூர் பணத்தில் கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம், (2) பிரிக்ஸ் அமைப்பின் வங்கிகளுக்கிடையேயான ஒத்துழைப்பு ஏற்பாட்டின் கீழ் ஈடிம் வங்கியின் கடன் தகுதி குறித்த ஒத்துழைப்பிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவற்றில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 27 SEP 2017 4:18PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை (1) வங்கிகளிடையே உள்ளூர் பணத்தில் கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம், (2) பிரிக்ஸ் அமைப்பின் வங்கிகளுக்கிடையேயான ஒத்துழைப்பு ஏற்பாட்டின் கீழ் டிம் வங்கியின் கடன் தகுதி குறித்த ஒத்துழைப்பிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவற்றில் கையெழுத்திட தனது ஒப்புதலை வழங்கியது. இந்த ஒப்பந்தம், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகிய இரண்டுமே பொதுவானதொரு உடன்பாடு என்பதோடு அதன் தன்மையில் கட்டுப்பாடு அற்றவை என்ற வகையில் எக்சிம் வங்கியின் இயக்குநர்கள் குழு இது குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும்  தங்களது கட்டமைப்பிற்குள் தனிப்பட்ட ஒப்பந்தங்கள், உறுதிமொழிகள் ஆகிய எதையும் முடித்துக் கொள்ளவும் இதன் மூலம் அனுமதிக்கப்படுகிறது.

 

தாக்கம்

 

பரஸ்பர நலன்கள் என்ற வட்டத்திற்குள் பல நாடுகளுக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள இந்த ஒப்பந்தங்கள் வழிவகுக்கும். இது பிரிக்ஸ் நாடுகளுக்குள் அரசியல், பொருளாதார உறவுகளை மேலும் ஆழப்படுத்தும்.

 

இத்தகைய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது என்பது எக்சிம் வங்கியை சிடிஎஸ், விஇபி, பிஎன்டிஇஎஸ் போன்ற வளர்ச்சிக்கான பெரும் நிதி நிறுவனங்களுடன் சர்வதேச அரங்கில் செயல்பட வைக்கும். இந்த பொதுவான ஒப்பந்தத்தை சாதகமாகப் பயன்படுத்திக்  கொண்டு எக்சிம் வங்கி சரியானதொரு தருணத்தில் தனது வர்த்தகத்திற்குத் தேவையான நிதி ஆதாரங்களை திரட்ட இந்த உறுப்பினர் நாட்டு நிறுவனங்களுடன் இருதரப்பு ஒப்பந்தங்களை செய்து கொள்ள வழிவகுக்கும். வணிகரீதியான வழிமுறைகளில் கூட்டாக நிதி வழங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும்போது எந்தவொரு இரு உறுப்புநாடுகளின் நிறுவனங்களும் (உதாரணமாக இந்தியாவும் தென் ஆப்ரிக்காவும்) ஒரே நாட்டுப் பணத்தில் இரு நிறுவனங்களும் கடன் வழங்குவதற்கான வாய்ப்பும் கூட இதில் அமைந்துள்ளது.

 

பின்னணி

 

எக்சிம் வங்கி இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தை வளர்ப்பதோடு, அதற்கான நிதியுதவியைச் செய்வது, வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது ஆகியவற்றிலும் ஈடுபட்டு வரும் அமைப்பாகும். தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்வது, ஏற்றுமதிக்கான பொருட்களை வளர்த்தெடுப்பது, ஏற்றுமதிக்கான உற்பத்தி, சரக்குகளை ஏற்றி அனுப்புவதற்கு முன்பாகவும், ஏற்றி அனுப்பிய பின்பும் ஏற்றுமதிக்கான கடன்களை வழங்குவது, வெளிநாடுகளில் முதலீடு செய்வது போன்ற வர்த்தக செயல்பாட்டின் பல்வேறு கட்டங்களிலும் போட்டித் தன்மையுடன் கூடிய நிதியுதவியை வழங்கி வருகிறது.

 

வங்கிகளுக்கு இடையேயான உள்ளூர் பணத்தில் கடன் ஏற்பாட்டிற்கான ஒப்பந்தம்

 

மார்ச் 2017-ல் முடிவுக்கு வந்த பிரிக்ஸ் அமைப்பின் வங்கிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு ஏற்பாட்டின் கீழ் உள்ளூர் பணத்தில் கடன் வசதியை வழங்குவதற்கான துவக்கநிலையிலான மூல ஒப்பந்தம் ஐந்தாண்டு காலம் செல்லத்தக்கதாக அமைந்திருந்தது. உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்த சில வங்கிகள் (உதாரணமாக சி.டி.பி.யும் வி..பி.யும்; சி.டி.பி.யும் பி.என்.டி..எஸ்.சும்) மூல ஒப்பந்தத்தின் கீழ் உள்ளூர் பணத்தின் மூலம் நிதியுதவி செய்து கொள்வதற்கான ஒப்பந்தங்களை 2012ஆம் ஆண்டில் இருதரப்பு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டதாக தெரிய வந்தது. தற்போதைய சூழ்நிலையானது இத்தகைய முறையைப் பயன்படுத்திக் கொள்வதற்கு உகந்ததாக இல்லையென்றாலும் கூட, எதிர்காலத்தில் பொருத்தமான வாய்ப்பு தோன்றக்கூடுமெனில் வசதியான அம்சமாக இதனை உயிர்ப்போடு வைத்திருப்பது பயனுள்ளதாக இருக்கும். எக்சிம் வங்கி தனக்கான நிதி ஆதாரங்களை நாட்டிற்கு வெளியே பல்வேறு வகைப்பட்ட பணங்களில் திரட்டியும், பணத்தை மாற்றிக் கொண்டும் அபாயத்தை தவிர்த்து வருகிறது.  இத்தகைய பொதுவான ஒப்பந்தம் என்பது உறுப்பு நாடுகளின் வங்கிகளுடன், இதில் கையொப்பமிடும் நாடுகளின்  சட்டங்கள், விதிமுறைகள், உள்நாட்டுக் கொள்கைகள் ஆகியவற்றுக்கு இணங்க இருதரப்பு ஒப்பந்தங்களைச் செய்து கொள்ள உதவியாக அமையும்.

 

கடன் தகுதி தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தம்

 

மற்றொரு வங்கியிலிருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்த வங்கிகளிடையே கடன் தகுதிகளை பகிர்ந்து கொள்ள இது உதவி செய்யும். எல்லை தாண்டி நிதியுதவி செய்யும் ஏற்படக் கூடிய கடன் தொடர்பான அபாயங்களைக் குறைக்க இது சிறந்ததொரு ஏற்பாடாகும். பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் மாற்று கடன் தகுதிக்கான முகமையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற கருத்துரைக்கான முன்னோட்டமாகவும் இத்தகைய ஏற்பாடு எதிர்காலத்தில் அமையும்.

 

2017 செப்டம்பர் 4 அன்று சீனாவின் சியாமென் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்கள் வெளியிட்ட சியாமென் அறிவிக்கையிலும் இந்த ஒப்பந்தம், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.

 

*******

 



(Release ID: 1504318) Visitor Counter : 84


Read this release in: English