உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் 1899 சதுர மீட்டர் நிலத்தை இந்திய விமான நிலைய ஆணையம் லக்னோ மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனுக்கு நிரந்தரமாகக் மாற்றித் தர மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 27 SEP 2017 4:25PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் 1899 சதுர மீட்டர் நிலத்தை இந்திய விமான நிலைய ஆணையம் லக்னோ மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனுக்கு நிரந்தரமாக கைமாற்றித் தர தனது ஒப்புதலை வழங்கியது.

 

டிரான்ஸ்போர்ட் நகர் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கான நுழைவு வாயில்/ வெளிவாயில் கட்டமைப்பிற்கு என இந்த நிலப் பகுதி லக்னோ மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனுக்குத் தேவைப்படுகிறது. இது லக்னோ மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் செயல்பாட்டிற்கான தேவையாகும். பெருமளவிலான மக்கள் பயன்படுத்தவிருக்கின்ற பரந்த அளவிலான போக்குவரத்திற்கான பொதுமக்களின் பயன்பாட்டிற்கான திட்டம் ஆகும். பொது மக்களுக்கு மிகச் சிறந்த தொடர்பையும் வசதியையும் வழங்குவதாகவும் இத்திட்டம் அமையும்.

 

*****

 

 



(Release ID: 1504314) Visitor Counter : 99


Read this release in: English