பிரதமர் அலுவலகம்

பிரான்ஸ் நாட்டின் மெடெஃப் அமைப்பின் தலைவர் பிரதமருடன் சந்திப்பு

Posted On: 26 SEP 2017 6:23PM by PIB Chennai

பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரும் நிறுவனங்களின் கூட்டமைப்பான மெடெஃப் அமைப்பின் தலைவர் திரு. பியரி கட்டாஸ் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

 

2015 ஏப்ரலில் பிரான்சுக்கு தான் மேற்கொண்ட பயணத்தை பிரதமர் அப்போது அன்புடன் நினைவு கூர்ந்தார். அப்பயணத்தின்போது பிரெஞ்சு வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் பலருடன் தான் சந்தித்து உரையாடியதையும் அவர் நினைவு கூர்ந்தார். கடந்த பல வருடங்களாகவே இந்தியாவிற்கும் பிரான்சுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை வளர்த்தெடுப்பதில் இரு நாடுகளையும் சேர்ந்த வர்த்தக நிறுவனத் தலைவர்களின் மதிப்பிடற்கரிய பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.

 

இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையே அதிகரித்து வரும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் குறித்து திரு. கட்டாஸ் பிரதமருக்கு விளக்கினார்.

 

இந்தியாவின் நேரடி அந்நிய முதலீட்டில் ஈடுபடும் முதல் பத்து நாடுகளில் ஒன்றாக பிரான்ஸ் இருக்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் அதிகரித்து வரும் வர்த்தகச் சூழ்நிலை மற்றும் வளர்ந்து வரும் முதலீட்டு வாய்ப்புகள் ஆகியவற்றை பிரெஞ்சு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

****



(Release ID: 1504305) Visitor Counter : 102


Read this release in: English