பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

டிரைஃபெட் அமைப்பு தனது விற்பனை செயல்பாடுகளை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.

Posted On: 22 SEP 2017 9:23AM by PIB Chennai

மத்திய அரசின் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் பழங்குடியினர் உற்பத்திப் பொருட்கள் / விளைபொருட்கள் மேம்பாடு மற்றும் விற்பனைக்கான நிறுவன ஆதரவு என்ற திட்டத்தின் கீழ் நாட்டின் பழங்குடியின கைவிஞைனர்கள் நலனுக்காக பழங்குடியின கலை, கைவினைப் பொருட்கள் மேம்படுத்தும் நோக்கத்துடன் டிரைஃபெட் என்ற பொதுத்துறை நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

      தமது நோக்கங்களுக்கு இணங்க டிரைஃபெட் அமைப்பு தனது சில்லரை விற்பனை அங்காடிகளான ‘டிரைப்ஸ் இந்தியா’ –ன் எண்ணிக்கை உயர்த்தவும் இதர சில்லரை விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது. டிரைஃபெட் அமைப்பின் சில்லரை சந்தைச் செயல்பாடுகள் கீழே தரப்பட்டுள்ளன:

  1. ‘டிரைப்ஸ் இந்தியா’ சில்லரை விற்பனை நிலையங்கள்:

டிரைஃபெட் அமைப்பு பழங்குடியின உற்பத்திப் பொருட்களை விற்பனை  நடைமுறையில் மேம்பாட்டு முயற்சிகளினால் பழங்குடியினரின் வருமானத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அவர்களது பல்வேறு கைவினைப்பொருட்களின் விற்பனைக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது. டிரைஃபெட் அமைப்பு தனது முதலாவது டிரைப்ஸ் இந்தியா விற்பனை நிலையத்தை புதுதில்லி மாதவ் சாலையில் ஏப்ரல் 1999 –ல் தொடங்கியது. இதனை அடுத்து டிரைஃபெட் அமைப்பு இத்தகைய 42 சில்லரை விற்பனை நிலையங்களைத் தொடங்கியது. இதில் 29 அதன் சொந்த விற்பனை நிலையங்கள் ஆகும். இதர 13, மாநில நிலை அமைப்புகளின் உதவியுடன் ஒப்பந்த அடிப்படையில் செயல்படுகின்றன. இவற்றின் விற்பனை 2005-06 –ல் ரூ.162.56 லட்சத்திலிருந்து 2016-17 –ல் ரூ. 1117.85 லட்சமாக உயர்ந்தது.

  1. விற்பனைக்குக் கிடைக்கும் உற்பத்திப் பொருட்கள்:
  • உலோக கைவினைப் பொருட்கள்  
  • பழங்குடியின ஜவுளி வகைகள்
  • பழங்குடியின ஆபரணங்கள்
  • பழங்குடியின ஓவியங்கள்
  • பிரம்பு மற்றும் மூங்கில் பொருட்கள்
  • டெர்ராகோட்டா எனப்படும் சுட்டக்களிமண் மற்றும் கல் பானைகள்
  • பரிசுப் பொருட்களும் புதுமைப்  பொருட்களும்
  • இயற்கை உணவுப் பொருட்கள்

 

  1. கண்காட்சிகள்:

   பழங்குடியின கலை மற்றும் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக்காகவும் அவற்றின் விற்பனையை உயர்த்துவதற்காகவும் டிரைஃபெட் அமைப்பு பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டுக் கண்காட்சிகளில் பங்கேற்கிறது. அவற்றின் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

 

    1. ஆதி ஷில்ப்:

டிரைஃபெட் அமைப்பு ஆதி ஷில்ப் என்ற பெயரில் தேசிய பழங்குடியின கைவினைக் கண்காட்சியை நடத்துகிறது. இவற்றில் பழங்குடியின கைவிஞைஞர்கள் பழங்குடியின சுய உதவிக் குழுக்கள், பழங்குடியினருடன் இணைந்து செயல்படும் முகமைகள் / அமைப்புகள் ஆகியன பங்கேற்குமாறு அழைக்கப்பட்டு, தங்களது வளமான பழங்குடியின பாரம்பரியத்தைக் காட்சிப்படுத்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பழங்குடியின கைவினைஞர்கள் தங்களது கலை / கைவினைப் பொருட்களை கலை உணர்வு உள்ளவர்களிடம் நேரடியாகக் கொண்டு  சேர்க்க முடிகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் ரசனை, விருப்பங்கள் குறித்த தகவல்கள் பெறப்படுகின்றன. இதன் மூலம் சந்தைப் போக்கிற்கும், தேவைகளுக்கும் ஏற்ப பழங்குடியினர் தங்களது உற்பத்திப் பொருட்களின் வடிவமைப்புகளை மாற்றி அமைத்துக் கொள்ள முடிகிறது. சில நேரம் இந்த கண்காட்சியில் பழங்குடியினர் நாட்டிய நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. இது, பழங்குடியின கலை மற்றும் கலாச்சாரத்தை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான முயற்சியாகும்.

 

    1. ஆதிச்சித்ரா

டிரைஃபெட் அமைப்பு 2010 –ம் ஆண்டு முதல் ஆதிச்சித்ரா என்ற பெயர் கொண்ட முற்றிலும் பழங்குடியின ஓவியங்கள் இடம் பெறும் கண்காட்சிகளை நடத்துகிறது. இவற்றில் மத்தியப் பிரதேச கோண்டு, ஒடிசாவின் சவோரா, மகாராஷ்டிராவின் வார்லி, குஜராத்தின் பித்தோரா ஓவியங்கள் இடம் பெறுகின்றன. இந்த கண்காட்சிகளின் போது பழங்குடியின கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களது திறன்களை செயல் விளக்கமாக காட்ட ஏற்பாடு செய்யப்படுகிறது. கலை ரசிகர்களிடமிருந்து ஆதிச்சித்ரா கண்காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    1. உள்நாட்டு கண்காட்சிகளில் பங்கேற்பு

டிரைஃபெட் அமைப்பு பழங்குடியின கைவிஞைஞர்கள் உதவியுடன் மத்திய / மாநில அரசுகளின் இதர அமைப்புகள் ஏற்பாடு செய்யும் கண்காட்சிகளிலும் கைவினை மேளாக்களிலும் பங்கேற்கிறது இதன் மூலம் பழங்குடியின கைவினைஞர்களுக்கு அவர்களது கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. டிரைஃபெட் அமைப்பு ஆண்டொன்றுக்கு சுமார் 100 -ல் இத்தகைய கண்காட்சிகள் பங்கேற்கிறது.

    1. ஆக்டேவ்

டிரைஃபெட் அமைப்பு மத்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் வடகிழக்கு மண்டல நாட்டிய திருவிழாவான ஆக்டேவிலும் பங்கேற்கிறது. 2008-09 முதல் ஆக்டேவ் நிகழ்ச்சிகளுடன் டிரைஃபெட் அமைப்பு தொடர்பு கொண்டுள்ளது. இவற்றில் வடகிழக்கு மண்டல கைவினைஞர்கள் பங்கேற்கவும், தங்களது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

    1. சர்வ தேச கண்காட்சிகள்

இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு, கைவினைப் பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு சபை ஆகியவை பல்வேறு நாடுகளில் நடத்தும் சர்வதேச கண்காட்சிகள் / வர்த்தகப் பொருட்காட்சிகள் ஆகியவற்றில் டிரைஃபெட் அமைப்பு பங்கேற்கிறது. இவற்றில் பழங்குடியின கைவினைஞர்களிடம் பெறபட்ட உற்பத்திப் பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்படுகின்றன ஒவ்வொரு ஆண்டும் டிரைஃபெட் அமைப்பு 2 அல்லது 3 சர்வ தேச கண்காட்சிகளில் பங்கேற்கிறது.

 

  1. பழங்குடியின உற்பத்திப் பொருட்களைப் பெறுதல்:
    1. டிரைஃபெட் அமைப்புப் பட்டியிலிடப்பட்ட பழங்குடியின பொருட்கள் வழங்குபவரிடமிருந்து அவற்றை பெறுவதற்கான அமைப்புமுறை ஒன்றை உருவாக்கி உள்ளது, தனிநபர் பழங்குடி கைவினைஞர்கள், பழங்குடியின சுய உதவிக் குழுக்கள், பழங்குடியினருக்குப் பாடுபடும் அமைப்புகள் / முகமைகள் / தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் பழங்குடியின உற்பத்திப் பொருட்கள் வழங்குவோர் பட்டியலில் இடம் பெற முடியும். டிரைஃபெட் அமைப்பு அரசு நெறிமுறைகளுக்கு ஏற்ப இவர்களைப் பட்டியலில் சேர்க்கும். அனைத்து பெயர்களும்  கொண்ட முழுமையானப் பட்டியல் டிரைஃபெட் அமைப்பின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    2. பழங்குடியின கைவினைஞர்கள் மேளா:

                  பழங்குடிப் பொருட்களை வழங்வோர் எண்ணிக்கையை அதிகரித்து               அவர்கனை சில்லரை விற்பனை செயல்பாடுகளில் தொடர்புப்படுத்த              டிரைஃபெட் அமைப்பு பழங்குடி கைவினைஞர்கள் மேளாக்களை                 மாவட்ட மற்றும் வட்டார நிலைகள் ஏற்பாடு செய்கிறது. இதன் மூலம்           தொலை தூரத்தில் உள்ள பழங்குடியினரை சென்றடைய முடிகிறது: பழங்குடி கலை கைவினைப்பொருட்களை அந்த இனத்தைச் சேர்ந்த கைவினைஞர்கள், அவர்களது குழுக்கள் ஆகியவற்றிடமிருந்து நேரடியாக பெறமுடிகிறது. இந்த திட்டத்தின் படி மாநில அரசு / அமைப்புகள் உதவியுடன் டிரைஃபெட் அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட கண்காட்சி இடத்துக்கு பழங்குடி கைவினைஞர்களை வரவழைத்து தங்கள் உற்பத்திப் பொருட்களை காட்சிக்கு வைக்க ஏற்பாடு செய்கிறது. இந்த கண்காட்சிகளுக்கு டிரைஃபெட் அமைப்பு தனது கலை கொள்முதல் குழுவை அனுப்பி புதிய கைவினைஞர்கள், புதிய உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றை இனங்கண்டு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கிறது. இந்த நடவடிக்கை பழங்குடி கலை கைவினைப் பொருட்களை மூல நிலையிலேயே பெறுவதை அதிகரிப்பதுடன் டிரைஃபெட் அமைப்பின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக டிரைஃபெட் அமைப்பின் பல திட்டங்களின் பயனை பழங்குடியினர் பெற வாய்ப்பு ஏற்படுகிறது.

        ஆதிஷில்ப், ஆதிச்சித்ரா, பழங்குடியின கைவினைஞர்கள் மேளா ஆகியவை நடைபெறும் கால அட்டவனை அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பப்படுகிறது. அமைச்சகத்தின் மேலாண்மை தகவல் அமைப்பு பிரிவுக்கும் இதன் நகல் அனுப்பப்படுகிறது.

 

புதிய முயற்சிகள்:

  இந்த நிதியாண்டுக்கு டிரைஃபெட் அமைப்பு சில்லரை விற்பனை செயல்பாடுகளுக்கான கொள்முதல் இலக்காக ரூ. 20 கோடியும் விற்பனை இலக்காக ரூ. 40 கோடியும் நிர்ணயித்துள்ளன. அடுத்த நிதியாண்டின் இறுதியில் எட்ட வேண்டிய இலக்காக கொள்முதலுக்கு ரூ. 50 கோடியும் விற்பனைக்கு ரூ. 100 கோடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் உள்ள பழங்குடியின நலனுக்குப் பாடுபடும் சங்கங்கள், நிபுணர்கள் ஆகியோர் உதவியுடன் பழங்குடி கைவினைப் பொருட்களின் சப்ளையையும் தேவையையும் அதிகரிக்க தொடர்ந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

 

  இதற்கான சில்லரை விற்பனை நடவடிக்கைகளை மேம்படுத்த கீழ்கண்ட திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

விற்பனை இலக்குகள் கீழ்கண்ட வகைகளில் அமைக்கப்படும்:

 

   உரிமம் பெற்றோர் மூலமான விற்பனை - டிரைஃபெட் அமைப்பு தனது சில்லரை விற்பனையை பெருக்க பழங்குடி பொருட்கள் விற்பனையில் உரிமம் பெற்ற அங்காடிகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி டிரைஃபெட் அமைப்பு உரிமம் பெற்றவர்கள் இடத்திலேயே பொருட்களை வழங்கும். உரிமம் பெற்றவர்கள் டிரைஃபெட் நிர்ணயித்த அதிக பட்ச விற்பனை விலையில் இவற்றை விற்பனை செய்வர். இந்த பொருட்கள் அனைத்தும் டிரைப்ஸ் இந்தியா என்ற வர்த்தகப் பெயரில் விற்பனை செய்யப்படும். உரிமம் பெற்ற விற்பனையாளர்களுக்கு நிகர விற்பனையில் 10 முதல் 25% வரையிலான கமிஷன் வழங்கப்படும் விற்பனை தொகைகளை உரிமம் பெற்றோர் மாதம் ஒருமுறை செலுத்த வேண்டும். டிரைஃபெட் அமைப்பு மூலம் விற்பனை செய்யப்படும் அனைத்துப் பொருள்களிலும் பழங்குடியினர் கைவினை இலச்சினை ஹோலோ கிராம் / லேபில் / பெயரட்டை ஆகியவற்றில் பொறிக்கப்பட்டு அவற்றின் உண்மைத் தன்மை உறுதி அளிக்கப்படுகிறது.

 

    இளம் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட மூலமான விற்பனை: பழங்குடி உற்பத்தி பொருட்களில் திறமையான இளைஞர்கள் மூலம் வீடுவீடாகச் சென்று விற்பனை செய்யும் திட்டத்தை டிரைஃபெட் அமைப்பு மேற்கொண்டுள்ளது. இந்த இளைஞர்கள் டிரைஃபெட் அமைப்பின் இளம் தொழில் முனைவோர் என்று அழைக்கப்படுவார்கள். இவர்களிடம் மின்னணு பொருள் விளக்க கட்டகம் வழங்கப்படும் இவற்றில் விற்பனைப் பொருட்களின் புகைப்படம் மற்றும் முழு விவரங்கள் அடங்கியிருக்கும். அவர்களிடம் விற்பனைப் பொருட்களின் சிறிய மாதிரிகளும் வழங்கப்படும். இந்த இளைஞர்களுக்கு நிகர விற்பனைத் தொகையில் 10% -த்தை டிரைஃபெட் அமைப்பு கமிஷனாக வழங்கும்.

 

மின்னணு வர்த்தக மேடை மூலம் விற்பனை: பல்வேறு மின்னணு வர்த்தக மேடைகள் பழங்குடி உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு பெரிய வாய்ப்புகளை அளிக்கின்றன. டிரைஃபெட் அமைப்பு ஏற்கனவே, snapdeal.com மற்றும் amazon.com ஆகிய மின்னணு வர்த்தக மேடைகளை பழங்குடியின பொருட்கள் விற்பனைக்குப் பயன்படுத்தி வருகிறது. எனினும் விற்பனையை விரிவாக்க இதர மின்னணு வர்த்தக மேடைகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

 

டிரைப்ஸ் இந்தியா விற்பனை நிலையம் மூலம் விற்பனை: டிரைப்ஸ் இந்தியா விற்பனை நிலையங்களை உள்ளேயும் வெளியேயும் அழகுப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து விற்பனையை பெருக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையங்களில் பழங்குடி பொருட்களை போதிய அளவில் சேமித்து விற்பனை செயல்பாடுகளில் அக்கறையும், ஆற்றலும் உள்ளவர்களை விற்பனையாளர்களாக நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

          நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை: மக்களை அவர்கள் வாழும் இடங்களிலேயே சந்தித்து விற்பனையை மேம்படுத்துவதற்கு இந்த திட்டம் செயல்படுகிறது.

 

 விழாக்கால சலுகைகள்: பழங்குடி பொருட்களை ஊக்குவிக்கவும், கையிருப்புப் பொருட்களை விரைவாக விற்றுத் தீர்க்கவும், மொத்த விற்பனையை பெருக்கவும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

 

  1. பழங்குடி நண்பர்கள்: பழங்குடி பொருட்களை ஊக்குவிக்கவும் டிரைப்ஸ் இந்தியாவை வர்த்தகப் பெயராக நிலை நிறுத்தவும், நிலையான வாடிக்கையாளர்கள் தொகுதியை உருவாக்கவும் டிரைஃபெட் அமைப்பு பழங்குடி நண்பர்கள் அட்டையை வழங்குகிறது. இதனை வைத்திருப்போர் நாடெங்கும் உள்ள டிரைப்ஸ் இந்தியா விற்பனை நிலையங்களில் பெரும்பான்மையான பொருட்களுக்கு 20% தள்ளுபடியை பெற இயலும். மேலும், குறிப்பிட்ட விற்பனை நிலையத்தில் விழாக்கால சலுகை, இதர சலுகைகள் காலங்களில் கூடுதலாக 10% தள்ளுபடியைப் பெறுவார்கள் எனினும் மொத்த சலுகை 40%  மிகாமல் இருக்க வேண்டும்.
  2. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தள்ளுபடி திட்டம்: ஏற்கனவே, நடைமுறையில் உள்ள தள்ளுபடிக்கும் கூடுதலாக 10% தள்ளுபடி அனைத்து மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் இவர்கள் தங்கள துறை வழங்கியுள்ள அடையான அட்டைகளை காண்பித்து அனைத்து டிரைப்ஸ் இந்தியா விற்பனை நிலையங்களிலும் அனைத்து உற்பத்திப் பொருட்கள் மீதும் தள்ளுபடியைப் பெற்று கொள்ளலாம்.
  3. இதர சலுகைகள்: ரூ. 2000 –க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு கவர்ச்சியான பரிசுகள் வழங்கப்படும்.
  4. விழாக்கால தள்ளுபடி: குறிப்பிட்ட விழாக்கள் / தருணங்களின் போது உணவு மற்றும் இயற்கை உற்பத்திப் பொருட்களுக்கு 10% தள்ளுபடியும் இதர பொருட்களுக்கு 15% தள்ளுபடியும் வழங்கப்படும்.
  5. 40% தள்ளுபடி வரையிலான விற்பனை திட்டம்: சில குறிப்பிட்ட பொருட்களின் மீது அதிக பட்ச தள்ளுபடியாக 40% வழங்கப்படும். கையிருப்பு தீரும் வரை இந்த தள்ளுபடி வழங்கப்படும் (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)          

 

            பழங்குடி கைவினை முத்திரை: விற்பனை செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் பழங்குடியினரிடமிருந்து பெற்பட்டவையா என்பதை உறுதி செய்வதற்காக டிரைஃபெட் அமைப்பு மூலம் விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களும் “பழங்குடி கைவினை சின்னம்” என்பது ஹோலோகிராம் / லேபில் / பொருட்களில் கட்டும் அட்டை ஆகியவற்றின் மூலம் பொறிக்கப்படும்.

 

            கொள்முதல் இலக்குகள் கீழ்கண்ட வழிகளில் நடைபெறும்:

 

  • டிரைஃபெட் அமைப்பு கொள்முதல் நடவடிக்கைகளில் முக்கிய கவனம் செலுத்தும். டிரைஃபெட் அமைப்பின் ஒவ்வொரு மண்டல அலுவலகத்திற்கும் பழங்குடியினர் வாழும் ஒவ்வொரு மாநிலத்திலும் கூடுதலாக 100 பழங்குடி பொருட்கள் வழங்குவோரை அடையாளம் கண்டு தனது பட்டியலில் சேர்க்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • ஊரக மேம்பாட்டு அமைச்சகம், கைவினை மற்றும் கைத்தறி மேம்பாட்டு ஆணையக மண்டல அலுவலகங்கள், மாநில வனத்துறைகள், மாநில கைவினை / பழங்குடி மேம்பாட்டுத் துறைகள், புகழ்பெற்ற தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டுள்ள பழங்குடி சுய உதவி குழுக்களை பயன்படுத்தி பொருள் வழங்குவோர் எண்ணிக்கையை உயர்த்துதல். இந்த சுய உதவி குழுக்களை தரமான பழங்குடி பொருட்கள் வழங்குவதற்கான டிரைஃபெட் அமைப்பின் கொள்முதல் நடவடிக்கைகளில் பயன்படுத்துதல்
  • நிபுணர்கள் மற்றும் மூத்த கைவினைஞர்கள் ஆகியோரை, பழங்குடி கைவினைஞர்கள் அவர்களது உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றை அடையாளம் கண்டு அதன் மூலம் நிலையான பொருள் வழங்வோர் தளத்தை ஏற்படுத்துதல்.
  • டிரைஃபெட் அமைப்பு மற்றும் இதர அமைப்புகள் மூலம் பழங்குடி கைவினைஞர்களுக்கு பயிற்சி வழங்கி அவர்களை டிரைஃபெட் அமைப்புக்கு தங்களது உற்பத்திப் பொருட்களை வழங்கச் செய்தல்
  • தேர்ந்தெடுக்கப்பட்டப் பொருட்கள் சம்மந்தப்பட்ட பயிற்சி பெற்ற பழங்குடியினரை சுய உதவிக் குழுக்களாக அமைத்து தேன், புளி, மலைத் துடைப்பம் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை சில்லரை விற்பனை நிலையங்களுக்கு வழங்கச் செய்தல்
  • பழங்குடியினர் நலத்துறை, ஊரக மேம்பாட்டுத் துறை, புகழ்பெற்ற தொண்டு நிறுவனங்கள், பழங்குடியினர் பகுதிகளில் பணியாற்றும் நிபுணர்கள் ஆகியோருடன் மண்டல அலுவலகங்கள் முறையான கூட்டங்கள், பயிலரங்குகள் நடத்தி அவர்களிடமிருந்து கொள்முதல் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான கருத்துகளை கேட்டறிதல்.

 

விளம்பர இயக்கம்:

  பழங்குடி பொருட்களை ஊக்குவிக்கும் விளம்பர இயக்கத்தில் சுவரொட்டிகள், பதாகைகள், துண்டு பிரசுரங்கள், நிற்கவைக்கும் பதாகைகள், நடமாடும் வாகனங்கள், உள்ளுர் தொலைக்காட்சிகள், கார்கள் மற்றும் சுவர்களுக்கான ஸ்டிக்கர்கள், வானொலி விளம்பரங்கள், யூ-டியூப், ஃபேஸ் புக், கூகுல் போன்ற வலைதளங்களை போன்றவைகள் பயன்படுத்தப்படும். இதன் மூலம் பழங்குடி பொருட்கள் குறித்த தகவல்கள் பொதுமக்களை சென்றடைந்து நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.

பின்னணி:

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப் படி பழங்குடியினர் எண்ணிக்கை சுமார் 10.43 கோடியாகும். இது மொத்த மக்கள் தொகையில் 8.6% ஆகும். இவர்களில் 89.97% பேர் கிராமப் பகுதிகளிலும் 10.03% பேர் நகர் பகுதிகளிலும் வசிக்கின்றனர். எனவே 30 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் உள்ள 590 மாவட்டங்களில் வசிக்கும் 705 ஷெட்யூல்ட் பழங்குடியினர் குழுக்களிடமிருந்து கைவினைப் பொருட்களை பெருவதற்கு பெரிய வாய்ப்புகள் உள்ளன.

                  

****



(Release ID: 1504016) Visitor Counter : 282


Read this release in: English