ரெயில்வே அமைச்சகம்

ஏ1 பிரிவு ரயில் நிலையங்களில் இளம் வயது நிலைய இயக்குநர்களை நியமிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு

Posted On: 20 SEP 2017 6:20PM by PIB Chennai

முக்கிய ரயில் நிலையங்களில் புத்திக் கூர்மையுள்ள, துடிப்பான இளம் வயது அதிகாரிகளை நிலைய இயக்குநர்களாக நியமிக்க ரயில்வே அமைச்சர் திரு. பியூஸ் கோயல் உத்தரவின் பேரில் ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இந்த அதிகாரிகள் ரயில்வே துறையின் பல்வேறு செயல் நிலை சேவைப் பிரிவுகளில் இருந்து உரிய ஆய்வு மற்றும் தேர்வுக்குப் பின்னர் நியமிக்கபடுவார்கள். இவர்களுக்கு ஒருங்கிணைப்பு மற்றும் பொதுமக்கள் தொண்டு ஆகியவற்றில் தொடக்க நிலை பயிற்சி வழங்கப்படும். முன்னதாக ரயில்வே அமைச்சகம் ஏ1 நிலை ரயில் நிலையங்களில் நியமிப்பதற்கான 75 நிலைய இயக்குநர்கள் பதவியை உருவாக்கி உள்ளது. இந்த நிலைய இயக்குநர்கள் ரயில் நிலையங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த மையங்களாக செயல்படுவதை உறுதி செய்வார்கள். கண்காணிப்புள்ள உணர்வுப்பூர்வ வாடிக்கையாளர் சேவை மற்றும் மிக உயர்ந்த வர்த்தக உணர்வு ஆகியவற்றை இவர்கள் உறுதி செய்ய வேண்டுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலைய இயக்குநர்களும் அவர்களது குழுவினரும் கீழ்கண்ட செயல்களில் ஈடுபடுவார்கள்:

  • வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடனான, மரியாதையுடன் கூடிய சிக்கல் இல்லாத சேவை
  • ரயில் நிலையங்களிலும் நின்றுக் கொண்டிருக்கும் ரயில்களிலும் தூய்மை பராமரிப்பு
  • ரயில் டிக்கெட் விற்பனை மற்றும் முன்பதிவு அலுவலகங்களின் சிறப்பான செயல்பாடு
  • ரயில் நிலையங்களில் ரயில்களின் நேரம் தவறாமை, ரயில் நிலைய நடை மேடைகளில் உரிய நேரத்தில் ரயில் பெட்டித் தொடரை நிறுத்துவதும் விலக்கிக் கொள்வதும்
  • ரயில் நிலையத்தில் பயணிகள் தொடர்பான அனைத்து வசதிகளையும் குறை நிவர்த்தி செய்து சரியாகப் பராமரித்தல்
  • பயணியர் விசாரணை அமைப்பு, ரயில் தகவல் அறிவிப்புப் பலகை ஆகியவற்றை பராமரித்தல்
  • சரக்கு அலுவலகம் திறம்பட, வெளிப்படையாக பயணிகளுக்கு ஏற்ப செயல்படுவதை உறுதி செய்தல்
  • ரயில் நிலையத்தில் உணவு சேவை / விற்பனை நிலையங்களை கண்காணித்தல்
  • குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்தல்
  • பயணியர் பாதுகாப்பு
  • ரயில் நிலையத்தை பயணியருக்கு மிகச் சிறந்த மையமாக அமைக்கும் இதர பணிகள்

 

     மேல் குறித்த செயல்களை திறம்படவும் உரிய வகையிலும் செய்வதற்காக பல்வேறு துறைகள் உள்ளடக்கிய குழு நிலைய இயக்குநர்களுக்கு உதவியாக அமைக்கப்படும். போக்குவரத்து வசதி திட்டங்கள் மற்றும் அதன் அமலாக்கம், பயணியர் வசதிப் பணிகள் ஆகியவை தொடர்பான முடிவுகள் மேற்கொள்ளப்படும் போது நிலைய இயக்குநர்களின் கருத்துகளும் பரிசீலிக்கப்படும். ரயில் நிலையத்தில் ரயில் கட்டணங்களை தவிர வர்த்தக விளம்பரங்கள் போன்ற வருவாய் பெருக்கும் நடைமுறைகளில் நிலைய இயக்குநர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும். இது போன்ற அனைத்து செயல்களிலும் நிலைய இயக்குநர்கள் சம்மந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் / உயர் அதிகாரிகள் ஆகியோரின் உதவியைத் தேடிப் பெற வேண்டும்.     

 

        1 பிரிவைச் சேர்ந்த சில ரயில் நிலையங்கள் வருமாறு: புது தில்லி, டேராடுன், ஹவுரா, சிஎஸ்டி மும்பை, விசாகப்பட்டினம், முகல்சராய் சந்திப்பு, ஆக்ரா கன்டோன்மென்ட், நியூ ஜல்பாய்குரி, ஜோத்பூர், கரக்பூர், திருவனந்தபுரம், சென்னை சென்ட்ரல், பெங்களுர் சிட்டி, ஹைதராபாத் மற்றும் பல.

    முழுமையான பட்டியலுக்கு கீழ்கண்ட வலைதளத்தில் பார்க்கவும்  

http://pibphoto.nic.in/documents/rlink/2016/nov/p201611202.pdf

*********

 

AKS/MKV/ENS


(Release ID: 1503789) Visitor Counter : 160


Read this release in: English