நிதி அமைச்சகம்

வியாபாரப் பெயர்கள் கொண்ட தானியங்கள், பயறுவகைகள், மாவு ஆகியவை தொடர்பான ஜிஎஸ்டி அறிவிக்கை

Posted On: 20 SEP 2017 8:49PM by PIB Chennai

ஹைதராபாத்தில் இம்மாதம் 9 –ம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி சபையின் 21 –வது கூட்டத்தில் பெட்டகங்களில் வைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட வர்த்தக பெயர்கள் கொண்ட தானியங்கள், பயறு வகைகள், மாவு போன்ற பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டது.

  1. 15.5.2017 அன்று வர்த்தகப் பெயர் பதிவு செய்யப்பட்ட பொருட்கள் 5% ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் வருபவை. இப்பொருட்களின் வர்த்தகப் பெயர் இந்த தேதிக்குப் பின் பதிவு நீக்கம் செய்யப்பட்டதா இல்லையா என்பதைக் கருத்தில் கொள்ளாமல் இந்த வரி விதிக்கப்படும்.
  2. பதிவு உரிமைச் சட்டம் 1957 –ன் கீழ் 15.05.2017 அன்று பதிவு செய்யப்பட்ட வர்த்தகப் பெயர் கொண்ட பொருட்கள் 5% ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கான பதிவு செய்யப்பட்ட வர்த்தகப் பெயர் எனக் கருதப்படும்.
  3. எந்த ஒரு நாட்டிலாவது தற்போதைக்கு அமலில் உள்ள எந்த ஒரு சட்டத்தின் படியும் 11.05.2017 அன்று பதிவு செய்யப்பட்ட வர்த்தகப் பெயர் கொண்ட பொருட்களும் 5% ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் வருபவை என்றுக் கருதப்படும்.
  4. செயல்படுத்தக் கூடிய கோரிக்கைகளுக்கு உட்படுத்தப்படும், அடையாளம் அல்லது பெயர் கொண்ட பொருட்களும் 5% ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் வருபவை என்றுக் கருதப்படும்.

2. ஜிஎஸ்டி வரி வீத மாற்றங்கள் குறித்த ஜிஎஸ்டி சபையின் பரிந்துரைகள் அமலுக்கு வருவதைப் பற்றிய அறிவிக்கை 2017 செப்டம்பர் 22 –ம் தேதி வெளியிடப்படும் இதில் பொருட்களின் பெயர் மற்றும் இதர நிபந்தனைகள் சேர்க்கையாக வெளியிடப்படும்.

 

3. மேலே குறித்த ஜிஎஸ்டி சபையின் பரிந்துரைகள் தொடர்பான அறிவிக்கையில், வர்த்தகப் பெயரின் மீது கோரிக்கைகளோ அல்லது நீதிமன்றத்தில் அமலாக்கக் கூடிய  உரிமைகளோ இருக்கும் நிலையில் 5% ஜிஎஸ்டி அவற்றிற்குப் பொருந்தும் என்பது தெளிவாக்கப்படும். எனினும் சம்மந்தப்பட்ட நபர் தாமாகவே முன்வந்து செயல்படுத்தக் கூடிய கோரிக்கை  அல்லது நீதிமன்றத்தில் அமலாக்கக் கூடிய  உரிமைகள் ஆகியவற்றை விலக்கிக் கொண்டால் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்ந 5% ஜிஎஸ்டி பொருந்தாது என்றும் அறவிக்கையில் தெரிவிக்கப்படும்:

 

  1. சம்மந்தப்பட்ட நபர், மத்திய வரிகள் ஆணையர் அல்லது மாநில வரிகள் ஆணையர் அல்லது யூனியன் பிரதேச வரிகள் அதிகாரி போன்ற அதிகாரம் பெற்ற அமைப்பிடம் இத்தகைய வர்த்தகப் பெயர் குறித்த, செயல்படுத்தக் கூடிய கோரிக்கை அல்லது நீதிமன்றத்தில் அமலாக்கக் கூடிய  உரிமைகள் ஆகியவற்றை தாமாகவே முன்வந்து விலக்கிக் கொண்டாக பிரமாண வாக்குமூலம் அளித்திருக்க வேண்டும்.
  2. இப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ள பெட்டகத்தின் மீது ஆங்கிலம் மற்றும் உள்ளுர் மொழிகளில் அழியாத மையினால் சம்மந்தப்பட்ட வர்த்தக பெயர் மீதான கோரிக்கையை அல்லது அமல் படுத்தக்கூடிய உரிமையை தாமாகவே முன்வந்து விலக்கிக்கொண்டதாக அச்சிட வேண்டும்.

*****

 

DSM/SBS/NT



(Release ID: 1503786) Visitor Counter : 174


Read this release in: English