குடியரசுத் தலைவர் செயலகம்
நமது இளைஞர்களின் சக்தியைப் பயன்படுத்த கல்வி மிகவும் முக்கியமானது: இந்த சக்தியை நமது நாட்டை மேம்பட்ட சமுதாயமாக மாற்ற பயன்படுத்த வேண்டும் என்கிறார் குடியரசுத் தலைவர்
புதுதில்லியில் இன்று ஏசு மற்றும் மேரி கல்லூரியின் பொன்விழாக் கொண்டாட்டங்களின் தொடக்க நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
Posted On:
20 SEP 2017 5:22PM by PIB Chennai
ஏசு மற்றும் மேரி கல்லூரியின் பொன்விழா கொண்டாட்டங்களை தொடங்கி வைப்பதில் தான் பெருமிதம் கொள்வதாக குடியரசுத் தலைவர் கூறினார். இந்த நிறுவனம் கல்விக்காக புதுதில்லியிலும் நமது நாட்டிலும் பெரிய அளவில் பங்களிப்பதாக அவர் கூறினார். கடந்த 50 ஆண்டுகளாக இந்த நிறுவனம் இளம் பெண்களுக்கு கல்வி அளித்து, உயர்நிலைகளை அடையவும், தங்கள் திறன்களை முழுமையாகப் பயன்படுத்தவும், சமுதாயத்திற்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிக்கவும், தேச நிர்மான நடைமுறையில் பங்கேற்கவும் தயார்செய்துள்ளது.
இந்தியாவில் 2000 ஆண்டுகள் வரலாற்று பின்ன்னியுடன் நமது பண்பாட்டிற்கு பெரும் பங்காற்றியுள்ள கிறிஸ்தவ சமுதாயம் கல்வித் துறையில் தனக்கென சிறப்புப் பங்கினை உருவாக்கி உள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்த கல்லூரியைப் போன்ற மிஷனரி நிறுவனங்கள் கல்வி அறிவு, அர்பணிப்புடன் கூடிய போதனை, கல்வித் திறன் ஆகியவற்றின் சின்னங்களாக உருவெடுத்துள்ளன. இந்த நிலைமை சாலப் பொருத்தமுடையது. ஏனெனில் அனைத்து சமயங்களும் அடிப்படையில், நம்மை தொடர்ந்து கற்கவும் பரிணமித்து வளர்ச்சி அடையவும், அறிவைப் பெறவும், ஞானத்தைப் பெறவும் அதன் மூலம் சிறந்த மனிதர்களாக ஆக வேண்டுமென்றும் வலியுறுத்துகின்றன.
கல்வியின் இலக்கு வெறும் அறிவை மற்றும் பெறுவது அல்ல என்று குடியரசுத் தலைவர் கூறினார். அறிவு பெறுதல் தொடக்கநிலை ஆகும். கல்வியால் பெற்ற இந்த அறிவை சமுதாயத்தின் வாய்ப்புகள் அற்ற பிரிவினரின் நலத்தை உயர்த்தப் பயன்படுத்துவது அவசியம். பட்டங்களை பெறுபவர்கள் கற்றவர்கள் எனக் கொள்ளமுடியாது, இந்தப் பட்டங்களை, அதன் கீழ் உள்ள கல்வி அறிவை தேச நிர்மாணத்துக்கு பயன்படுத்துபவர்தான் கல்வி கற்றவர் ஆவார். ஏசு மற்றும் மேரி கல்லூரி இதர கல்லூரிகளுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது. இந்த கல்லூரி தனது பொன்விழா ஆண்டில் தனக்கு அருகில் உள்ள புதுதில்லி மாநகராட்சி பள்ளியை தனது பங்காளராக ஏற்றுக் கொண்டு அதன் மேம்பாட்டுக்கு உதவு முன் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தனது சமுதாயத்திற்கு தான் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்கு இது தலைசிறந்த உதாரணமாகும். இந்த நடைமுறையை இதர கல்லூரிகளும் பின்பற்றலாம்.
இந்தியா தற்போது பல வகைகளில் மாற்றங்களை கொண்டு வரும் நிலையில் உள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். நாம் மிகத் தொன்மையான நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள் ஆனால் வயதில் இளமை கொண்டவர்கள். 21 –ம் நூற்றாண்டின் முதல் பாதியில் உலக நாடுகளிலேயே மிக அதிகமான இளைஞர்கள் எண்ணிக்கையைக் கொண்ட நாடாக இந்தியா மாறும் எனவே இளைஞர்களின் ஆற்றலை தக்கவாறு பயன்படுத்திக் கொள்வதும் சமுதாய மேம்பாட்டிற்காக அதனை திசை திருப்புவதும் மிக முக்கியமானதாகும். இந்த முயற்சிக்கு கல்வி அடிப்படையாகும். எனவே கல்வி வாய்ப்புகளை பெருக்குவதும் தரமான கல்வியை வழங்குவதும் முக்கியத்துவம் பெருகின்றன.
நமது பொருளாதாரத்தின் இயல்பும், பணியிடம் என்கிற கருத்தும் தற்போது மாறி வருவதாக குடியரசுத் தலைவர் கூறினார். நான்காவது தொழில் புரட்சியும், டிஜிட்டல் மயம் மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் சில வேலைகளை அறவே அகற்றவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் பல புதிய வாய்ப்புகளையும் அவை உருவாக்கியுள்ளன. நமது சமுதாயம் இத்தகைய திடீர் மாற்றங்களை எவ்வாறு கையாளுகிறது என்பது நமது உயர் கல்வி நிறுவனங்கள் இந்த மாற்றங்களுக்கு எவ்வகையில் பதில் நடவடிக்கை எடுக்கின்றன என்பதைப் பொறுத்து அமையும். நமது உயர் கல்வி அமைப்பினை தரம் உயர்த்துவது, அதன் மூலம் எதிர் கால மாற்றங்களை சமாளிப்பது மிகவும் அவசியம். நமது கல்வி சார்ந்த அடிப்படை வசதிகள், பாடத்திட்டங்கள், கல்வி முறைகள் ஆகியன 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்றவாறு மாறியுள்ளன. இவை விரைந்து செயல்படக் கூடியனவாகவும் துடிப்புள்ளனவாகவும் எதிர்கால மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் வகையிலும் அமைந்துள்ளன.
******
(Release ID: 1503780)
Visitor Counter : 378