பிரதமர் அலுவலகம்

திரு.லட்சுமண் ராவ் இனாம்தார் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கூட்டுறவு மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்

Posted On: 21 SEP 2017 1:40PM by PIB Chennai

இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், புதுதில்லியில் திரு.லட்சுமண் ராவ் இனாம்தார் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெற்ற கூட்டுறவு மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்.

கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், பல்வேறு காலக்கட்டங்களில் மற்றும் பல்வேறு பகுதிகள் முழுவதிலும் பலர் பங்களித்துள்ளனர் என்பதால் நமது நாடு “பஹுரத்னா வசுந்தரா” என்றார். அவர்களில் சிலர் நன்கு அறியப்பட்டவர்களாகவும், ஊடகங்களாலும் பேசப்படுகிறனர். அறியப்படாத நிலையில் உள்ள பிறரும் முக்கிய மதிப்புமிக்க பங்களிப்பு அளித்துள்ளனர். வக்கீல் சாஹிப் – திரு.லட்சுமண்ராவ் இனாம்தார் - அத்தகையவர்களில் ஒருவர் ஆவார். மறைமுகமாக இருந்தாலும், கூட்டுறவு இயக்கத்தின் தலையாய கொள்கையே ஒவ்வொருவரையும் இணைப்பது தான் என்பதை பிரதமர் வலியுறுத்தினார். இக்கொள்கையே திரு. இனாம்தார் கடைபிடித்தார் என்றும், அவரது வாழ்க்கை உணர்வூட்டக்கூடியது என்றும் அவர் தெரிவித்தார்.

2022-ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்துதல் மற்றும் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சமமான வளர்ச்சி போன்ற இலக்குகள் குறித்து பிரதமர் பேசினார். இத்தகைய கொள்கைகளை அடைவதற்கு கூட்டுறவு இயக்கம் முக்கிய பங்காற்றலாம் என்றார் அவர்.

கூட்டுறவு இயக்கத்தின் “உணர்வு”-ஐ பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், ஊரகப் பகுதிகளில் இது பெருமளவு உறுதியாக உள்ளதாக கூறினார். அவர், திரு.இனாம்தாரின் மந்திரமான “பினா சன்ஸ்கார், நஹின் சஹக்கர்” (பண்பாடு இல்லை என்றால் கூட்டுறவு இல்லை) என்பதை மீண்டும் எடுத்துரைத்தார்.

இன்று விவசாயிகள் சில்லறை வியாபாரத்தில் பெற்று, மொத்த வியாபாரத்தில் விற்று வருகின்றனர் என்றார் பிரதமர். இடைத்தரகர்களை ஒழித்து, வருமானத்தை உயர்த்த உதவிட, இம்முறையை தலைகீழாக மாற வேண்டும் என்றார் அவர். பால் கூட்டுறவு சங்கங்களை உதாரணமாக எடுத்துக் கூறிய அவர், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் தகுதி கூட்டுறவு இயக்கத்திற்கு உண்டு என்றார். மேலும், இந்திய சமூகத்தின் இயல்புடன் கூட்டுறவு இயக்கம் ஒத்திருப்பதாக அவர் தெரிவித்தார். யூரியாக்களில் வேப்பம்பூச்சு பூசுதல், தேனி வளர்ப்பு மற்றும் கடற்பாசி வளர்ப்பு போன்ற துறைகளில் கூட்டுறவு இயக்கம் முக்கிய பங்காற்றலாம் என்றார் பிரதமர்.

திரு.லட்சுமண் ராவ் இனாம்தாரர் குறித்த ஒரு புத்தகம் மற்றும் “இந்திய கூட்டுறவு இயக்கத்தின் நவரத்தினங்கள்” ஆகிய இரு புத்தகங்களை பிரதமர் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியின்போது, கூட்டுறவுத் துறையில் சிறந்து விளங்கியதற்காக பல்வேறு விருதுகளை அவர் வழங்கினார்.
 

****


(Release ID: 1503719) Visitor Counter : 128


Read this release in: English