ரெயில்வே அமைச்சகம்

ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தித் திறனுடன் கூடிய போனஸை தசரா/ பூஜா விழாக் காலத்திற்கு முன்னதாக வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். ரயில்வேயில் உற்பத்தித் திறன் மற்றும் செயல் திறனை மேம்படுத்துவதற்கான ஊக்குவிப்பு.

Posted On: 20 SEP 2017 4:13PM by PIB Chennai

தகுதியுள்ள அரசிதழ் பதிவு பெறாத ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தித் திறனுடன் இணைந்த போனஸ் வழங்குவதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 2016-2017 ஆம் நிதியாண்டுக்கான இந்த போனஸ் ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே பாதுகாப்புச் சிறப்புப் படை, பணியாளர் நீங்கலாக இதர ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும். இந்த முடிவு காரணமாக சுமார் 12,30,000 அரசிதழ் பதிவு பெறாத ரயில்வே ஊழியர்கள் பயன் பெறுவார்கள். திருவிழா காலத்திற்கு முன்னதாக இந்த போனஸ் வழங்கப்படும் என்பது லட்சக்கணக்கான குடும்பங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

இந்த போனஸ் ஊக்குவிப்பாக செயல்படும். இதனால் ரயில்வே ஊழியர்கள் குறிப்பாக செயல்நிலை ஊழியர்கள் அவர்களது உற்பத்தி திறனை மேம்படுத்தவும் பாதுகாப்பு, வேகம், ரயில்வே வாடிக்கையாளர்களுக்கு சேவை ஆகியவற்றை உறுதி செய்யவும் ஊக்குவிப்பாக அமையும். இந்திய ரயில்வே ‘அதிகபட்ச பொதுமக்கள் நலம்’ என்ற கொள்கை அடிப்படையில் செயல்படுகிறது. இந்த வகையில் இந்த போனஸ் ரயில்வே செயல்பாடுகளில் பொறுப்பேற்கும் தன்மையையும், திறனையும் மேம்படுத்த உதவியாக இருக்கும்.

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்குவதற்கு ரூ.2245.45 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த போனஸ் பெறுவதற்கு ஊதிய உச்ச வரம்பு மாதம் ரூ. 7000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 78 நாள் ஊதிய போனஸ் பெறத் தகுதி உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு அதன் அதிகபட்ச தொகை ரூ.17951 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

******



(Release ID: 1503559) Visitor Counter : 98


Read this release in: English