சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

பல் மருத்துவர்கள் திருத்த மசோதா 2017ஐ தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 20 SEP 2017 4:12PM by PIB Chennai

பல் மருத்துவர்கள் திருத்த மசோதா 2017 ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பிரதமர் திரு. நசேந்திச மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 1948-ஆம் ஆண்டு பல் மருத்துவ சட்டத்தை (1948-ன் 16 வது) சட்டம் இயற்றும் துறை மாற்ற விரும்பினால் அத்தகைய மாற்றங்களையும் இணைத்துக்கொண்டு இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்.

1948-ம் ஆண்டு பல் மருத்துவர்கள் சட்டத்தின் பிரிவுகளில் சில மாற்றங்கள் தொடர்பான திருத்தம் செய்யப்படும் பிரிவுகள் வருமாறு:

1. பிரிவு 3 எஃப் ஷரத்தில் இந்திய பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும்

2. இந்த சட்டத்தின் 21 வது பிரிவு பி ஷரத்து மற்றும் 23 வது பிரிவு பி ஷரத்து ஆகியவற்றில் மாநில மற்றும் இணை மாநில பல் மருத்துவ கவுன்சிலின் உறுப்பினர்கள்

பின்னணி:

தற்போது உள்ள சட்டத்தின்படி இந்திய பல் மருத்துவ கவுன்சிலில் பிரிவு பி - யில் பதிவு செய்த பல் மருத்துவர்கள் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டுமென்பது அவசியமாகிறது. அதேபோல மாநில, இணை மாநில, பல் மருத்துவ கவுன்சிலில் முறையே 4, 2 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால், இந்த நிபந்தனை தற்போது பொறுத்தமற்றதாகிவிட்டது. இவர்களது பிரதிநிதித்துவம் குறித்த பிரிவுகள் மீண்டும் மீண்டும் இடம் பெறுவதை குறைப்பதற்காக மத்திய அரசு இந்த பிரிவுகளை நீக்க முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து இவர்களது பிரதிநிதித்துவம் கட்டயாப்படுத்தப்படவில்லை.
 

*****


(Release ID: 1503557) Visitor Counter : 119
Read this release in: English