மத்திய அமைச்சரவை
இந்திய அரசு அச்சகங்களை (GIPs) சீரமைத்தல் / இணைப்பதற்கும் மற்றும் அதன் நவீனமயமாக்கலுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
20 SEP 2017 4:09PM by PIB Chennai
இந்திய அரசு அச்சகங்கள் (GIPs) 17 –யை 5 மத்திய அரசு அச்சகங்களாக சீரமைத்து இணைப்பதற்கும் மற்றும் அவற்றை நவீனமயமாக்கலுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த 5 அச்சகங்கள் புதுதில்லியில் குடியரசு தலைவர் மாளிகை, மின்டோ சாலை, மாயாபுரி மற்றும் மகாராஷ்டிர மாநிலம் நாசிக், மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தா கோயில் தெரு ஆகிய இடங்களில் அமைந்திருக்கும்.
இந்த 5 அச்சகங்களும் அவற்றில் உள்ள உபரி நிலத்தை பணமாக்கி அதனை கொண்டு மேம்படுத்தி நவீனமயமாக்கப்படும். இதர இணைக்கப்பட்ட அச்சகங்களின் நிலமான 468.08 ஏக்கர் நிலம் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். சண்டிகார், புவனேஷ்வர், மைசூரு ஆகிய இடங்களில் உள்ள இந்திய அரசின் பாடப்புத்தக அச்சகங்களின் 56.67 ஏக்கர் நிலம், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் திரும்பத் தரப்படும்.
இந்த அச்சகங்கள் நவீனப்படுத்தப்படுவதால் நாடெங்கும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு தேவையான முக்கியமான, ரகசிய அவசர, பல வண்ண அச்சுப் பணிகளை மேற்கொள்ள முடியும்.
இந்த பணிகள் அனைத்தும் அரசுக்கு எவ்வித நிதிச் செலவும் இல்லாமலும் பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படாமலும் மேற்கொள்ளப்படும்.
******
(Release ID: 1503556)
Visitor Counter : 111