உள்துறை அமைச்சகம்
எஸ்.எஸ்.பி-ன் புதிய வேவுத் தகவல் அமைப்பினை, மத்திய உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
நாட்டின் திறந்த எல்லைகளை காவல் காப்பது மிகுந்த சவால் நிறைந்தது: திரு. ராஜ்நாத் சிங்.
Posted On:
18 SEP 2017 6:18PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று புது தில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் சசாஸ்த்ரா சீமா பல் (எஸ்.எஸ்.பி) – ன் புதிய வேவுத் தகவல் அமைப்பை தொடங்கி வைத்தார். மத்திய உள்துறை அமைச்சரின் ஒப்புதலை அடுத்து இந்த வகையில் எஸ்.எஸ்.பி படையினரின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.
இந்தியா – நேபாளம் மற்றும் இந்தியா – பூடான் எல்லைகளில் தலமை வேவுத் தகவல் அமைப்பாக எஸ்.எஸ்.பி அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான எல்லை நிர்வாகத்தில் நன்கு ஒன்றிணைக்கப்பட்ட உயர் திறன் கொண்ட வேவுத் தகவல், முதலாவது தேவை என உணரப்பட்டிருந்தது. எஸ்.எஸ்.பி – ன் செயல்பாடுகள் உளவுத் தகவல்கள் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டிய நிலையில் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அப்போதுதான் குற்றவாளிகள் மற்றும் கடத்தல் காரர்கள் நேபாளம் மற்றும் பூடான் எல்லைப்பகுதியை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை தவிர்க்க முடியும். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் படைப்பிரிவுகளிலும் எல்லைத் தலமையிடத்திலும் பல்வேறு தர நிலையிலான 650 பதவிகளை உருவாக்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு. ராஜ்நாத் சிங் இதர எல்லைகளைப் போல் அன்றி திறந்த எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள எஸ்.எஸ்.பி –ன் கடமைகள் மிகுந்த சவாலுக்குரியது என்றார். சட்ட விரோத ஆயுதக் கடத்தல், கள்ள நோட்டுக் கடத்துதல் போதை மருந்து கடத்துதல், ஆட்களைக் கடத்திச் செல்லுதல் போன்றவற்றை தடுக்க மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு உள்ளது என்றார்.
மத்திய ஆயுதக் காவல் படை பிரிவுக்கு தலைமை ஏற்ற முதலாவது பெண் அதிகாரியான திருமதி. அர்ச்சனா இராமசுந்தரத்தின் தலமைப் பண்புகளை பாராட்டிய உள்துறை அமைச்சர், துணை இராணுவப்படை ஒன்றை முன் உதாரணமான திறமையுடன் நடத்திச் சென்றவர் அவர் என்று குறிப்பிட்டார். சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பபடுவது குறித்து ஆயுதப் படையினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். கடமையின் போது உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் குறைந்தது ரூபாய் ஒரு கோடி இழப்பீடு பெறுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். மத்திய ஆயுத காவல் படை அதிகாரிகள் ஒவ்வொருவரும் இப்படையில் உயிர்த் தியாகம் புரிந்த குடும்பத்தினரைத் தத்தெடுக்க வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் மத்திய ஆயுத காவல் படை பணியாளர்களுக்கான நல மற்றும் மறுவாழ்வு வாரிய மொபைல் செயலியை அமைச்சர் வெளியிட்டார். இந்த செயலி கூகுல் ப்ளே அங்காடியில் கிடைப்பதாகவும் பயன்படுத்த எளிமையானது என்றும் அவர் கூறினார். இந்த செயலி மூலம் ஓய்வு பெற்ற மத்திய ஆயுத காவல் படை மற்றும் அசாம் துப்பாக்கிப் படை வீரர்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வுக் காணலாம். பிரதம மந்திரி திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் திறன் பயிற்சி பெறலாம், வேலை வாய்ப்பு பெறலாம் இதர முக்கிய தகவல்களையும் பெறலாம். மேலும் இந்த செயலி மூலம் ஓய்வு பெற்ற பணியாளர்கள் மறுவாழ்வு வாரியத்துடன் சிறந்த ஒருங்கிணைப்புப் பெற்று பயன் பெறலாம்.
எஸ்.எஸ்.பி – ன் உயிர்த் தியாகம் செய்தோர், விருது வென்றோர் ஆகியோரின் பெயர் பட்டியல் கொண்ட “பிரைடு ஆஃப் இந்தியா” என்ற நூலை திரு. ராஜ்நாத் சிங் வெளியிட்டார். எஸ்.எஸ்.பி – ன் உயிர்த் தியாகம் செய்தோர் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகைகளையும் அவர் வழங்கினார்.
இதுவரை தேசப் பாதுகாப்புக்காக எஸ்.எஸ்.பி – ன் 43 பணியாளர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். இந்த ஆண்டு, அசாம் மாநிலம் சிறாங் மாவட்டத்தில் என்.டி.எஃப்.பி. தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் தீவிரவாதி ஒருவரை சுட்டுக் கொன்ற பின் உயிர் நீத்த திரு. அமல் சர்கார், உயிர்த் தியாகம் செய்தோர் பட்டியலில் சேர்ந்துள்ளார்.
எஸ்.எஸ்.பி மனைவியர் நலச் சங்கம் – சன்திக்ஷா- உயிர்த்தியாகம் செய்தோரின் குழந்தைகளுக்கு சன்ரக்ஷன் திட்டத்தின் கீழ் உதவி செய்து வருகிறது. பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் படித்து வரும் இத்தகைய குழந்தைகளுக்கு நிதி உதவியும் வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் பேசிய உள்துறை இணை அமைச்சர் திரு. ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், காவல் துறை நவீன மயமாக்கலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி முக்கிய கவனம் செலுத்தி வருவதாகவும் அதனை செயல்படுத்துவதில் அரசு உறுதியுடன் இருப்பதாகவும் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய உளவுத் தகவல் அமைப்பின் இயக்குநர் திரு. ராஜிவ் ஜெயின், எஸ்.எஸ்.பி – ன் இந்த புதிய உளவுத் தகவல் பிரிவு அதன் செயல்பாட்டை பல மடங்காகப் பெருக்கும் ஆற்றல் கொண்டது என்று கூறினார். மத்திய ஆயுதக் கவால் படைகளின் தலமை இயக்குநர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
(Release ID: 1503391)
Visitor Counter : 196