குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம்

தூய்மையே சேவை என்பது குறித்த தேசிய ஊடக ஆலோசனைக் கூட்டம் தலைநகரில் நடந்தது.

கழிப்பறையில் முதலீடு செய்யும் குடும்பம் ஆண்டுதோறும் ரூ.50,000 சேமிக்கிறது என்று சுயேட்சையான ஆய்வு கூறுகிறது: குடும்பம் ஒன்று கழிப்பறையில் செய்த முதலீட்டுக்கு 430% வருவாய் கிடைக்கிறது.

Posted On: 18 SEP 2017 4:42PM by PIB Chennai

தலைநகரில் நடைபெற்ற தூய்மை இந்தியா இயக்கம் தொடர்பான தேசிய ஊடக ஆலோசனைக் கூட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள், மேம்பாட்டு அமைப்புகள், சமூக ஊழியர்கள் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டத்துக்குக் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் திரு. பரமேஸ்வரன் ஐயர் தலமை தாங்கினார். அக்டோபர் மாதம் 2 ம் தேதி நடைபெறும் தூய்மை இந்தியா இயக்கத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவை ஒட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி அறைகூவல் விடுத்த தூய்மையே சேவை என்ற மக்கள் இயக்கத்தின் விவரங்கள் குறித்து தமது துவக்க உரையில் திரு. ஐயர் குறிப்பிட்டார். அனைத்து தரப்பு மக்களும் தூய்மையே சேவை இயக்கத்தில் பெரிய அளவில் பங்கேற்று கழிப்பறை கட்டுவதிலும் பொது இடங்கள் சுற்றுலா இடங்கள் ஆகியவற்றை தூய்மைப்படுத்துவதிலும் உடல் உழைப்பை நல்கியதாக அவர் கூறினார். மக்கள் பங்கேற்பு முழு அளவில் தொடங்கியுள்ளதாகவும் இதில் குடியரசுத் தலைவர் முதல் சாதாரணக் குடிமக்கள் வரையில் இணைந்திருப்பதாகவும் கூறினார். மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், முதலமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்கள், சமயத் தலைவர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோர் தத்தமது பகுதிகளில் இந்த இயக்கத்தை முன் எடுத்துச் செல்வதாக அவர் தெரிவித்தார். இந்த வகையில் பள்ளிக் குழந்தைகள், மத்திய காவல் படையினர், பாதுகாப்பு துறை ஊழியர்கள் ஆகியோரின் பெருமளவு முயற்சிகளை அவர் பாராட்டினார்.

 

இதுவரை தூய்மை இந்தியா இயக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து செயலாளர் விளக்கினார். 5 மாநிலங்கள், சுமார் 200 மாவட்டங்கள், 2,40,000 கிராமங்கள் திறந்த வெளி மலம் கழிப்பு இல்லாதவைகளாக அறிவித்துள்ளன என்ற விவரத்தை அவர் தெரிவித்தார். கிராம தூய்மைக் குறியீடு அடிப்படையில் திட மற்றும் திரவ கழிவுகளை நிர்வகிப்பதில் 1,50,000 கிராமங்கள் தங்களை தாங்களே வரிசைப் பட்டியலில் சேர்த்துள்ளன. இந்திய தரக்குழு 1,40,000 கிராமங்களில் மேற்கொண்ட சுயேட்சையான ஆய்வைப் பற்றி குறிப்பிட்ட செயலாளர், இவற்றில் 91% வீடுகளில் கழிப்பறை பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார். தூய்மை மற்றும் சுகாதரச் செய்திகளை இதற்கான இருவாரக் காலத்தில் மட்டுமல்லாது அதற்கு மேலும் கொண்டு செல்லுமாறு ஊடகங்களை அவர் கேட்டுக்கொண்டார்.

 

நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய யூனிசெப் இந்தியாவின் வாஷ் அமைப்பு தலைவர் திரு. நிக்கோலஸ் ஆஸ்பர்ட், குழந்தைகள் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியில் சுகாதாரக் குறைபாடினால் ஏற்படும் தாக்கம் குறித்து எடுத்துரைத்தார். தூய்மை இந்தியா இயக்கம், மற்றும் இந்தியப் பிரதமர் நேரடித் தலைமை காரணமாக பழைய பழக்கங்கள், நடத்தை மாற்றங்கள் மூலம் மாற்றி  அமைக்கப்பட்டு வருவதாக அவர் பாராட்டினார்.

 

நாட்டின் 12 மாநிலங்களில் 10,000 வீடுகளில் யூனிசெப் நடத்திய சுயேச்சையான கணக்கெடுப்பின் முடிவுகளை ஊடகங்களுக்கு அவர் அளித்தார். வீடுகள் நிலையில் சுகாதாரத்தினால் ஏற்படும் பொருளாதாரத் தாக்கத்தை அளப்பதற்கான இந்த ஆய்வின் படி, கழிப்பறையில் முதலீடு செய்யும் குடும்பம் ஒவ்வொன்றும் ஆண்டுக்கு ரூ. 50,000 மிச்சப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். திறந்தவெளி மலம் கழிப்பு அறவே இல்லாத சமூதாயங்களில் தவிர்க்க்ப்பட்ட மருத்துவ செலவினங்கள், தவிர்க்கப்பட்ட மரணங்களின் மதிப்பு, சேமிக்கப்பட்ட நேரத்தின் மதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இது கணக்கிடப் பட்டதாக அவர் கூறினார். வீடொன்றுக்கு செலவினம் மற்றும் பயன்கள் விகிதாச்சாரத்தை கணக்கிட்டால் திறந்த வெளி மலம் கழிப்பு இல்லாத சமூதாயத்தில் அது 430% என்று அவர் கூறினார். அதாவது சுகாதாரத்தில் ஒரு ரூபாய் செலவழித்தால் அதனால் ரூ. 4.30 மிச்சப்படுத்தப்படுகிறது. சமூதாயத்தின் மிக ஏழ்மையான நிலையில் உள்ளவர்களிடையே இந்தப் பயன்கள் மிக உயர்ந்தாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர் மேம்பட்ட சுகாதாரம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நன்கு உதவுவது நிருபிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

 

தூய்மை இந்தியா இயக்கத்தின் அடித்தள நிலை சாம்பியன்களான, உத்திரப் பிரதேஷம் பிஜனூர் மாவட்ட கிராமத் தலைவி செல்வி மது சவ்கான், உத்திரப் பிரதேஷம்  மீரட் மாவட்ட தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ராஜ்னிஷ் சர்மா, உத்திராகன்ட் மாநிலம் யு.எஸ். நகர் சத்துணவு மைய மேற்பார்வையாளர் செல்வி தீபா ஜோஷி ஆகியோர் நிகழச்சியில் தங்கள் அனுபவங்களை ஊடகத்தினரிடையே பகிர்ந்துக் கொண்டனர்.

*******


(Release ID: 1503380) Visitor Counter : 291


Read this release in: English