நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் அண்மையில் எடுத்த முடிவுகள் : அமைச்சர் திரு . இராம்விலாஸ் பாஸ்வான் தகவல்

ஜூன் 2018 வரை தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உணவு தானியங்களின் விற்பனை விலையை அப்படியே தொடர அரசு முடிவு.- இராம் விலாஸ் பாஸ்வான்
ஜி.எஸ்.டி. அமலாவதற்கு முன் விற்பனையாகாமல் இருந்த இருப்புகளின் சில்லறை விற்பனை விலையில் மாற்றம் செய்ய செப்டம்பர் 30 வரை நுகர்வோர் விவகார அமைச்சகம் அனுமதி ; இராம் விலாஸ் பாஸ்வான்
உணவுப் பொருள் பொட்டல அட்டைகளின் மீது சில்லறை விற்பனை விலையில் எழுத்துகள் எண்களின் விவரங்கள், உள்ளேயுள்ள பொருளின் அளவு, நுகர்வோர் ஆதரவு போன்றவை கடைப்பிடிக்கப்பட வேண்டும். -திரு.பாஸ்வான்

Posted On: 07 JUL 2017 3:54PM by PIB Chennai

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு. இராம் விலாஸ் பாஸ்வான், உணவு தானியங்களின் விற்பனை விலைகளை தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2018 ஜூன் வரை தொடர மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார். உணவுப் பொருள்களின் அடைப்புப் பொட்டலங்களின் மீது அதன் அதிகபட்ச சில்லறை விலை, அசல் கொள்ளளவு,  மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக் கான விவரங்கள்.. போன்ற சட்டபுர்வ விவரங்கள் இடம்பெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும்…. உற்பத்தி செய்யப்பட்ட, அல்லது மூடி அடைக்கப்பட்ட அல்லது இறக்குமதி செய்யப்பட்டு,  2017 ஜூலை 1க்கு முன் விற்பனையாகாத கையிருப்புப் பொருள்களின் தற்போதுள்ள அதிகபட்ச சில்லறை விலையோடு ஜி.எஸ்.டி. அமலாக் கத்தால் அதிகரிக்கப்பட்ட வரித்தொகையையும் சேர்த்து, மாற்றப்பட்ட சில்லறை விற்பனை விலையையும் தெரிவிக்க தயாரிப்பாளர்களும், சிப்பக்கட்டுநர்களும், இறக்குமதியாளர்களும் 2017 ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை மூன்று மாதங்களுக்கு  அனுமதிக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (என்.எப்.எஸ்.ஏ.) 5.7.2013 முதல் சட்டமாக்கப்பட்டது. 2014 - ல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2014 -ல் ஆட்சிக்கு வந்தபோது, 11 மாநிலங்கள் மட்டுமே இச்சட்டத்தைச் செயல்படுத்தியிருந்தன. 2016 நவம்பர் வாக்கில் நாடு முழுவதும் இச்சட்டம் செயல்படுத்தப் பட்டுவிட்டது.

தகுதியான வீடுகளுக்கு மிகவும் அதிகமான மானிய விலையில் ஒரு கிலோ ரூ 1- வீதம் உணவுப்பொருள்கள் வழங்கப் படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.  தீட்டப்படாத உணவு தானியங்களான கோதுமை கிலோ ரூ 2-க்கும், அரிசி ரூ3-க்கும் வழங்கப் படுவதாகத் தெரிவித்தார். உணவுப்பாதுகாப்புச் சட்டப்படி, இந்த விலைகள இந்தச் சட்டம் அமலுக்கு வந்தநாள் முதல் 3 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் என்றும், அதன்பிறகு மத்திய அரசால் மாற்றியமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். என்றாலும் 2018 ஜூன் வரை  அரசு விலைகளை மாற்றாது என்றும் அமைச்சர் கூறினார்.

 தற்போது, சில்லறை விற்பனை விலையை 2018 செப்டம்பர் 30 வரை அதே விலையில் தொடர்ந்து அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவானது இச்சட்டத்தின் கீழ் வருகின்ற 80.55 கோடி மாநில மற்றும் யூனியன் பிரதேச மக்களுக்குப் பயனளிக்கும்.  : இராம் விலாஸ் பாஸ்வான்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உரிமங்களில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு: 2016 பொது விநியோகத் திட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்படி நியாயவிலைக் கடைகள் நடத்திட மாநில அரசுகள் உரிமங்களை வழங்குகின்றன. மேலதிக மானிய விலையில் உணவு தானியங்களை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கும் திட்டமானது, ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினருக்கானதாகும். எனவே நியாய விலைக்கடை உரிமங்களை வழங்கும்போது இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றவேண்டும் என்றும், தாழ்த்தப்பட்ட - மலைவாசி மக்களுக்கு அல்லது அவர்களின் குழுக்கள்- நிறுவனங்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என்றார், அவர். 

சட்டரீதியான அளவையியல் (மூடி அடைக்கப்பட்டப் பொருள்கள்;) விதிகள்-2011, திருத்தங்கள்:  இ-வர்த்தகத் தளங்களில் மூடி அடைக்கப்பட்ட பொருள்கள் விற்பனை விதிகளின்படி, குறிப்பிட்ட  உறுதிமொழிகளை ஏற்பதை வெளிப்படுத்தும் வகையில் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. 

மூடி அடைக்கப்பட்ட வர்த்தகப்; பொருள்கள் விதிகளின் கீழான உறுதிமொழிகள் உணவுப் பொருள்களாயின், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.-ன் கீழ் எடுத்துக்கொள்ள வேண்டிய  உரிய உறுதிமொழிகளுடன் சட்டரீதியாகத் தேவைப்படும் அதிகபட்ச சில்லறை விலை, அசல் அளவு, மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்கான விவரங்கள்.. போன்ற சட்டரீதியான அளவையியல் சார்ந்த 3 உறுதிமொழிகள் தவிர்த்து…) முறையே வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. 

சட்ட பூர்வமான உறுதிமொழிகளை நுகர்வோர் எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் எழுத்துகள் மற்றும் எண்களின் அளவுகள் பெரிதாக்கப்பட்டுள்ளன.         

இரட்டை அதிகபட்ச சில்லறை விற்பனை விலை(அ.சி.வி) பற்றிய விளக்கம் பின்வருமாறு தரப்பட்டுள்ளது:

“1986 நுகர்வோர்ப் பாதுகாப்புச் சட்டப்படி, எந்தவொரு நபரும் முன்னரே மூடி அடைக்கப்பட்ட ஒரே தன்மையான பொருள்களுக்கு, முறையற்ற வர்த்தகச் செயல்கள்மூலம் வெவ்வேறு அதிகபட்ச விற்பனை விலைகளை நிர்ணயிக்கக் கூடாது.”

தொழிற்சாலைகளின் நன்மைக்காக அசல் உள்ளளவுச் சோதனையும் அதற்கான சட்டபூர்வ உறுதிமொழியும் மேலதிக அறிவியல் நுட்பத்துடன் மாற்றம் செய்யப் பட்டுள்ளன.

ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்துள்ளதால் மூடி அடைக்கப்பட்ட பொருள்களின் அ.சி.வி.யில் மாற்றம் செய்வதில் விதி தளர்வு :

2017 ஜூலை 1 முதல்  ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்துள்ளதால், அதற்கு முன்பே மூடி அடைத்துவைக்கப்பட்ட  பொருள்களின் விலையில் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். இம்மாதிரி நிலைமைகளில் 2017 ஜூலை 1க்கு முன் விற்பனையாகாத கையிருப்புப் பொருள்களின் தற்போதுள்ள அதிகபட்ச சில்லறை விலையோடு ஜி.எஸ்.டி. அமலாக்கத்தால் அதிகரிக்கப்பட்ட வரித்தொகையையும் சேர்த்து, மாற்றப்பட்ட சில்லறை விற்பனை விலையையும் தெரிவிக்க தயாரிப்பாளர்களும், சிப்பக்கட்டுநர்களும், இறக்குமதி யாளர்களும் 2017 ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை மூன்று மாதங்களுக்கு  அனுமதித்துள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்தார். மாறிய அ.சி.வ. பற்றிய சட்டபூர்வ அறிவிப்பை - உறுதிமொழியை, இரப்பர் முத்திரையிட்டோ அல்லது ஒட்டுச்சீட்டு மூலமோ அல்லது அச்சிடல் மூலமோ செய்து விற்பனை செய்யலாம்.

அதிகபட்ச சில்லறை விலையைக் (அ.சி.வி) குறைத்திட, திருத்தி குறைக்கப்பட்ட (எல்லா வரிகளையும் சேர்த்து) அ.சி.வி. அச்சிடப்பட்ட ஒட்டுச்சீட்டு, மூடி அடைக்கப்பட்ட பொட்டல அடையாள வில்லை மீது ஒட்டப்படலாம். அது உற்பத்தி யாளர் அல்லது சிப்பக் கட்டுநரின் அ.சி.வி. உறுதிமொழியை மறைப்பதாக இருக்கக் கூடாது. காலாவதி யாகாத மூடி அடைக்கப்பட்ட பொருள்களின் மேலட்டைகள் போன்றவையும்  தேவையான திருத்தங் களுடன் 2017 செப்டம்பர் 30 வரை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன.

 

 


(Release ID: 1503195) Visitor Counter : 114


Read this release in: English