எரிசக்தி அமைச்சகம்

புதுப்பிக்கத்தக்க 175 ஜிகாவாட் எரிசக்தியை அரசு மின்தொகுப்பில் பயன்படுத்த முடியும். ஆய்வு முடிவில் தகவல்

Posted On: 29 JUN 2017 3:49PM by PIB Chennai

மத்திய நிலக்கரி, மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத் தக்க எரி சக்தித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) பியுஷ் கோயல் “2022 - க்குள் இந்தியாவின் மின் தொகுப்பில் 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஒருங்கிணைக்கும் வழித்தடம்எனும் தலைப்பிலான முதல் பகுதி ஆய்வறிக்கையை இன்று வெளியிட்டார். இதன் மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் செயல்படுத்தப்படவுள்ள தீவிரமான செயற்பாடுகளை உள்ளடக்கிய இவ் ஆய்வறிக்கையின் இரண்டாம் பகுதி ஜூலையில் வெளியிடப்படும்  அமெரிக்கா - இந்தியா இணைந்து நடத்திய அவ் ஆய்வு மின்தொகுப்பை வளப்படுத்துவோம் எனும் திட்டமாக வரும்  2022ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை 175 ஜிகாவாட்டாக அதிகரிக்க தேவையான முனைப்பு நடவடிக்கைகள்  புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் மூலம் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு 2015 ண்டு முதலே இதற்கான இலக்கை, அதாவது 100 ஜிகாவாட் சூரிய சக்தியையும், 60 ஜிகாவாட் காற்று வழி மின்சாரத்தையும் பெறுவதற்கான இலக்கை நிர்ணயித்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

இந்த ஆய்வறிக்கையானது, இந்தியாவின் மின் தொகுப்பில் மாறுபாடாகவும் நிலையற்றதாகவும் உள்ள, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை  பெருமளவுக்கு சேர்ப்பதை எப்படி நிர்வகிப்பது  என்பன போன்ற பல வினாக்களுக்கு விடையளிப்பதாக உள்ளது. அதாவது 15 நிமிட காலத்தில் 100 ஜிகாவாட் சூரிய சக்தியையும், 60 ஜிகாவாட் காற்று வழி மின்சாரத்தையும் மிகக் குறைவான அளவு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெறமுடியும் என்பதையும் அறிய முடிகிறது. இந்தியாவில் தற்போதுள்ள மேலதிகமான கரி சார்ந்த எரிசக்தி அமைப்பு முறையானது, இலக்குகளுடன் கூடிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தியோடு சேர்ந்துள்ள  மாறுபாடுகளையும்  ஏற்கக்கூடியதாக உள்ளது என்பதை அறியமுடிகிறது.

 

இந்த ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ள செயல்பாட்டுப் பயன்களாவன:

 

1. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அதிகரிப்பு மூலம் பெருமளவில் எரிபொருள் சேமிப்பாவதுடன், வெளியேறும் கரிப்புகை அளவும் குறையும்.

2.  மின்தொகுப்பு  இருப்பை நிர்வகிக்க தற்போதுள்ள கட்டமைப்பு வசதிகளே போதுமானவை.

3. 175 ஜிகாவாட் எரிசக்திப் பயன்பாட்டுக்குப்பின் குறைவான திறனுடன் இயங்கும் நிலக்கரி நிறுவனங்களுக்கு கூடுதல் ஊக்குவிப்பு தேவைப்படும்

 

இந்த ஆய்வு அறிக்கையானது முடிவுகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை சார்ந்த கொள்கைகளை மதிப்பிடவும், கொள்கை முடிவுகள், திட்டமிடல் போன்றவற்றின் முக்கியத்துவத்தையும் விளக்குவதாக உள்ளது.

 

இந்தியாவின்  பொஸாகோ, அமெரிக்காவின் என்.ஆர்.. ஏல். எல்.பி.என்.எல், போன்ற  பன்னாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த ர்குழு, மத்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் தலைமையில் அமெரிக்க யு.எஸ். முகமை  மற்றும்  உலக வங்கி மின்பிரிவு நிர்வாக உதவியுடன், 21ஆம் நூற்றாண்டு செஞ்சுரி பவர் நிறுவனத்தின் ஒத்துழைப்போடு, நவீன வானிலை ஆய்வு மின் அமைப்பு மாதிரி அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது.

 

ஆய்வறிக்கையை வெளியிட்டு மத்திய இணையமைச்சர் பேசியதாவது : புதிய இந்தியாவுக்கான  புதிய மனநிலைக்கு மக்கள் தயாராகும் நேரம் இது. அதாவது அதிக அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஒருங்கிணைக்கத் தயாராகும் தருணம் இதுநமது பிரதமரும் அமெரிக்க ஜனாதிபதியும் சந்தித்துக் கொள்ளும் இவ்வேளையில் இதற்கான பணியில் யு. எஸ்;. . . டி. யும். பொஸாகோ என். ஆர் எல், எல். பி. என். எல். போன்ற நிறுவனங்களும் சிறப்புடன் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது. இதுபோன்ற ஒருங்கிணைந்த கூட்டு முயற்சிகள் நம்பகமான மின் தொகுப்புக்கு முதுகெலும்பாக அமையும் என்று அமைச்சர் பேசினார்.

 

அமெரிக்க - இந்திய ஒப்பந்தத்தால் நடைபெற்ற ஆய்வின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அமெரிக்க யு. ஏஸ். முகமை (யு.எஸ்...டி) இயக்குநர் மைக்கேல் சாட்டின்சர்வதேச வளர்ச்சிக்கான யு. ஏஸ். முகமை (யு.எஸ்...டி) யானது எரிசக்தித்  துறையில் இந்தியாவுடன் நீடித்த இணைப்பைக் கொண்டுள்ளது என்றும், வளர்ச்சிக்கு எரிசக்தியானது   முக்கியக் காரணி என்றும், இந்தியா ஆண்டு தோறும் 7-8 சதவீத எரிசக்தி ஆதாரங்களை அதிகரித்துக் கொண்டாக வேண்டிய தேவை உள்ளது என்றும் தெரவித்தார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் தெளிவாக வரையறுக்கப் பட்ட கொள்கைகள், நிறுவனங்கள், சந்தை அமைப்பு போன்றவற்றில் அடிக்கடி மாற்றங்கள் தேவைப்படு வதாகவும், இந்த ஆய்வானது  புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இந்தியாவில் அளவிடுவதற்கும் உரிய வகையில் பயன்பாட்டை மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

 

இந்த ஆய்வு முடிவானது ஒவ்வொரு மாநிலத்துக்குள்ளே உள்ள மின்சாரம் கடத்துதல் (ஆனால் மாநிலங்களுக்கிடையே பகிர்மானம் என்பது கட்டாயமல்ல), அனைத்து நிலக்கரி நிறுவனங்களும் மத்திய மின்சார ஒழுங்குமுறை  ஆணைய விதிகளின்படி அதாவது 55 சதவீதத் திறன் அளவுக்குச் செயல்பட்டாக வேண்டும் மற்றும்  சீரான மிகை மின் நிலையை உறுதிப்படுத்தும் முன் அறிவிப்புடன் இயங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஏராளமான முக்கிய அனுமானங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது

 

மத்திய மின்சார ஆணையம், இந்திய பவர்கிரிட்  கார்ப்பரேஷன், என்.டி.பி.சி, உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களின் வல்லுநர்களும், மற்றும் மின் தொகுப்பு நிர்வகிப்போர் உள்ளிட்ட மாநில நிறுவனங்கள், மின் அமைப்புத்  திட்டமிடு வோர், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான தொடர்பு முகமைகள், பகிர்மானப் பயனாளர்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உருவாக்குவோர் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள், தெர்மல் நிறுவனங்களை  இயக்குவோர்பயன்பாடு, ஆய்வு நிறுவனங்கள்சந்தைப் படுத்துவோர் மற்றும் தொழிற் சாலைப் பிரதிநிதிகள் உள்ளிட்ட 150க்கும் அதிகமான தொழில்நுட்ப வல்லுநர்களின் மதிப்பீட்டுக்குப் பின்னரே இவ் ஆய்வறிக்கை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

இந்த நிகழ்ச்சியில் மின் துறைச் செயலர் பி.கே. புஜாரி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க மத்திய மின்சார ஆணையத்தின் தலைவர் ஆர். கே. வர்மா, மின்துறை இணைச்செயலர்  ஜோதி அரோரா, பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் (பொஸோகோ) நிறுவனத்தின்  தலைமைச்செயல் அலுவலர் கே.வி. எஸ் பாபா, பி.ஜி.சி. எல். தலைமை நிர்வாக இயக்குநர் .எஸ்.ஜா. உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

******



(Release ID: 1503192) Visitor Counter : 44


Read this release in: English