ரெயில்வே அமைச்சகம்

இரயில்வே திட்டங்களை விரைவாகச் செயல்படுத்திட மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்றும் பணிநுட்பத்தை இரயில்வே அமைச்சகம் வலுப்படுத்தியுள்ளது.

Posted On: 28 JUN 2017 2:34PM by PIB Chennai

மாநில அரசுகளுடன்  ஒருங்கிணைந்து இரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திட  இரயில்வே அமைச்சகம் முடிவெடுத் துள்ளது. இதன்படி, இரயில்வே அமைச்சகமும், அந்தந்த மாநில அரசுகளின் தொடர்பு- ஒருங்கிணைப்பு அலுவலர்களும் இணைந்து ஒரே அமைப்பாகச் செயல்படுவார்கள். இரயில்வே அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று, பெரும்பாலான மாநில அரசுகள் அந்தந்த மாநிலத்திற்கான இரயில்வே திட்டங்கள் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் சிக்கலின்றி நிறை வேற்றிடவும் இரயில்வே பணிகளைக் கண்காணிக்கவும் தங்கள் தங்கள் மாநிலப் பிரதிநிதிகளை நியமித்துள்ளனர்.

 

அவ்வாறு நியமிக்கப்படும் மாநில ஒருங்கிணைப்பு அலுவலர்கள் இரயில்வே நிர்வாகத்துடன் தொடர்ந்து சந்தித்துப்பேசி, திட்டங்களை வரிசைப்படுத்துதல், நிலம் கையகப்படுத்துதல், காடுகள்- வன விலங்குகளை அப்புறப்படுத்துதல், சட்டம்- ஒழுங்குப்பிரச்சினை, சாலை மேம்பாலங்கள் மற்றும் கீழ்ப் பாலங்களை அமைத்தல்மின்கம்பிப் பாதைகளை மாற்றியமைத்தல், வாய்க்கால்களில் குறுக்குப் பாதைகள் அமைத்தல், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, ஆர்வமுள்ளவர்களை அடையாளங்காணுதல் முதலிய பிரச்சினைகளின்மீது  இணக்கமான முடிவெடுப்பதில் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.

 

 

ஒருங்கிணைப்புச் செயல்பாட்டைப் பலப்படுத்தும் வகையில் மண்டல இரயில்வேயிலிருந்தும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தொடர்பு அலுவலர்;கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எந்தெந்த  இரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை என்பதைக் கண்டறிவதும் அதற்கான ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து மாநில அரசுடன் இரயில்வே அதிகாரிகள் இணக்கமானத் தீர்வைக் கண்டறிய உதவுவதும் அந்த அலுவலர்களின்  குறிப்பிட்ட பணியாகும்.

 

 

இரயில்வே அமைச்சக உயர் அலுவலர்கள் கலந்துகொள்ளும் ஒருங்கிணைப்புக் கூட்டங்களின் போது, இரயில்வே சம்பந்தப்பட்ட  தேவையான அனைத்துத் தகவல்களையும்   தாமதமின்றி திரட்டி வழங்குவதற்காகவும், மற்றும் பல்வேறு திட்டங்கள் பிரச்சினைகள் சார்ந்த முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கும் இரயில்வே துறையிலிருந்து தேவையான தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

*******


(Release ID: 1503174) Visitor Counter : 112


Read this release in: English