சுற்றுலா அமைச்சகம்

இந்திய சுற்றுலா அமைச்சகம் 3வது உலக யோகா தினத்தைக்கொண்டாடுகிறது

சுற்றுலா அமைச்சகம் 3வது உலக யோகா தினத்தை கீழ்க்காணும் பல்வேறு புதிய நிகழ்வுகளுடன் கொண்டாடுகிறது:

Posted On: 20 JUN 2017 12:45PM by PIB Chennai
  1. யோகாவை மேம்படுத்தும் நோக்கில் ஜூன் 14 முதல் 30 வினாடி வினா நேர நிகழ்ச்சி ஒன்று 17 வானொலி பண்பலை வானொலி நிலையங்களில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

 

  1. தொலைக்காட்சிகளில் இந்தியாவை யோகாவின் ஆதார இடம்  எனக்காட்டும் 60 வினாடி நேர விளம்பர நிகழ்ச்சி ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. ஜூன் 21 முதல் ஒரு மாத கால தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தூர்தர்ஷன் மூலம் ஒளிபரப்பப்படும்.

 

  1. சமூக  வலைதளத்தைக்கொண்ட சுற்றுலா அமைச்சக தொலைக் காட்சிகள் அனைத்திலும் மே15 2017 முதல் 21 ஜூன் 2017 வரை யோகா மேம்பாட்டு முகாம் நடத்தப்பட்டுவருகிறது.

 

  1. 2017 உலக யோகா தினம் பற்றிய விளம்பரச் சுவரொட்டிகளும் தட்டிகளும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமுள்ள இந்தியச் சுற்றுலா மைய அலுவலகங்களில் இடம்பெறச்செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

  1. டெல்லியில் பிபர்வரி 2017இல்  நடைபெற்ற தெற்காசிய சுற்றுலா வர்த்தகப் பொருட்காட்சியிலும் டெல்லியில் ஜூன் 2017இல் நடைபெற்ற யோகசாலை பற்றிய கண்காட்சியிலும் உலக யோகா தினம் பற்றிய இந்தியாவின் நிலைப்பாடு  விளக்கப்பட்டது.

 

  1.  உலகெங்கிலுமிருந்து யோகாவை மேம்படுத்தும் சுற்றுலா ஏற்பாட்டா ளர்கள், பத்திரிகையாளர்கள், புகைப்படக்கலைஞர்கள், யோகா குருமார்கள், கருத்தியலாளர்கள் உள்ளடக்கிய 53 பேர்களை சுற்றுலா அமைச்சகம் ஒரு நட்பார்ந்த பயணத்துக்கு ஏற்பாடு செய்து அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் குழு பிரதமர் பங்கேற்றுச்சிறப்பிக்கும் லக்னோ  ஜூன் 21இல் நடைபெறும் உலக யோகா தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும். பிறகு யோகா பற்றிய ஆரம்ப அறிவைப் பெற  நாடெங்கிலும்  உள்ள யோகா மையங்களையும் உடற்பயிற்சி மேம்பாட்டு மையங்களையும் பார்வையிடும். இதன் மூலம் அவர்கள் தத்தம் சொந்த நாடுகளில் இந்தியாவே யோகாவின் ஆதார இடம் ன்பதைப் பறைசாற்ற ஏதுவாகும்.

 

  1. வெளிநாடுகளில் உள்ள இந்தியச் சுற்றுலா  அலுவலகங்கள் வெளிநாடுகளி; உலக யோகா தின கொண்டாட்டத்தை அவர்களின் எல்லைக்குட்பட்ட இடங்களில் சிறப்பாகக் கொண்டாட முக்கிய பங்களிப்பைச் செய்து வருகின்றன. இந்தியாவில் உள்ள சுற்றுலா அலுவலகங்;கள்தேசிய ஓட்டல் நிர்வாகம் மற்றும் சமையல் தொழில்நுட்ப நிறுவனம், இந்திய சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனங்கள் ஆகியவை இணைந்து உலக யோகா தினக் கொண்டாட்டங்களை நிகழ்த்தவுள்ளன.

 

  1.  உலக யோகா தினத்தில் சுற்றுலா வருபவர்களை  மகிழ்விக்கும் வகையில் தனியார் துறையில் உள்ள நிறுவனங்களும் சுற்றுலா ஏற்பாட்டாளர்களின் ஒத்துழைப்புடன் யோகா மையங்களுக்குச் சிறப்பு பயண ஏற்பாடுகளைச்செய்தும்  உற்சாகப் பங்களிப்பைச் செய்தும்  வருகின்றனர்.

 

*****

 



(Release ID: 1503172) Visitor Counter : 48


Read this release in: English