இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

போதைப் பொருள்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை எடுத்து விளையாட்டுத் துறையில் ஆரோக்கியமான சூழலை உருவாக்கிட மத்திய அரசு உறுதி! விஜய் கோயல்

Posted On: 29 JUN 2017 5:37PM by PIB Chennai

போதைப் பொருள்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை எடுத்து, நாட்டில்  விளையாட்டுத் துறையில் ஆரோக்கியமான சூழலை உருவாக்கிட மத்திய அரசு உறுதி கொண்டுள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை இணையமைச்சர் திரு. விஜய் கோயல் கூறியுள்ளார். விளையாட்டுத்துறைக்கான சத்துணவுப்பொருள்கள் வழங்கும் மையத்தை இன்று  தொடங்கிவைத்துப் பேசிய அமைச்சர் கோயல், போதைப் பொருள்களற்ற விளையாட்டு மாதிரி மையங்களை உருவாக்கவும், உலக அரங்கில் பெருகிவரும் போட்டிகளும், போதைப்பொருள் சம்பவங்கள் அதிகரிப்பும் விளையாட்டு வீரர்களுக்குத் தகுந்த பாதுகாப்பையும், தரமான சத்துணவையும் அளிப்பதற்கும் தேவையான திட்டங்களைத் தீட்டவும் சரியான தருணம் தற்போது வந்துவிட்டதாகத் தெரிவித்தார். போதைப் பொருள்கள் பயன்பாட்டைத் தடுத்துச் சமாளிப்பதே தமது அமைச்சகத்தின் தலையாய பணி என்றும் அமைச்சர் கோயல் தெரிவித்தார்.

 

போதைப் பொருள் கலந்த, தரமற்ற உணவுப்பொருள்களின் இறக்குமதியும் விற்பனையும் நமக்குக் கவலை தருவதாக உள்ளது என்று தெரிவித்த அமைச்சர், அவற்றைப்பயன் படுத்துவதன் மூலம் சந்தேகப்படமுடியாத வீரரும் போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்படுவதாகத் தெரிவித்தார். மாசற்ற வீரரைப்; பாதுகாக்கவும் அவருக்கேற்ற  தரமான உணவுத்தேவைகளை நிறைவு செய்யவும், பல்வேறு ஒழுங்காற்று ஆணைய அதிகாரிகள் ஒருங்கிணைந்து, போதையற்ற சத்துணவு மாதிரித் தயாரிப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். என்றும் இது ஒரு வரவேற்கத்தக்க நடைமுறை என்றும் அமைச்சர் தெரிவித்தார். நடாவும் எப்.எஸ்.ஸ்.ஏ.ஐ உள்ளிட்ட பிற அமைப்புகளும் இணைந்து நாட்டில் உடல் தகுதித் தரத்தை மேம்படுத்துவதிலும் விளயாட்டு வீரர்களுக்கு உதவுவதிலும் போதைப்பொருள் அற்ற ஓர் அமைப்பை உருவாக்குவதிலும் ஈடுபட்டுள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.

 

விளையாட்டு வீரர்களின் பணித் தொழிலில் போதைப்பொருள்களால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து பெரும் வழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று விளையாட்டுத் துறை சார்ந்த விற்பன்னர்களை அமைச்சர் விஜய் கோயல் கேட்டுக்கொண்டார். பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட பயிற்சி முகாம்களில் விளையாட்டு வீரர்களைத் தாம் சந்தித்துப்பேசியபோது அவரகளிடம் போதிய விழிப்புணர்வு இருப்பதைத் தாம் நேரில் அறிந்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

ஆஸ்திரேலிய விளையாட்டுத்துறையின் போதை எதிர்ப்பு ஆணையத்துடன் இணைந்து செயல்பட்ட போது, போதைப்பொருள் சோதனையில்  உலகளாவிய செயல்முறைகளைப் பின்பற்ற முடிந்ததாகவும், அதில் மிகவும் உயர்விகித அளவுக்குத் துப்பறிதல் சாத்திய மானதாகவும் தெரிவித்த அமைச்சர், நாட்டில் போதைப்பொருள் நிகழ்வுகளைக் குறைத்திட போதிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார். தடைசெய்யப்பட்ட பொருள்களுடன் அலங்காரமாக விற்பனை செய்யப்படும் பொருள்களே இந்தியாவில் போதைப்பொருள்கள் புழங்குவதற்குக் காரணமாகின்றன. நடா அமைப்பு இந்த விவகாரத்தை உணவுப்பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்திடம்  எடுத்துக்கூறியதன் விளைவாக உணவுப்பாதுகாப்பு ஆணையர்களுக்கு ஓர் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

 

இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகள்.. விளையாட்டு வீரர்கள் அச்சமின்றி போதையற்ற சத்துணவுப் பொருள்களை நுகர்வதற்கு வழிவகை செய்யும்  ஒழுங்குமுறைப் பணிநுட்பத்தை உருவாக்கும் செயல்திட்டத்தை வழங்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

 

இந்த ஒருநாள் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் உணவுப்பாதுகாப்பு மற்றும் தர ஆணைய முதன்மை செயல் அலுவலர் திரு பவன் குமார் அகர்வால், மூத்த அறிவியல் அறிஞர்கள், சத்துணவு நிபுணர்கள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டுச் சங்கங்களின் பொறுப்பாளர்கள்,சோதனைக்கூட இயக்குநர்கள் மற்றும் நாடு முழுவதிலுமிருந்து வந்த  ஒழுங்காற்று ஆணைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

*******

 



(Release ID: 1503133) Visitor Counter : 79


Read this release in: English