தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

இந்திய மொழிகளில் ஒலிபரப்புத் தகவல்களை அளிப்பதில் முன்னுரிமை

ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லை பிராந்தியத்தின் குறுக்கே 100 கி.வாட் திறன்கொண்ட 2 புதிய சிற்றலை மின்னணு ஒலிபரப்பிகள் நிறுவப்படும்
திரு.நாயுடு அறிவிப்பு.

யூனியன் பிரதேசங்களில் ஊடகப்பிரிவுகள் செயல்பாடு குறித்து
தகவல்-ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஆய்வு

Posted On: 06 JUL 2017 1:44PM by PIB Chennai

பிரதமர் மோடியின் சீரிய தலைமையின் கீழ் செயல்பட்டுவரும் அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்புத்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த தீவிர முயற்சிகளை எடுத்துவருகிறது என்று தகவல்-ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு. வெங்கையா நாயுடு கூறினார். தகவல் தொடர்பின் உள்ளடக்கங்கள் இந்திய மொழிகளிலும் வட்டார வழக்குப்பேச்சுகளிலும் அமைப்பதில் மத்திய மாநில அரசுகளுக்கும்-யூனியன் பிரதேசங்களுக்கும் இடையே ஒத்துழைப்பு இன்மையால் மக்கள் தங்கள் சொந்த மொழிகளில் பயனுள்ள வகையில் ஒலிபரப்பைப் பெறும் நிலை சிக்கலாக உள்ளது.

 

புதிய அணுகுமுறைகளை கடைப்பிடிப்பதும் ஊடகத்தைப் புதுமையாக ஆக்கித் தகவல் தொடர்பைப் பரவலாக்குவதும் மாறிவரும் நவீன நுட்பங்களுக்கேற்பப் பொருந்திப் போகவேண்டியதும் அவசியமாகிறது.

 

இன்று இங்கு யூனியன் பிரதேசங்களின் செயல்படும் தகவல்-ஒலிபரப்புத்துறை அமைச்சக ஊடகப்பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்த  ஆய்வுக்கூட்டத்திற்குத் தலைமை வகித்துப்பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார். தகவல் ஒலிபரப்புத்துறை மாநில அமைச்சர்  ர்னல் ராஜியவர்தன் ரத்தோர், அந்தமான் நிகோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் பேராசிரியர் ஜெகதீஷ் முகி, தகவல்-ஒலிபரப்புத்துறைச் செயலாளர் திரு என்.கே.சின்கா மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள், அமைச்சக மூத்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்பை விரும்பிக் கேட்டுக்கொண்ட திரு. நாயுடு தடை செய்யப்பட வேண்டிய தகவல்கள் பரப்பப்படுவதையும் அங்கீகாரமற்ற தொலைக்காட்சிகள் செயல்படுவதையும் கட்டுப்படுத்த கேபிள் .டி.வி. சட்டத்தை பயனுள்ள வகையில் செயல்படுத்த வேண்டும் என்றார். இது தொடர்பாக யூனியன் பிரதேசங்களிலுள்ள மாவட்ட நீதிபதிகளுக்கு உதவும் வகையில் தொடர்பு அலுவலர்களை யூனியன் பிரதேச அரசுகள் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்;.

 

யூனியன் பிரதேச நிர்வாகங்கள் சம்பந்தப்ப்ட்ட மாவட்ட நீதிபதிகளுக்கு அறிவுறுத்தி அவர்களின் மாவட்டங்களில் வெளிவராமல் நின்றுபோன வெளியீடுகள்-பத்திரிகைகளை அடையாளங்கண்டு அவற்றிற்கு பத்திரிகைகள் பதிவுச்சட்டப்படி  வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யும்படி கேட்டுக்கொள்ள வேண்டும் என்றார். டெல்லியில் பதிவுபெற்றுள்ள 16132 இதழ்களில் 3704 மட்டுமே கடந்த 5 ஆண்டுகளில் தங்கள் ஆண்டு அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளன என்றார்.

 

 ஆய்வுக் கூட்டத்தில் திரு. நாயுடு கூறியதாவது: அனைத்திந்திய வானொலி இரண்டு புதிய குறுகிய அலைநீளங்கொண்ட  கணினி மயமாக்கப்பட்ட ஒவ்வொன்றும் 100 கி.வாட் திறன்  கொண்ட மின்னணு ஒலிபரப்பிகளை சாதனத்தை ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தகவல் ஒலிபரப்புக்காக ஆகஸ்டு 2017 இறுதிக்குள் நிறுவவுள்ளது. ஒலிபரப்பிகள் டெல்லியில்தான் நிறுவப்படும். இந்த நிதியாண்டு இறுதிக்குள் ஒரு புதிய 100 வாட் பண்பலை ஒலிபரப்பி ஒன்று அந்தமான் -நிகோபார் தீவுகளிலுள்ள கார் நிகோபாரில் நிறுவப்படும்.

 

பண்பலை ஒலி பரப்பு எல்லையை விரிவாக்கும் வகையில் டாமனிலுள்ள 3 கி.வாட். பண்பலை ஒலிபரப்பி 6 கி.வாட் ஒலிபரப்பியாக மாற்றியமைக்கப்படும். இதேபோல் புதுச்சேரி-காரைக்காலில் 6.கி.வாட் ஒலிபரப்பி 10.கிவாட் ஒலிபரப்பியாக மாற்றப்பட்டு அதன் கேட்பு எல்லை விரிவாக்கப்படும்.

 

உள்ளுர் வழக்குமொழிகளில் தொடர்பு கொள்வதன் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்ட திரு.நாயுடு இதற்காக யூனியன் பிரதேசங்களில் சமுதாய வானொலி நிலையங்களை அமைப்பதில் தீவிரம் காட்டவேண்டும்  என்று யூனியன் பிரதேசங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக ஆர்வத்துடன் ஈடுபடும் துறை வல்லுநர்களுக்கு மத்திய அரசு தாராளமான 75 சதவீத மானிய உதவி வழங்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

கூட்டாட்சித் தத்துவத்தில் தமக்கு மிகுந்த நம்பிக்கையுள்ளது என்றும், அதற்காக மத்திய- மாநில, மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்தியக் குழுவாக ஒற்றுமையாகச் செயல்பட்டு வளர்ச்சியின் விவரங்களை ஆவணப்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் நாயுடு கேட்டுக்கொண்டார்.

 

தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர்  ர்னல் ராஜியவர்தன் ரத்தோர் பேசுகையில்கம்பிவட இணைப்பாளர்களும்  தொலைக்காட்சி இயக்கு பவர்களும் ஒரு மென்பொருள் மூலம் ஒலிபரப்பின்  உள்ளடக்கத்தைக் கண்காணிக்க முடியும் என்பதால், தனியே நேரடி சோதனை  செய்யத் தேவையில்லை என்றார்.

 

இவை தொடர்பான பிரச்சினைகள் பற்றி விவாதிக்கவும் முடிவெடுக்கவும் யூனியன் பிரதேசங்களின் செயலாளர்கள், அமைச்சகத்தின் மூத்த அலுவலர்கள், ஊடகப்பிரிவுத் தலைவர்கள் ஆகியோருடன் இன்று முன்னதாக தகவல் ஒலிபரப்புத்துறைச் செயலாளர் ஓர் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

******

 



(Release ID: 1503130) Visitor Counter : 225


Read this release in: English