பிரதமர் அலுவலகம்
காந்திநகர், இந்திய-ஜப்பான் வர்த்தக தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் பிரதமரின் உரை (2017, செப்டம்பர், 14)
Posted On:
14 SEP 2017 6:23PM by PIB Chennai
மேதகு ஜப்பான் பிரதமர் திரு.ஷின்சோ அபே அவர்களே;
ஜப்பான் நாட்டின் மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் மூத்த பிரதிநிதிகளே;
குஜராத் முதல்வர் திரு.விஜய் ரூபானி அவர்களே;
குஜராத் துணை முதல்வர் திரு.நிதின் பட்டேல் அவர்களே;
இரு நாடுகளை சேர்ந்த வர்த்தக தலைவர்களே;
மகளிர் மற்றும் பெருந்தகையாளர்களே!
ஜப்பான் மற்றும் இந்திய வர்த்தக சமூகத்தினரிடையே அதுவும் முக்கிய நண்பரான; குஜராத்தின் நண்பர் மற்றும் எனது தனிப்பட்ட நண்பர் திரு.ஷின்சோ அபே அவர்களின் முன்னிலையில் இருப்பதில், உண்மையாகவே மகிழ்ச்சியடைகிறேன். தயவுசெய்து இந்த உயர்ந்த நண்பர் மற்றும் சிறந்த தலைவருக்கு பலத்த கரகோஷத்தை அளியுங்கள். ஜப்பான் தலைமை, அரசு மற்றும் மக்களுடனான எனது தனிப்பட்ட தொடர்பிற்கு தற்போது பத்தாண்டுகள் ஆகியுள்ளது. குஜராத்தில் நான் சிறிய ஜப்பானை காண வேண்டும் என்று முதன்முறையாக ஜப்பானுக்கு குஜராத்தின் முதல்வராக சென்றபோது நான் கூறினேன். இன்று, அக்கனவு நனவாகியுள்ளது. குஜராத்தில் ஜப்பானை சேர்ந்த பல நண்பர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதை கண்டு எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு பரிச்சயமான பல முகங்களை காண்பது எனக்கு பெரிதும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், ஜப்பானிய வாழ்க்கைக்காகவும், சிறந்த பணி அனுபவத்திற்காகவும், அர்ப்பணிக்கப்பட்ட நகரியங்கள், தொகுதிகள் மற்றும் நிறுவனங்களை கண்டு நான் மகிழ்வுறுகிறேன். இன்று கூட, ஜப்பானிய நகரியம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வலிமையான குஜராத் நிகழ்ச்சியில், முதல் கூட்டு நாடாக ஜப்பான் உருவானதை குஜராத்தின் தொழில்நிறுவனங்கள் மற்றும் அரசு, தற்போதும் அதனை நினைவில் கொண்டுள்ளன. இந்த கூட்டாண்மை மட்டும் தொடர்வது மட்டுமல்லாமல், நம்மிடையேயான பங்களிப்பும் வளர்ந்து வருகிறது. இது, இந்திய பொருளாதாரத்தில் ஜப்பானிய தொழில்நிறுவனங்கள் பெரும் அளவில் பங்களிக்கச் செய்துள்ளது. இந்த செயலாக்கத்தில் எங்களுக்கு உதவியதற்காக கைடான்ரென், ஜெட்ரோ மற்றும் பிற அமைப்புகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கைப்பற்றும் செயலாக்கத்தில் ஜப்பான் பிளஸ் பொறிமுறை உதவியுள்ளது.
நண்பர்களே!
ஜப்பான் அரசு மற்றும் அதன் மக்கள் எப்போதும் என்னிடத்திலும், எனது நாட்டிற்கும் பெருமளவிலான அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். உண்மையாகவே, இந்தியாவில் உள்ள 1.25 பில்லியன் மக்களும் அதே அன்பை ஜப்பானிய மக்களிடத்தில் கொண்டுள்ளனர். குறிப்பாக, பிரதமர் திரு.அபே அவர்கள் தனிப்பட்ட முறையில் அளித்து வரும் உற்சாகம் மற்றும் ஆதரவிற்கு நான் நன்றியுடையவனாகிறேன். பிரதமர் அபேயும், நானும் சந்திக்க கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவறவிடுவதில்லை. இந்த நெருக்கம் மற்றும் புரிந்துணர்வு ஆகியவை நமது இருதரப்பு உறவுகளில் உள்ள பல்வேறு இடைவெளிகளுக்கான பாலமாக இருந்திட உதவுகிறது. நிதியாண்டு ஒன்றில், ஜப்பானிலிருந்து அலுவலக வளர்ச்சி உதவிக்கான அதிகபட்ச வழங்குதலை, கடந்த ஆண்டு கண்டுள்ளது. அதேபோன்று, கடந்த ஐந்து வருடங்களில் இந்தியாவில் பணியாற்றும் ஜப்பானிய நிறுவனங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளன. இன்று துவங்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் நீங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் ஆழத்தை காண இயலும்.
Ø முதலில், மும்பை-அகமதாபாத் இடையே அதிவேக விரைவு ரயில் திட்டம்.
Ø இத்திட்டத்திற்கு ஜப்பான் அரசின் ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.
Ø 500 கி.மீ. நீளமுள்ள புல்லட் ரயில் கட்டுமானம் விரைவில் தொடங்கப்பட்டு, 2022-23-க்குள் செயல்பாட்டிற்கு வரும் என நான் நம்புகிறேன்.
Ø அதிவேக ரயில் திட்டத்துடன், பயிற்சி நிறுவனமும் உருவாக்கப்பட்டு வருகிறது.
Ø அதிவேக விரைவு ரயில் கட்டமைத்தல், செயல்படுத்துதல் மற்றும் பராமரித்தலுக்கு தேவையான உயரிய திறனுள்ள மனிதசக்தியை - புதிய இந்தியாவை உருவாக்குபவர்களை இது தயாரிக்கும்
Ø இரண்டாவது, ஜப்பானிய தொழில்நிறுவன நகரியங்களை உருவாக்குதல்: நாடு முழுவதும் நான்கு இடங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன. அவை குஜராத்தை தவிர, ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகும்.
Ø மூன்றாவது கார் தொழிற்சாலைகளில் நமது கூட்டுறவு:
மாண்டலில் உள்ள சுசுகி தொழிற்சாலை உலகம் முழுவதும் கார்களை ஏற்றுமதி செய்கிறது மற்றும் அடுத்த தலைமுறை கலப்பின மற்றும் மின்சார வாகனங்களுக்கு சக்தியூட்டுவதற்கான லித்தியம்-அயான் பேட்டரிகள் உற்பத்திக்கான அடிக்கல்லை நாட்டப்பட்டுள்ளது.
Ø நான்காவது, உற்பத்திக்கான ஜப்பான்-இந்தியா நிறுவனங்களின் மூலம் மனிதவள மேம்பாடு; ஜப்பானிய நிறுவனங்கள் அவற்றை உருவாக்கி வருகின்றன. குஜராத்தை தவிர, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாட்டில் அவை உருவாக்கப்படும்.
Ø பழமையான மற்றும் புனித நகரமான வாரணாசி எனது இரண்டாவது வீடு என்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஜப்பானின் கியோடோ நகரம் மற்றும் வாரணாசி இடையேயான கலாச்சார கூட்டுறவின் அடையாளமாக வாரணாசி மாநாட்டு மையத்திற்கான திட்டம் உள்ளது. நாங்கள் 2015-ம் ஆண்டு வாரணாசிக்கு ஒன்றாக சென்றபோது, பிரதமர் திரு.அபே மற்றும் என்னால் அது உருவாக்கப்பட்டது. அதற்கு - அன்பின் அடையாளம் மற்றும் மனிதகுலத்திற்கு சிவனின் பிரசாதமாக விளங்கும் - ருத்ராக்ஷ் என நான் பெயரிட்டுள்ளேன். இந்த ருத்ராக்ஷ் வாரணாசிக்கான ஜப்பானின் அன்பு மாலையாக இருக்கும். மேலும், இது சாரநாத்தில் உள்ள நாம் பகிர்ந்துக் கொண்ட புத்தமத பாரம்பரியத்திற்கு அஞ்சலி செலுத்துவதாகவும் அமையும். இத்திட்டத்திற்கு ஜப்பானி நிதியுதவிக்காக, பிரதமர் திரு.அபே அவர்களுக்கு எனது தனிப்பட்ட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். - ஜப்பானிய நிறுவனங்களின் முதலீட்டிற்கான சில அறிவிப்புகளை நீங்கள் கண்டு இருப்பீர்கள் - அரசியல் மற்றும் மூலோபாய தரப்பில் கூட, பிரதமர் திரு.அபே அவர்களின் வருகை மிகுந்த பயனுள்ளதாகும். மிக முக்கியமான விவகாரங்களுக்கான பல ஒப்பந்தங்களை நாங்கள் முடிவு செய்துள்ளோம். இவை அனைத்தும் நம் ஒருவருக்கொருவரிடையேயான நமது புரிதலின் ஆழத்தையும், சுகத்தையும், நம்பிக்கையும் வெளிப்படுத்துகிறது.
நண்பர்களே!
கடந்த மூன்று ஆண்டுகளாக, நாங்கள் வர்த்தகத்தை எளிமையாக்குவதற்காக மிகவும் கடுமையாக உழைத்துள்ளோம். தொடர்ச்சியான நிர்வாக சீர்திருத்த, நாட்டின் வர்த்தக உணர்வுகளை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. இந்த சீர்திருத்தங்கள் மற்றும் முனைப்புகள் அனைத்துமே இந்தியாவை 21வது நூற்றாண்டிற்காக தயார் செய்வதை இலக்காக கொண்டுள்ளன. அவை நாட்டை மாற்றி, புதிய இந்தியாவை உருவாக்குவதை இலக்காக கொண்டுள்ளன. இளைஞர்களின் சக்தியின் மூலம், நாங்கள் இந்தியாவை உலக உற்பத்திக்கான தளமாக நிலைநிறுத்தியுள்ளோம். இதற்காகவே, நாங்கள் ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ இயக்கத்தை துவக்கினோம். நாங்கள் இந்தியாவை அறிவு சார்ந்த, திறன்மிக்க மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சமூகமாக உருவாக்கி வருகிறோம். அதனை பெரியளவில் ஏற்கனவே டிஜிட்டல் இந்தியா மற்றும் திறன் இந்தியா போன்ற எங்களது முயற்சிகள் மூலம் துவங்கியுள்ளோம். அதே நோக்கத்திற்காக நாங்கள் துவக்குதல் இந்தியா இயக்கத்தையும் துவக்கியுள்ளோம். உலகளாவிய துவக்குதல் சுற்றுச்சூழல் அமைப்பில் இந்தியா மூன்றாவது இடத்தை பெற்றுள்ளதுடன், கடந்த இரண்டு வருடங்களில் அதிகரித்து வருவதை கண்டு வருகிறது. துவக்குதல் இந்தியா முயற்சி, கண்டுபிடிப்பிற்கான வலுவான சுற்றுச்சூழல்-அமைப்பினை கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. உட்கட்டமைப்பு பிரிவிலும் கூட, எனது அரசு குறிக்கோளான முயற்சிகளை துவக்கியுள்ளது. இத்திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கான வாழ்நாள் வாய்ப்புகளை உருவாக்கி அளித்து வருகின்றன. இதில், 100 ஸ்மார்ட் நகரங்கள் இயக்கம், 50 மில்லியன் வீடற்றவர்களுக்கு குடியிருப்பு வசதி, சாலைகள், பாலங்கள், துறைமுகங்கள், ரயில்தடங்கள் மற்றும் நிலையங்களும் அடங்கும்.
நண்பர்களே!
இந்தியா வழங்கிடும் திறனான மனித சக்தி மற்றும் அளவில்லாத நமது திறன்களினால் ஜப்பான் பெருமளவில் பயன் பெறும்! உண்மையாகவே, இந்தியாவின் அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் ஜப்பானிய நிறுவனங்களுக்கு தொடர்புடையாதாக உள்ளது. முதலீடு மற்றும் தொழில்நுட்பத்தை அனுமதிக்கும் வகையில், நாங்கள் எங்களது பொருளாதார திறந்து வைப்பதற்கு கடுமையாக உழைத்துள்ளோம். இந்தியாவில் முதலீடு செய்து வர்த்தகம் செய்வதை நாங்கள் தினமும் எளிமையாக்கி வருகிறோம். வர்த்தகங்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் கொள்கை பிரச்சினைகளுக்கு ஏற்கனவே நாங்கள் தீர்வு கண்டுள்ளோம். இம்முயற்சிகளில் நாங்கள் சிறந்த முடிவுகளை பெற்றுள்ளோம். அதில் சமீபத்தில் உலகளாவிய அங்கீகாரம் பெற்ற சிலவற்றை நான் பட்டியலிடுகிறேன்: உலக வங்கியின் எளிமையான வர்த்தகம் செய்தல் குறியீட்டில் இந்தியா முன்னேறியுள்ளது; உலக பொருளாதார மன்ற குறியீட்டில் உலக நாடுகளின் போட்டிகளுக்கு இடையே கடந்த இரண்டு ஆண்டுகளில் நாம் 32 இடங்கள் முன்னேறியுள்ளோம் – இது எந்த நாட்டையும் விட உயர்ந்ததாகும்; இரண்டாண்டுகளில், உலக அறிவுசார் சொத்துரிமை நிறுவனமான, டபிள்யூ.ஐ.பி.ஓ. உலக கண்டுபிடிப்பு குறியீட்டில் 21 இடங்கள் நாம் முன்னேறியுள்ளோம். உலக வங்கியின் 2016-ம் ஆண்டுக்கான சரக்கு போக்குவரத்து செயல் குறியீட்டில், நாம் 19 இடங்கள் முன்னேறியுள்ளோம்; மற்றும் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடான, யு.என்.சி.டி.ஏ.டி. பட்டியலிட்டுள்ள தலைசிறந்த 10 அந்நிய நேரடி முதலீட்டு இடங்களில் நாம் 3வது இடத்தை பெற்றோம், சமீபத்தில் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், நாம் வெளிப்படையான, நிலையான மற்றும் கணிக்கக்கூடிய நவீன வரி விதிப்பு முறையை நோக்கி நகர்ந்துள்ளோம். இன்று, உலகின் அதிக சுதந்திரமான அந்நிய நேரடி முதலீட்டு அமைப்புகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. 90 சதவீதத்திற்கும் அதிகமான அந்நிய நேரடி முதலீடு ஒப்புதல்கள் தானியங்கி வழியாக வழங்கப்பட்டுள்ளன. அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியத்தை நாங்கள் ஒழித்துள்ளோம். இந்த தாராளமயமாக்கல், கடந்த நிதியாண்டில், இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு 60 பில்லியன் டாலராக எட்டியதை காண வைத்தது. ஜப்பானிலிருந்து பெறப்படும் அந்நிய நேரடி முதலீடு கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. முதலீட்டாளர்கள் எளிதாக வெளியேறுவதற்கு புதிய திவால் மற்றும் நொடித்தல் குறியீடு வழி செய்துள்ளது. வர்த்தக விவகாரங்களை விரைவாக தீர்த்து வைப்பதற்கு ஏதுவாக வர்த்தக நீதிமன்றங்கள் மற்றும் வர்த்தக கோட்டங்களை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். சமரச சட்டம் திருத்தப்பட்டதன் மூலம், சமரச நடவடிக்கைகள் தற்போது விரைவாக மாறியுள்ளது. நாங்கள், புதிய அறிவுசார் சொத்துரிமை கொள்கையை அறிவித்துள்ளோம். இவை, நாங்கள் எந்த திசையில் செல்கிறோம் என்பதற்கான சில உதாரணங்களாகும். நாங்கள் இதனைவிட மேலாகவும், சிறந்தும், விரைவாகவும் செயல்படுவோம்.
நண்பர்களே!
இந்தியாவும், ஜப்பானும் பழம்பெரும் நாகரிகம் மற்றும் வலிமையான ஜனநாயக நாடுகளாகும். சாமானியனுக்கு எவ்வாறு முன்னேற்றத்தின் பலன் மற்றும் வளத்தை வழங்க வேண்டும் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். அரசின் சேவைகள் அதன் மக்களுக்கு எளிதாக கிடைக்கச் செய்வதற்கான எளிதான தீர்வுகள் மற்றும் செயலாக்கங்கள் இந்தியாவிற்கு தேவையாக உள்ளது. கடினமாக உழைத்து கிடைக்கப் பெற்ற அறிவு மற்றும் தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஜப்பானுக்கு தேவையாக உள்ளது. 21-ம் நூற்றாண்டு, ஆசியாவின் நூற்றாண்டு என நான் கூறி வருகிறேன். ஆசியாவின் உருவாக்கத்தில் இந்தியா மற்றும் ஜப்பான் முக்கிய பங்காற்றும் எனவும் நான் கூறி வருகிறேன். மூலோபாய மற்றும் பொருளாதார பிரச்சினைகளில் உலக பொருளாதாரத்தை தூண்டக்கூடிய தகுதியை, வளர்ந்து வரும் இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான ஒருங்கிணைப்பு பெற்றுள்ளது. ஆசியா மற்றும் உலகை நிலைபெறச் செய்யக்கூடிய காரணியாக வலுவான இந்தியா மற்றும் வலுவான ஜப்பான் விளங்கும் என நான் நம்புகிறேன். இந்த இருதரப்பு மற்றும் உலகளாவிய முயற்சிக்கு, சரியான ஜோடியாக இருப்பதற்காக பிரதமர் திரு.அபே மற்றும் ஜப்பானுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது நட்புறவு மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் வலிமையின் காரணமாக, நான் அதிகளவிலான ஜப்பானிய மக்கள் மற்றும் நிறுவனங்கள் இந்தியாவிற்கு வருகை தரவும், வசிக்கவும் மற்றும் பணிபுரியவும் அழைக்கிறேன். உங்களது முயற்சிகளில் வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன். எப்போது தேவைப்பட்டாலும், எனது ஆதரவை அளிக்க நான் உறுதி செய்கிறேன்.
நன்றி! மிக்க நன்றி.
(Release ID: 1502975)
Visitor Counter : 200