விவசாயத்துறை அமைச்சகம்
திரு இராதா மோஹன்சிங் 13 மாநில அமைச்சர்களுடன் முன்னோடி திட்டங்கள் மறு ஆய்வு செய்ய உள்ளார்
Posted On:
04 JUL 2017 11:40AM by PIB Chennai
மத்திய விவசாய அமைச்சர் மற்றும் விவசாயிகள் நலம் , திரு இராதா மோஹன்சிங் இரண்டு அரசாங்க முன்னுரிமை நிகழ்வுகளான, பெயரளவில், தேசிய விவசாயச் சந்தை ( ஈ- தே வி ச ) மற்றும் மண் வள அட்டை ஆகிய நிகழ்வுகளை 5 ஜூலை 2017ல் கிருஷி பவனத்தில் மறு ஆய்வு செய்ய உள்ளார். 13 மாநிலங்களைச் சேர்ந்த ஈ தே வி ச யுடன் ஒருங்கிணைந்துள்ள விவசாய சந்தைகளின் அமைச்சர்கள் மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநில விவசாய அமைச்சர்களும் அவர்களது மூத்த அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற உள்ளார்கள். முன்னேற்றப்பாதையில் உள்ள விவசாய-சந்தைச் சீர்திருத்தங்கள் விவசாயத்துறை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலம் மற்றும் இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவனம் (National Institution for Transforming India – NITI), புதிய மாதிரி அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது, விவசாய விளைச்சல் மற்றும் கால்நடைச் சந்தை ( மேம்பாடு மற்றும் வசதியளித்தல்) சட்டம் , 2017 விவசாயிகளுக்கு நலன்களை பாதுகாக்க விரைவில் கொண்டுவர மாநிலங்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ள வசதிகளை ஏற்று நடைமுறைப்படுத்த ஊக்கமூட்டலுக்கான வழிமுறைகள் ஆகியவை விவாதிக்கப்பட உள்ளன.
13 மாநிலங்களிலிருந்து 455 சந்தைகள் தேசிய வலைத்தளம் சார்ந்த ஈ –தேசிய விவசாய சந்தை 47 இலட்சம் விவசாயிகள் மற்றும் 91000 விவசாயிகள் ஆகியோர் அடங்கிய இணையத்தின் முகப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த புதுமையான சந்தைச் செயல்பாடு விவசாயச் சந்தைகள் விவசாயிகளின் உற்பத்திக்கு நல்ல விலை அளிக்கும் சூழலை உருவாக்கி , வெளிப்படைத்தன்மை, போட்டிமனப்பான்மை ஆகியவற்றை உறுதிசெய்து விவசாயிகள் அவர்களின் விளை பொருளுக்கு மேம்படுத்தப்பட்ட விலை பெறுவதற்கு ஏற்ற ’ஒரு நாடு, ஒரே சந்தை’ என்ற இலக்கை அடைவதற்கு வழி வகுத்து புரட்சிகரமாக்குகின்றன . மண் நல அட்டைத்திட்டம் விவசாயிகளுக்கு அவர்கள் நிலத்தின் சத்து நிலையை அறிந்து கொள்ள உதவுகின்றன மற்றும் அவர்கள் பொருத்தமான பயிர்களை விளைவித்து விளைச்சல் செலவைக்குறைக்கவும் உற்பத்தியைப்பெருக்கவும் ஆலோசனை உதவிகள் செய்யப்படுகின்றன. மே 1 ல் தொடங்கும் இரண்டாவது பயிர்வளர்ப்பு திட்டம் முதலாவது பயிர் வளர்ப்பில் கிடைக்கும் பாடங்களின் மூலமாக திறமையை மேம்படுத்தி மற்றும் விவசாயிகளின் நம்பகத்தன்மை பெறுமாறு அமைக்கப்படுகிறது. இதுவரை நாட்டில் உள்ள எல்லா விவசாயிகளுக்கும் 9 கோடி மண் வள அட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த மறு ஆய்வுக்கூட்டம் மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து எடுக்கும் முற்சிகளில் நோக்கம் மற்றும் விவசாயம் மற்றும் விவசாயிகள் அமைச்சகத்தின் முக்கிய நோக்கமும் விவசாயிகளின் வருவாயை அதிகப்படுத்தல் என்கிற ஒன்றே ஆகும்.
*****
(Release ID: 1502971)
Visitor Counter : 59