நிதி அமைச்சகம்

ஜிஎஸ்டி இணையதளத்தில் தகவல்களை ஏற்றுவதற்கு முன்னர் ஜிஎஸ்டி பின்னல் அமைப்பு வரிசெலுத்துவோரின் ஆஃப்லைன் இடுகைப் பதிவு எளிதாக செய்வதற்கு வசதியாக எக்ஸெல் மாதிரிவடிவத்தை வெளிக்கொணர்கிறது; எக்ஸெல் மாதிரி வடிவம் ஆஃப்லைனில் இடுகையிட உதவும் கருவியுடன் பெரிய எண்ணிக்கையுள்ள விலைப்பட்டியலை எளிதாகவும் விரைவாகவும் ஏற்றிட உதவும்; ஆப்லைன்இடுகைக்கருவி ஜூலை 17, 2017 வெளியிடப்பட உள்ளது.

Posted On: 02 JUL 2017 6:47PM by PIB Chennai

சரக்கு மற்றும் சேவை வரி பின்னல் அமைப்பு (ஜிஎஸ் டி என்) ஒரு எளிய எக்ஸெல் சார்ந்த வரிசெலுத்துவோர் மாதாந்திர புள்ளிவிரங்களை  மிகக் குறைந்த செலவில் மிக அதிகமான எளிமையுடன் தயாரிக்க மற்றும் பதிவுசெய்வதற்கு ஏதுவாக மதிரி வடிவத்தை  வெளிக்கொண்டுவர  உள்ளது

 இந்த எக்ஸெல் மாதிரி வடிவம் வரிசெலுத்துவோருக்கு வரிசெலுத்ததலை மிகவும் எளிமை மற்றும்  அதிகமான வசதிஅளிப்பதோடு வணிகம் செய்ய   எடுத்துகொள்ளும் காலஅளவை குறைத்து ஜிஎஸ்டி கவுன்சிலின் அணுகுமுறையின் ஒரு பகுதியாக இருக்கிறது.     இந்த எக்ஸெல் பணியேட்டின் மாதிரி வடிவம் ஜிஎஸ்டி இணையதளத்திலிருந்து (www.gst.gov.in) இலவசமாக பதிவிரக்கம் செய்து  வரிசெலுத்துவோரால் விலைபட்டியலோடு தொடர்புடைய அனைத்து தகவல்களையும்  ஒன்றினைத்துக் கொண்டு ஒழுங்குமுறை அடிப்படையில்  பயன்படுத்த வழிகோலுகிறது.  

 

இந்த எக்ஸெல் மாதிரி வடிவம் தொழிற்கூடங்களால் அவர்களுடைய தகவல்களை ஒழுங்குபடுத்தி  நிர்வகிப்பதற்கு தொடங்கப்படக்கூடும். வரிசெலுத்துவோர் வாராவாரம் அல்லது வேறெந்த ஒழுங்கான இடைவெளியுள்ள  முறையிலோ வெளிக்கொண்டுவரவேண்டிய   தகவல்களை ஜிஎஸ்டி இனைய பக்கத்தில் பின்னால்வருகிற மாதத்தின் தேதி 10க்கு முன்னர் ஏற்றுவிக்கப்படக்கூடும். ஜிஎஸ்டிஆர்1 எக்ஸெல் பணியேடு ஜிஎஸ்டிஆர்1 தகவல்களை பன்னாட்டுக்கணினி அமைப்போடு தொடர்பு இல்லாமல் ஆப்லைனில் தயாரிப்பதற்கு கூட  பயன்படுத்தப்படலாம். இந்த வசதி பன்னாட்டு கணினி அமைப்புத் (இண்டர்னெட்) தொடர்பு சரியாக இல்லாத தூரப்பகுதிலில் உள்ள வரிசெலுத்துவ்வொருக்கு பயனளிப்பதாக இருக்கும்.     .


இந்த மாதிரிப்படிவம் பணித்தாள்கள் எட்டு கொண்டதாக இருக்கும். புள்ளிவிவரபடியை பிழையின்றி துல்லியமாக தயாரிப்பதற்கு உதவும் வகையில் ஒவ்வொரு பணித்தாளின் தலைப்பிலும் பணித்தாளில் இடப்பட்டுள்ள முக்கிய மதிப்புக்களின் சுருக்கம் வணிகப்பதிவேடுகளில் உள்ள தகவல்களோடு ஒத்து இருப்பதை உறுதிசெய்வதற்கேதுவாக கொடுக்கப்பட்டிருக்கும். எக்ஸெல் தாளில் எழுதப்பட்டுள்ள தகவல் அடிப்படையில், ஆஃப்லைன் கருவி  ஒரு கோப்பை தயாரிக்கும். இந்தக்கோப்பு ஜிஎஸ்டி இணைய தளத்தில் வரிசெலுத்துவோரால் ஜிஎஸ்டிஆர்1 உருவாவதற்கு ஏற்றப்படும்.   கோப்பை ஜிஎஸ்டி இணையதளப்பக்கத்தில் ஏற்றுவதற்கு இண்டர்னெட் தொடர்பு தேவைப்படுகிறது.


                                 *******


(Release ID: 1502970) Visitor Counter : 133
Read this release in: English