நிதி அமைச்சகம்
மத்திய அரசு வருவாய்த்துறைச் செயலர் முனைவர் ஹாஸ்முக் ஆதியா புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரியோடு தொடர்புடைய ஏழு தவறான புரிதல்களை தகர்க்கிறார்
Posted On:
02 JUL 2017 6:46PM by PIB Chennai
மத்திய அரசு வருவாய்த்துறைச் செயலர் முனைவர் ஹாஸ்முக் ஆதியா அவருடைய டுவிடர் கைப்பிடி @ ஆதியா 03 இடுகைகளின் மூலம் இன்று பொதுவான ஜிஎஸ்டி பற்றிய தவறான புரிதல்கள் அல்லது கட்டுக்கதைகளை தகர்த்திருக்கிறார்.
ஜிஎஸ்டியுடன் தொடர்புடைய இந்த கட்டுக்கதைகள் மற்றும் ஒவ்வொன்றின் உண்மை நிலை ஆகியவை கீழே முறையாக கொடுக்கப்பட்டிருக்கின்றன:
கட்டுக்கதை 1: கணினி / இண்டர்னெட் மூலமே நான் விலைப்பட்டியல்களை உருவாக்க முடியும்.
உண்மைநிலை 1: விலைபட்டியல்கள் கையினாலும் அல்லது உடலுழைப்பாலும் கூட உருவாக்கக்கூடும்.
கட்டுக்கதை : 2 ஜிஎஸ்டி வழி தொழில் செய்வதற்கு எப்பொழுதும் இண்டர்னெட் தேவைபடுகிறது.
உண்மைநிலை: 2 மாதாந்திர ஜிஎஸ்டி புள்ளிவிவரம் அனுப்பும்போது மட்டும் இண்டர்னெட் தேவைப்படும்.
கட்டுக்கதை : 3 என்னிடம் முன்னொதிக்கீடு அடையாள எண் உள்ளது. நான் தொழில்செய்வதற்கு இறுதி அடையாள எண்னுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன் .
உண்மைநிலை: 3 முன்னொதிக்கீடு அடையாள எண் தான் உங்களுடைய இறுதி அடையாள எண். எனவே தொழிலைத் தொ டங்குங்கள்.
கட்டுக்கதை: 4 எனது வணிக உருப்படி முன்பு விதிவிலக்கில் இருந்தது. எனவே எனக்கு இப்பொழுது தொழிலைத்தொடங்கு முன் புதிய பதிவு தேவைப்படுகிறது.
உண்மைநிலை: 4 நீங்கள் தொழிலைத்தொடர்ந்து செய்யலாம் மற்றும் 30 நாட்களுக்குள் பதிவு பெற்றுக்கொள்ளுங்கள்.
கட்டுக்கதை: 5 ஒவ்வொரு மாதத்துக்கும் பதிவுசெய்ய வேண்டிய புள்ளி விவரம் மூன்றாக இருக்கின்றது.
உண்மைநிலை:5 மூன்று பகுதிகளைக்கொண்ட ஒரேஒரு புள்ளிவிவரம். அதில் முதல் பகுதி வணிகரால் நிறைவுசெய்யப்படுகிறது மற்றைய இரு பகுதிகளும் கணினியால் நிறைவுசெய்யப்படுகின்றன.
கட்டுக்கதை: 6 சிறிய வணிகர்களும் கூட விலைப்பட்டியல்படியான விவரங்களை புள்ளிவிவரபடிவத்தில் பதிவு செய்ய வேண்டும்.
உண்மை நிலை: 6 சில்லரை வியாபாரத்தில் உள்ளவர்கள் (பி2சி) மொத்த விற்பனையின் சுருக்கத்தைமட்டும் பதிவு செய்ய வேண்டும்.
கட்டுக்கதை : 7 புதிய ஜிஎஸ்டி தீர்வை வாட்டை விட அதிகமாக இருக்கிறது .
உண்மைநிலை: 7 அது அதிகமாகத் தோன்றுவதற்குக்காரணம் சுங்கவரி மற்றும் மற்றைய வரிகள் முன்பு கண்ணுக்குத்தெரியாமல் இருந்தவை ஜிஎஸ்டியில் இப்போது ஒன்றாக்கப்பட்டுள்ளதனால் கண்ணுக்குத்தெரிகின்றன.
*******
(Release ID: 1502969)
Visitor Counter : 106