நிதி அமைச்சகம்

ஜிஎஸ்டி அமுலுக்கு வந்த பின் இரண்டாவது நாள் எந்த பெரிய பிரச்சினையுமின்றி சென்றது; சாலையோர சிறிய உணவுவழங்குமிடங்களும் பெரிய உணவகங்களும் , சில்லரை வியாபாரக் கடைகளும் பல்பொருள் அங்காடிகளும் புதிய வரிவிதிப்பு ஏற்பாடோடு உடன்பாட்டுடன் பழக்கப்பட்டு இருந்தனர் ;

ஜூன் 25, 2017லிருந்து 2.23 இலட்சம் வாணிகர்கள் தேசிய ஜிஏஸ்டி அமைப்பில் விண்ணப்ப வரைவுகளை பதிவுசெய்துள்ளார்கள். இவர்களில் எல்லா விவரங்களையும் சமர்ப்பித்துள்ள 63000 பேரில் 32000 வாணிகர்களுக்கு புதிய பதிவு வழங்கப்பட்டுள்ளது; முனைவர் ஹாஸ்முக் ஆதியா மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் சமுதாய ஊடகங்களில் சரிபார்க்கப்படாத செய்திகளை சுற்றறிக்கையாக பரவவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Posted On: 02 JUL 2017 8:34PM by PIB Chennai

ஜூலை 1, 2017 ல்  அமுலுக்கு வந்த சரக்கு மற்றும் சேவை வரி  (ஜி எஸ் டி) யின்  இரண்டாம்  நாள் எந்த பெரிய சிக்கலுக்கும்  இடமில்லாமல்   கழிந்ததுமத்திய மற்றும் மாநில  அரசு  அதிகாரிகள்  வியாபாரிகளுக்கும்  தொழில்முனைவோருக்கும் அவர்களால்  இயன்ற அளவு  தேவைப்பட்ட  சரியான  தகவல்களை  அளிப்பதற்கு  மிகுந்த  முயற்சி செய்தனர். இந்திய அரசின் வருவாய்த்துறை   சாலையோர   சிறிய உணவுவழங்குமிடங்களும்  பெரிய  உணவகங்களும் , சில்லரை வியாபாரக்  கடைகளும்  பல்பொருள் அங்காடிகளும் புதிய வரிவிதிப்பு  ஏற்பாடோடு உடன்பாட்டுடன் புதிய வரிவிதிப்புடன் பழக்கப்பட்டு இருந்தனர் என்ற ஆதரவான  செய்தி  அறிக்கைகளைப் பெற்றனர்.

 

25 ஜூன் 2017 லிருந்து 2.23 இலட்சம்  புதிய வணிகர்கள் தங்களின் விண்ணப்ப வரைவுகளை பதிவுசெய்துள்ளார்கள். இவர்களில் முழு விவரங்களையும் அளித்துள்ள 63000 பேரில்  32000  வணிகர்களுக்கு புதிய பதிவு வழங்கப்பட்டுள்ளது.  

இந்திய  அரசின் வருவாய்த்துறைச் செயலர் முனைவர் ஹாஸ்முக் ஆதியா மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் சரிபார்க்கப்படாத  செய்திகளை சமூக ஊடகங்கள் மூலம்  பரவ விட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

**********



(Release ID: 1502968) Visitor Counter : 92


Read this release in: English