சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
சமூக நீதி மற்றும் உரிமை வழங்கல் அமைச்சகம் மக்கள் விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் ’போதைப்பொருள் முறைகேடான பயன்பாட்டு சட்டத்துக்கு புறம்பான வாணிகம்’ ஆகியவற்றின் அனைத்துலக நாள் விழாவை நடத்துகிறது
Posted On:
28 JUN 2017 5:52PM by PIB Chennai
சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கள் அமைச்சகம் போதைப்பொருள் முறைகேடான பயன்பாடு மற்றும் சட்டத்துக்கு புறம்பான வாணிகம் ஆகியவற்றின் அனைத்துலக நாளை ஒட்டி ஒரு விழாவை இன்று இங்கு நடத்தியது. சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கள் அமைச்சர் திரு தாவர்சந்த் ஜெஹிலாட் விழாவைத்துவக்கி வைத்தார். துணை அமைச்சர்கள் திரு கிருஷன் பால் குர்ஜார் மற்றும் திரு விஜய் சாம்ப்லா ஆகியோர் வருகைதந்து சிறப்பித்தனர். திரு செர்ஜி காப்பினோஸ், ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் மற்றும் குற்றம் அலுவலகம் (ஐ நா போ கு அ) இந்தியப்பிரதிநிதி, திருமதி லதா கிருஷ்ண ராவ், செயலர், சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கள் அமைச்சகம் மற்றும் பல உயர்நிலையாளர்கள் வருகை தந்தனர்.
திரு தாவர்சண்ட் ஜெஹிலாட் இந்த நிகழ்ச்சியில் பேசுகையில் போதைப்பொருள் அடிமையாதலையும் முறைகேடான சட்டத்துக்குப்புறம்பான வாணிகத்தையும் ஒழிப்பதற்கு இளையோரும் பொதுமக்களும் உறுதிகொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் மட்டும் நோக்கத்தை நிறைவேற்றிவிடாது மற்றும் மக்களின் பங்கு இந்த தீய பழக்கத்தை அகற்றுவதற்கு மிகவும் அவசியமாகிறது என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார். பல தனிமனிதர்களின் முற்சியையும் போதைப்பொருள் முறைகேடான பயன்பாட்டை தடுக்க அரசு சாரா அமைப்புகளும் (என் ஜி ஓக்கள் ) எடுக்கும் முயற்சிகளையும் பாராட்டி அவரது அமைச்சகம் சமுதாயம் சார்ந்த பணிகளான போதைப்பொருளுக்கு அடிமையானோரை கண்டுபிடித்தல், சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளித்தல் ஆகியவற்றை தொண்டு நிறுவனங்களின் மூலம் செய்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
திரு கிரிஷன் பால் குர்ஜார் அவருடைய உரையில் அரசாங்கம் போதைப்பொருளுக்கு அடிமையாதலைத் தடுப்பதற்கு பல தொடக்க முயற்சிகளை எடுத்துள்ளது மற்றும் குடும்ப உறுப்பினர்களும் முழு சமுதாய அமைப்பும் இதில் முக்கிய பங்கு அளிக்கக்கூடும். திரு விஜய் சாம்ப்லா, பொதுமக்களுக்கு போதைப்பொருளின் முறைகேடான பயன்பாட்டால் விளையும் தீமைகள் உணர்த்தப்படவேண்டும் என்றும் மற்றும் பல நிறுவனங்கள் போதைப்பொருள் முறைகெட்ட பயன்பாட்டை எதிர்த்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.
விழாவுக்கு வந்திருந்த உயர்நிலையாளர்கள் விழா வளாகத்தில் அமைக்கப் பட்டிருந்த அரங்கம் மற்றும் கண்காட்சி ஆகியவற்றைப்பார்த்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச்செயலரின் செய்தி திரு செர்ஜி காப்பினோஸ், ஐ நா அலுவலக இந்தியப்பிரதிநிதியால் படிக்கப்பட்டது. சிறுவருக்கான இசை நாடகம் நடத்தப்பட்டது மற்றும் பாட்டு மற்றும் நாடகப் பிரிவு கலைஞர்களால் ஒரு நையாண்டி நாடகமும் போதைப் பொருள்களுக்கு அடிமையாவதை தடுப்பது எப்படி என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டன.
சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கள் அமைச்சகம் போதைப்பொருள் தேவையை குறைக்க உதவும் சந்திப்பு மைய அமைச்சகம். அது போதைப்பொருள் முறைகேடான பயன்பாட்டின் அனைத்து பகுதிகளான பிரச்சினையின் அளவை மதிப்பிடுதல், இது தொடர்பான தகவல்களைச் சேகரித்தல் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு உள்ளிட்ட அனைத்தையும் ஒருங்கிணைப்பதோடு செயல்படுத்தியும் வருகிறது. அமைச்சகம் சமுதாயம் சார்ந்த சேவைகளை போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அடையாளம் கண்டுகொள்ளல், சிகிச்சை மற்றும் புணர்வாழ்வு அமைத்தல் ஆகியவற்றை தொண்டு நிறுவனங்களைப்பயன்படுத்தி செயலாற்றுகின்றது. அமைச்சகம் உத்தேசமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள 400 என் ஜி ஓ க்களுக்கு போதைபொருளுக்கு அடிமை யாதலை மாற்றவல்ல மையங்களை நடத்தி வருகிறது. அத்துடன் அமைச்சகம் கட்டணமில்லா தேசிய போதைப்பொருள் முறைகேடான பயன்பாட்டை மாற்றும் உதவி எண் 1XXX-XX-0031 இத்தீமைக்கு பலியானோருக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் மற்றும் சமுதாய முழுமையின் நலங்காக்கவும் அமைத்துள்ளது
.
.
சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கள் அமைச்சகம் போதைப்பொருள் பயன்பாட்டு தேசிய கணக்கெடுக்கும் வேலையை தேசிய போதைப்பொருள் சார்ந்திருத்தல் சிகிச்சை மையம் (தே போ சா சி மை), அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் ( அ இ ம அ நி), புது டெல்லிக்கு பதினைந்து ஆண்டு இடைவெளிக்குப் பின் வழங்கி இருக்கிறது. இந்த கணக்கீடு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள 25 சதவீத மாவட்டங்களில் செயலாக்கப்படும். இக்கணக்கீடு ஒவ்வொரு வீட்டு மாதிரிக்கணக்கீடு மற்றும் பதிலளிப்போர் தேவை சார்ந்த கணக்கீடு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
காலையில் முன்னதாக, ஒரு பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்வு “ போதைபொருள் முறைகேடான பயன்பாட்டுக்கெதிரான ஓட்டம்” இந்தியா கேட் அறுகோண புல்வெளி, புது டெல்லி 4000 பேர் கலந்துகொண்ட நிகழ்வாகக் கூட நடத்தப்பட்டது. சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கள் அமைச்சர் திரு தாவர்சந்த் ஜெஹிலாட் அந்த ஒரு கிலோமீட்டர் ஓட்டத்தை கொடியசைத்து துவக்கினார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கள் துறை இணை அமைச்சர்கள் திரு கிருஷன் பால் குர்ஜார் மற்றும் திரு விஜய் சாம்ப்லா, மற்றும் டெல்லி துணை முதலமைச்சர் திரு மனிஷ் சிசௌடியா, செயலர் மத்திய சமூக நீதி மற்றும் உரிமை வழங்கல் அமைச்சகம், திருமதி ஜி. லதா கிருஷ்னா ராவ் மற்றும் மற்றைய முதல்நிலையாளர்கள் ஆகியோர் வருகை தந்தனர்.
*****
(Release ID: 1502967)
Visitor Counter : 137