பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
முகநூலில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அளித்த பதில் பற்றிய விளக்கம்
प्रविष्टि तिथि:
30 JUN 2017 2:34PM by PIB Chennai
மத்திய மகளிர் நலம் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி மேனகா சஞ்சய் காந்தி, இணையதளம் மூலம் நாட்டு மக்களுடன் தொடர்புகொள்ள, 2017 ஜூன் 29 அன்று, முகநூலில் நேருக்கு நேர் உரையாடலில் பங்கேற்றார். இதில் ஏறத்தாழ இரண்டு லட்சம் பேர் பங்கேற்றனர். 700 க்கு மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.
உரையாடலின் போது ஒரு முகநூல் பயனர் ஒருவர் கேட்ட கேள்வி
கேள்வி: ஆண்களின் தற்கொலை விகிதம் அதிகரித்து வருவதைக் குறைக்க நமது அரசு என்ன செய்கிறது.? மகளிரைப் பாதுகாக்கிற ஆண்களுக்கு எதிரான, ஒருபாலினம் சார்ந்த சட்டங்கள் காரணமாகவே அதிகத் தற்கொலைகள் நிகழ்கின்றன.
இக்கேள்விக்கு அமைச்சர் மேனகா காந்தி அளித்த பதில்:
”எந்த ஆண்கள் அப்படித் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்? தற்கொலை செய்து கொள்வதை விடுத்து, வேறு வகையில் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியாதா? - அப்படி எந்த ஒருவரும் தற்கொலை செய்து கொண்டதாக ஒரே ஒரு சம்பவம் கூட நான் கேள்விப்பட்டதோ படித்ததோ இல்லை.”
ஆனால் ஊடகச்செய்தி அறிக்கைகள் கேள்வி என்ன என்பதைக் கூறாமலே இந்த விளக்கத்தைத் திரித்துக் கூறியுள்ளன. ஒரு பாலினம் சார்ந்த சட்டங்கள் காரணமாகவே தற்கொலைகள் அதிகம் நிகழ்கின்றன என்பதே கேள்வி.
எனினும் அமைச்சரின் பதிலுரை துரதிர்ஷ்ட வசமாக, நிகழ்வுக்கு சம்பந்தமில்லாமல் திரித்து வழங்கப்பட்டுள்ளது. மத்திய மகளிர் நலம் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகமும், துறை சார்ந்த அமைச்சரும் நாட்டு மக்கள் அனைவருக்கும் சம உரிமைகள் வழங்கப்படுவதில் அதிக அக்கறை கொண்டு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
******
(रिलीज़ आईडी: 1502966)
आगंतुक पटल : 111
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English