கலாசாரத்துறை அமைச்சகம்

சாகித்திய அகாதெமி, யுவ புரஸ்கார், 2018 விருதுக்காக பதிப்பாளர்கள் மற்றும் இளம் இந்திய எழுத்தாளர்களிடமிருந்து புத்தகங்களை வரவேற்கிறது

Posted On: 29 JUN 2017 4:50PM by PIB Chennai

சாகித்திய அகாதெமி, யுவ புரஸ்கார், 2018 விருதுக்காக பதிப்பாளர்கள், 35 வயது மற்றும் அதற்குட்பட்ட இளம் இந்திய எழுத்தாளர்களிடமிருந்து அகாதெமியால் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளிலும் புத்தகங்களை வரவேற்கிறது. விண்ணப்பிக்கும் படைப்பாளர் ஜனவரி 1, 2017 அன்று 35 அல்லது அதற்குட்பட்ட வயதினராக இருத்தல் வேண்டும். விண்ணப்பம் வழங்க இறுதி நாள் ஆகஸ்டு 16, 2017. பிறந்த தேதி சான்றிதழுடன் புத்தகங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிப்பது தொடர்பாக மேலும் விவரங்களை சாகித்திய அகாதெமியின் இணையதளத்தில் (http://sahitya-akademi.gov.in) பெறலாம்.

சாகித்திய அகாதெமி, இந்திய மொழிகளில் எழுதும் 35 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க யுவ புரஸ்கார் விருதினை 2011ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது . அப்போதிருந்து ஒவ்வொரு வருடமும் அகாதெமியால் அங்கீகரிக்கப்பட்ட அசாமீஸ், பெங்காலி, போடோ, டோக்ரி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மைதிலி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, ராஜஸ்தானி, சந்தாலி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய இந்திய மொழிகளில் இளம் எழுத்தாளர்களால் படைக்கப்பட்ட சிறந்த புத்தகங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஐம்பதாயிரம் ரொக்கத்தொகையும், உலோகப்பட்டயமும், சான்றிதழும் கொண்ட இந்த விருதுகள் கௌரவமிக்க விழாவில் வழங்கப்படுகின்றன.



(Release ID: 1502950) Visitor Counter : 73


Read this release in: English