குடியரசுத் தலைவர் செயலகம்

நாட்டுக்கு நான் செய்ததைவிட, அதிகம் பெற்றுக்கொண்டேன் – குடியரசுத் தலைவர்

Posted On: 24 JUL 2017 9:33PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு.முகர்ஜி இன்று (ஜூலை 24, 2017), 13-வது குடியரசுத் தலைவர் பதவி விலகும் விழாவில் பங்கேற்று, குடியரசு மாளிகை குறித்த புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் பேசிய ஜனாதிபதி, ‘இந்திய மக்கள் என் மீது அளவுக்கதிக நம்பிக்கை வைத்து பொறுப்பை ஒப்படைத்தார்கள். அவர்களுடைய கருணை, பாசத்துக்கு நான் கட்டுப்பட்டுள்ளேன்என்று தெரிவித்தவர், ‘இந்த நாட்டுக்கு நான் செய்ததைவிட, பெற்றுக்கொண்டது மிக அதிகம்என்றும் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் திரு.ராம் நாத் கோவிந்த் அவர்களை வாழ்த்தி வரவேற்ற குடியரசுத் தலைவர், வரும் ஆண்டுகளில் வெற்றியும் சந்தோஷமும் கிடைக்கட்டும் என்று வாழ்த்தினார்.

குடியரசுத் தலைவர் மாளிகையை, மகிழ்ச்சியும் மனிதாபிமானமும் கொண்ட இடமாக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டதாக தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை அறிந்துகொண்டதாக தெரிவித்தார். கல்லூரி, பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவார்ந்த இளைஞர்கள், விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள், அறிஞர்கள், நீதிபதிகள், ஆசிரியர்கள், கலைஞர்கள் மற்றும் தலைவர்களிடம் மேற்கொண்ட உரையாடல்கள் மிகுந்த ஊக்கம் அளித்தது என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

இன்று குடியரசுத் தலைவருக்கு, ‘தி இன்னோவேசன் பிரசிடென்ட்என்ற புத்தகத்தை இந்திய குடியரசு துணைத் தலைவர் முகம்மது ஹமீத் அன்சாரியும், ‘தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத்தலைவர் உரை (5-ம் பாகம்)’  புத்தகத்தை பிரதம மந்திரி திரு.நரேந்திரமோடியும் வழங்கினார்கள்.

குடியரசுத் தலைவரின் கூடுதல் செயலாளர் டாக்டர் தாமஸ் மாத்தேவ், ‘ஜனாதிபதி இல்லம் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தேர்ந்தெடுக்கப்பட்ட அறிக்கைகள்: முகர்ஜி 2012 – 2017 ஆண்டுஎன்ற அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் வழங்கினார். ‘குடியரசுத் தலைவர் மாளிகைத் தாவரங்களின் நலம் மற்றும் வயது கணக்கீடுஅறிக்கையை வனத்துறை ஆய்வு நிறுவன இயக்குனர் டாக்டர் சவீதா வெளியிட்டார். ‘விரிவான பாதுகாப்பு மேலாண்மை திட்டம் 2’ அறிக்கையை இந்தியன் நேஷனல் டிரஸ்ட் ஃபார் ஆர்ட் அன்ட் கல்ச்சுரல் ஹெரிடேஜை சேர்ந்த டாக்டர் .ஜி.கே.மேனன் மற்றும் செல்வி ஸ்வப்னா லிட்டுல் ஆகியோர் வெளியிட்டனர்.

புத்தக வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து நடைபெற்ற கலாச்சார விழா மற்றும் இரவு உணவில் தேர்வு செய்யப்பட்ட புதிய குடியரசுத் தலைவர், இந்தியக் குடியரசு துணைத் தலைவர், பிரதம மந்திரி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பல முக்கியப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர். புத்தகம் மற்றும் அறிக்கைகளின் சாரம்சம் வெளியிடப்பட்டது.

தி இன்னோவேசன் பிரசிடென்ட்புத்தகமானது, பொதுத் திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு இடையில் நெருக்கமான ஒருங்கிணைப்பு கொண்டுவருவதில் குடியரசுத் தலைவர் மேற்கொண்ட முயற்சிகளைக் குறிப்பிடுகிறது. நாட்டின் பல்வேறு துறைகளில் பல்வேறு மட்டங்களில் புதுமை படைக்கப்பட்ட காலங்களில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைகளும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. மற்ற நாடுகளில் இருந்து கற்றுக்கொண்ட புத்தாக்கங்கள், பல்வேறு பல்கலைக்கழக புத்தாக்க மையங்கள் உருவாக்கிய புதுமைகளும் இடம் பெற்றுள்ளன. புத்தாக்க மையங்கள், அடித்தட்டு கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் குறித்த தகவல்களும் இடம் பிடித்துள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத்தலைவரின் உரை – 5-ம் பாகம்புத்தகமானது நான்கு மற்றும் ஐந்தாம் ஆண்டுகளில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி நிகழ்த்திய முக்கியமான உரைகள் அடங்கிய தொகுப்புகள் ஆகும். முதல் மூன்று பாகங்களும்குடியரசுத் தலைவரின் முதல் மூன்று ஆண்டு உரைகளின் தொகுப்பாக ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் புத்தகத்தில் உரை ஐந்து பகுதியாக வெளியிடப்பட்டுள்ளது.

  1. நாடு, நாடாளுமன்றம், அரசியலமைப்பு குழுக்கள் மற்றும் ராணுவப் படை
  2. முக்கிய பிரமுகர்களை சந்தித்த நாள், நிகழ்வுகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்.
  3. வெளிநாட்டு பயணம் மற்றும் விருந்தினர் உரை
  4. விருது விழாக்கள்
  5. கல்வி மற்றும் மாநாடுகள்.

குடியரசுத் தலைவரின் நான்கு உரைத் தொகுப்புகளும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வெளியீடுகள் பிரிவு மூலம் வெளியிடப் பட்டுள்ளன.

ஜனாதிபதி இல்லம் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தேர்ந்தெடுக்கப்பட்ட அறிக்கைகள்: முகர்ஜி 2012 – 2017 ஆண்டுஎன்ற அறிக்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் குடியரசுத் தலைவரின் செயலகம் மேற்கொண்ட மேம்பாட்டு நடவடிக்கைகள் அடங்கியுள்ளன. 13-வது குடியரசுத் தலைவர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் இதில் இடம் பெற்றுளன. குடியரசுத் தலைவர் மாளிகையில் இருக்கும், ‘ஆஸ்கியானாவில் (ஜனாதிபதியின் மாற்றுக்குடியிருப்பு அமைந்துள்ள டெஹ்ராடன்)   மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு மற்றும் மாற்றி அமைக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்கள் குறித்து தெளிவான தகவல் தருகிறது.

டெஹ்ராடன், வனத்துறை ஆய்வு நிறுவனம் வெளியிட்ட, ‘குடியரசுத் தலைவர் மாளிகைத் தாவரங்களின் நலம் மற்றும் வயது கணக்கீடுஅறிக்கை ஜூலை 2016 முதல் ஜுன் 2017 வரை முக்கியமான மரங்களின் நோய்க் குறியியல் மற்றும் புவியியல் சார் பிரச்னைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. மேலும் மரங்களுக்கு ஏற்படும் மனம் சார்ந்த அழுத்தம் காரணமாக ஏற்படும் மந்தத்தன்மையும் ஆராயப்பட்டன.

இந்தியன் நேஷனல் டிரஸ்ட் ஃபார் ஆர்ட் அன்ட் கல்ச்சுரல் ஹெரிடேஜ் அமைப்பு வெளியிட்ட விரிவான பாதுகாப்பு மேலாண்மை திட்டம் 2’ அறிக்கையில், குடியரசுத்தலைவர் மாளிகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய எதிர்கால மேலாண்மை குறித்த ஆலோசனை இடம் பெற்றுள்ளது. குடியரசுத்தலைவர் மாளிகையின் பாரம்பரியம் மற்றும் மரபுகளை மாற்றிவிடாமல் குடியரசுத் தலைவரின் குடியிருப்பு மற்றும் அலுவலகத்தில் கட்டியெழுப்பவேண்டிய மாற்றங்கள் குறித்து இந்த அறிக்கை விளக்குகிறது.



(Release ID: 1502945) Visitor Counter : 116


Read this release in: English