வெளியுறவுத்துறை அமைச்சகம்
இலங்கை சிறையில் மீனவர்கள்
Posted On:
20 JUL 2017 5:54PM by PIB Chennai
இந்திய மீனவர்கள் 81 பேர், ஜூலை 17, 2017 நிலவரப்படி இலங்கை சிறையில் இருக்கிறார்கள்.
இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கும், அவர்கள் நாடு திரும்புவதற்குமான தொடர் நடவடிக்கைகளை அரசு செய்துவருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களுக்குத் தேவையான மனிதாபிமான மற்றும் சட்ட உதவிகளை கொழும்பு நகரிலுள்ள இந்திய தூதரகம் செய்துதருகிறது. தூதரகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கை காரணமாக இலங்கையில் இருந்து 2017-ம் ஆண்டு மட்டும் 174 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மீனவர்களின் பிரச்னையை இந்திய அரசு தலையாய பிரச்னையாக கருதுகிறது. அதனால் இந்திய பிரதமர் இலங்கைக்கு மே, 2017-ல் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இலங்கை அதிபர் மற்றும் பிரதம மந்திரியிடம் இதுகுறித்துப் பேசினார். மேலும் ஏப்ரல் 2017-ல் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இலங்கை பிரதம மந்திரியிடம் இந்தப் பிரச்னையை எழுப்பினார்கள். இதனைத் தொடர்ந்து ஜூன் 2017-ல் இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் இந்தியாவுக்கு வந்தபோதும் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து நவம்பர் 2016-ல் வெளியுறவு மற்றும் மீன்வளத் துறை அமைச்சர்கள் 2 + 2 என்ற ரீதியில் கலந்துகொண்டு திட்டமிட்டதில், இணை பணிக் குழு (ஜெ.டபிள்யூ.ஜி) மூலம் மீனவர்களின் பிரச்னையை தீர்க்க முடிவெடுக்கப்பட்டது.. இதன்படி மீன் வளத்துறையின் இரு நாட்டு அமைச்சர்களும் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும் சந்தித்து, குழுவின் நடத்தை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை இணைப் பணிக் குழு இரண்டுகட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. இரண்டாவது இணைப் பணிக்குழு கூட்டம் ஏப்ரல் 7, 2017 அன்று கொழும்பில் கூடியபோது, மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வகையில், நம்பிக்கை கட்டமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நமது மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன் பிடிப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு அரசு ஊக்கம் அளிக்கிறது. ஆழ்கடல் மீன் பிடிப்பை ஊக்குவிப்பதற்கு இந்த நிதியாண்டில் மட்டும் ரூ.200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு மீனவர்களுக்கு வழங்கப்படுகிறது. மீனவர்களுக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சியின் ஒரு பகுதியாக ஜனவரி 2017-ல் கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதுவரை மூன்று மீனவ குழுக்களுக்கு ஆழ் கடல் மீன் பிடிப்பு, மீன்களை பதப்படுத்துதல், நீண்ட நாளைக்குத் தயாராதல் மற்றும் தாக்குப் பிடித்தல் போன்ற பயிற்சிகள் தரப்பட்டன. மேலும் சில முன்னேற்ற நடவடிக்கையாக தமிழ்நாடு மாநில அரசு உதவியுடன் மீன் பிடித் துறைமுகங்கள் குந்துக்கால், மூக்கையூர் ஆகிய இடங்களில் உருவாக்கும் பணி நடந்துவருகிறது.
இந்தத் தகவலை மாநிலங்களவையில், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் (ஓய்வு), எழுத்துப்பூர்வமாக இன்று தெரிவித்தார்.
(Release ID: 1502942)
Visitor Counter : 141