திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
தொழில் கல்வி மற்றும் திறன் மேம்பாடு துறைகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து இந்தியா பெலாரஸ் விவாதம்
Posted On:
11 SEP 2017 7:26PM by PIB Chennai
பெலாரஸ் நாட்டின் கல்வி துறை அமைச்சர் திரு. கர்ப்பின்கா இஹார் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதானை இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது தொழில் கல்வி மற்றும் திறன் மேம்பாடு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சனைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். தொழில் கல்வி குறிப்பாக உற்பத்தி துறையில் தனது நாட்டின் நிபுணத்துவத்தை பற்றி பெலாரஸ் நாட்டு அமைச்சர் எடுத்துக்கூறினார். மேலும், மின்னணு வாகனங்கள் பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பெலாரஸ்ஸில் நிறுவப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
திறன் பயிற்சியாளர்கள் அமைப்பை ஏற்படுத்தும் முயற்சிக்காக இந்தியாவில் உள்ள 50 நிறுவனங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு துறை அமைச்சர் எடுத்துரைத்தார். இந்த நிறுவனங்களை உலக அளவில் சிறப்பு வாய்ந்த மையங்களாக மாற்ற பெலாரஸின் உதவி விலைமதிப்பற்றதாக இருக்கும். தொழில் கல்வி மற்றும் திறன் மேம்பாடு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவினை மேலும் வலுபடுத்த உறுதிபூண்டு இந்த சந்திப்பு நிறைவு பெற்றது.
****
/ஸ்ரீவி
(Release ID: 1502931)
Visitor Counter : 182