உள்துறை அமைச்சகம்
பத்மா விருதுகளுக்கு பரிந்துரை செய்ய வரும் 15-ஆம் தேதி கடைசி நாள்
Posted On:
11 SEP 2017 4:09PM by PIB Chennai
2018 ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை வரும் செப்டம்பர் 15, 2017-க்குள் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பத்ம விருதுயகளுக்கு பரிந்துரை செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் www.padmaawards.gov.in என்ற வலைதளத்தை துவங்கியுள்ளது. இந்த வலைதளத்தில் மட்டுமே விருதுகளுக்கான பரிந்துரைகளை செய்ய வேண்டும். இணையதளம் மூலம் விருந்துகளுக்கான பரிந்துரைகள் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டதன் மூலம் அதிகபடியான மக்கள் இதில் பங்கேற்க முடியும். இந்த இணையதளம் மூலம் வரும் வெள்ளிக்கிழமை (15.09.2017) நள்ளிரவு வரை விருதுகளுக்கான பரிந்துரைகளை பொது மக்கள் மேற்கொள்ளலாம்.
செப்டம்பர் 15, 2017க்கு மேல் செய்யப்படும் பரிந்துரைகள் எக்காரனத்திற்காகவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
******
(Release ID: 1502930)
Visitor Counter : 111