சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணவழி வசதிகளை மேம்படுத்துதல்

Posted On: 27 JUL 2017 6:12PM by PIB Chennai

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோருக்கான வசதிகளை ஏற்படுத்தித்தர 183 இடங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) கண்டறிந்துள்ளது. இந்த இடங்களில் கார்கள், பஸ் மற்றும் லாரிகள் நிறுத்த தனித்தனி இடங்கள், உணவகங்கள், குறைந்த விலையில் உணவு கிடைக்கும் டாபாக்கள், பொதுதொலைபேசி வசதி, ஏடிஎம்எரிபொருள் நிரப்பும் நிலையம், சிறிய பழுதுகளை சரிசெய்து கொள்ள ஏற்பாடுகள்,  ஓய்வு அறைகள், சுத்தமான கழிப்பறைகள், அந்த இடங்களை ரசிக்கும் முறையில் அமைத்தல், சிறுதேவைகளுக்கான பொருட்களை வாங்குவதற்கான கியோஸ்க்குகள் மற்றும்  அரசாங்கத்தின் நலத்திட்டங்களை முறையாக, திட்டமிட்ட முறையில் விளம்பரப்படுத்துவதற்கான இடம் போன்ற வசதிகள், இந்த இடைத்தங்கல் இடங்களில் ஏற்பாடு செய்யப்படும். பயணவழி வசதிகள், இப்போது நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு பகுதியாக அமைந்துவிட்டன.

 

               அடையாளம் காணப்பட்டுள்ள 183  இடங்களில் 63 இடங்களுக்கான நிலம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வசம் உள்ளது. 16 இடங்களுக்கு ஏல முறையில் விருப்பங்கள், 2017 ஆகஸ்ட் மாதம்  இறுதிக்குள் அளித்திட கோரப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்களுக்கும் விரைவில் கோரப்படும்.  இந்த திட்டத்தை முழுமையாக அமூல்படுத்துவதில் உதவுவதற்கும், குறிப்பிட்ட இந்த வசதிகளை மேம்படுத்துவதிலும் செயல்படுத்துவதிலும், இத்தகைய விஷயங்களில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை ஈடுபடுத்த திட்ட மேலாண்மை ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 
       தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள அமைச்சகம் அனுமதி அளிக்கிறது. இத்தகைய அனுமதி பெறும்போது கையொப்பமிடப்பட்ட  ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக, கழிப்பறை மற்றும் குடிநீர் வசதியை  பயனார்களுக்கு வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில், தைப்போன்ற முறையில் அளிக்கப்படும் பயணவழி வசதிகளுக்கென்று தனியா நிதி ஒதிக்கீடு செய்யப்படவில்லை.

 

மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில்,  சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய இணை அமைச்சர் திரு பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் இந்த விவரங்களை  தெரிவித்தார்.


*******

 

 



(Release ID: 1502699) Visitor Counter : 69


Read this release in: English