இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

உள்நாட்டு விளையாட்டுகள் ஊக்குவிப்பு

Posted On: 20 JUL 2017 3:04PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை (தனிப்பொறுப்பு) அமைச்சர் திரு. விஜய் கோயல் இன்று மக்களவையில், ‘உள்நாட்டு விளையாட்டுகளான கபடி, கோகோ, பால் பேட்மின்டன், மல்லகம்ப், அட்ய பட்யா, ஸ்குயாய், களரிபயிற்று போன்ற உள்நாட்டு விளையாட்டுகளுக்கு தேசிய விளையாட்டு கூட்டமைப்பு உதவித் திட்டம் மூலம் ஆதரவளிப்பதாக தெரிவித்தார். மேலும், ‘கெலோ இந்தியாதிட்டத்தின் கீழ், உள்நாட்டு விளையாட்டுகளின் தேவைக்கேற்ப நிதி உதவி வழங்கப்பட்டு, அவற்றை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.  இந்தத் திட்டத்தின் மூலம் விளையாட்டுப் போட்டிகள் இரண்டு வயதுக் குழுக்களுக்கு இடையே நடத்தப்படுகிறது.

  1. 14 வயதுக்குட்பட்டவர்கள்
  2. 17 வயதுக்கு உட்பட்டவர்

என்ற வகையில் இந்தியா முழுவதும் அதிகபட்ச ஆண், பெண் பங்களிப்புடன் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. இதில் பிராந்திய விளையாட்டு/உள்நாட்டு விளையாட்டு/உள்ளூர் பிரபல விளையாட்டு போன்றவற்றை தேர்ந்தெடுத்து நடத்துவதற்கு மாநிலங்களுக்கு இந்தத் திட்டம் அதிகாரமளிக்கிறது.

அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்...) திட்டமான தேசிய விளையாட்டுத் திறன் போட்டி (என்.எஸ்.டி.சி.) மூலம் உள்நாட்டு விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைகளுக்கு (.ஜி.எம்..) மறுமலர்ச்சி ஏற்படுத்தவும், விளையாட்டுகளை பிரபலப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதற்காக 10 பள்ளிகளை தத்தெடுத்திருக்கும் எஸ்..., அங்கு 159 பயிற்சியாளர்களுக்கு (78 ஆண்கள் + 81 பெண்கள்) தேவையான பயிற்சி அளிப்பதுடன், இந்தத் திட்டத்தின்படி மாதம் தலா ரூ.3,000 வீதம் 10 மாதங்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது. மேலும் விளையாட்டு சாதனம் வாங்குவதற்கு 1,500 ரூபாயும், ஒவ்வொரு நபருக்கும் ரூ.150/- வீதம் தனிநபர் காப்பீடும் செய்யப்படுகிறது.

ஆண்டுதோறும் பள்ளிக்கு ரூ.20 ஆயிரத்துக்கு விளையாட்டு சாதனங்கள் வாங்குவதற்கும், போட்டிகள் வைத்து திறமைசாலிகளைக் கண்டறிவதற்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது. .ஜி.எம்.. திட்டத்தில் வில்வித்தை, கட்கா, கபடி, களறிபயிற்று, முட்னா, தாங்க்-டா, சிலம்பம், கோம்லாய்னா மற்றும் மல்லகம்ப் போன்ற விளையாட்டுகள் இடம்பெறுகின்றன.

 


*******

 

 



(Release ID: 1502698) Visitor Counter : 81


Read this release in: English