நிதி அமைச்சகம்
ஐந்து நட்சத்திர விடுதி உள்ளிட்ட, எந்த தங்கும் விடுதி என்றாலும் ஒரு நாளுக்கான அறை கட்டணம் ரூ.7,500/- க்கு குறைவாக நிர்ணயிக்கப்படும் பட்சத்தில், 18% ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) வரம்புக்குள் வரும். விடுதிகளின் நட்சத்திர அந்தஸ்தைப் பொறுத்து ஜி.எஸ்.டி. வரம்பு நிர்ணயிக்கப்பட மாட்டாது என அரசு விளக்கம் அளித்துள்ளது.
Posted On:
18 JUL 2017 1:48PM by PIB Chennai
ஐந்து நட்சத்திர விடுதிகளில் அறைக்கான கட்டணம் குறைவாக இருக்கும்போதும் 28% ஜி.எஸ்.டி. செலுத்தவேண்டுமா என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.
இந்த சந்தேகத்தைத் தெளிவுபடுத்தும் வகையில், .’’5 நட்சத்திர விடுதி உள்ளிட்ட, எந்த விடுதியாக இருந்தாலும், அறைக் கட்டணம் ஒரு நாளைக்கு 7,500 ரூபாய்க்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் கட்டணத்துடன் 18% ஜி.எஸ்.டி. வரி செலுத்தவேண்டும். நட்சத்திர அந்தஸ்தைப் பொறுத்து ஜி.எஸ்.டி. வரம்பு நிர்ணயிப்பது பொருத்தமற்றது’’ என அரசு விளக்கம் அளித்துள்ளது..
*******
(Release ID: 1502697)
Visitor Counter : 79