மத்திய அமைச்சரவை

இந்தியா மற்றும் ஜப்பான் இடையே பட்டுப்புழு மற்றும் பட்டு தொழிலில் கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சரவையில் தகவல் அளிப்பு

Posted On: 12 SEP 2017 5:04PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவின் மத்திய பட்டு வாரியத்துக்கும் (CSB), ஜப்பானின் தேசிய விவசாய உயிரியல் அறிவியல் கல்வி நிலையத்துக்கும் (NIAS) இடையில், பட்டுப் புழு மற்றும் பட்டுத் தொழிலில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்வது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) குறித்த விவரங்கள் தெவிக்கப்பட்டன.

இந்திய பருவநிலைக்கு ஏற்ற இரண்டு தலைமுறைகளுக்கான இனப்பெருக்க வாய்ப்பு மிகுந்த பட்டுப் புழுக்களை உருவாக்குவதற்கான கூட்டு ஆராய்ச்சி தொடங்குவது குறித்து CSB மற்றும் NIAS இடையில் 11.11.2016ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயல்பு கொண்டது. இது இனப்பெருக்க வாய்ப்பு அதிகம் உள்ள பட்டுப்புழுக்களை உருவாக்க உதவியாக இருக்கும். இந்திய பட்டுத் தொழில் உற்பத்தி பெருகவும், அதன் தரம் மேம்படவும் இது உதவிகரமாக இருந்து, பட்டு மற்றும் பட்டுப் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்க வகை செய்வதாக இருக்கும்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இந்திய ஜவுளி & ஆடை தொழில் துறை உலகத் தரமான பட்டு மற்றும் பட்டுப் பொருள் உற்பத்தி செய்ய முடியும். தரமும் உற்பத்தியும் மேம்படுவதால் ஒட்டுமொத்தமாக பட்டுப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கும்.

****



(Release ID: 1502582) Visitor Counter : 137


Read this release in: English